ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சூரியகாந்தி எண்ணெயை கூட சருமப்பராமரிப்பிற்கு பயன்படுத்தலாமா..? உங்களுக்கான டிப்ஸ்

சூரியகாந்தி எண்ணெயை கூட சருமப்பராமரிப்பிற்கு பயன்படுத்தலாமா..? உங்களுக்கான டிப்ஸ்

சூரியகாந்தி எண்ணெய்

சூரியகாந்தி எண்ணெய்

சருமம் நிறம் பாதிக்கப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம், மெலனின் உற்பத்தியை தடுத்து சருமப் பொலிவை அதிகரிக்கவும், ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்கவும் உதவுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களது சமையலுக்கு பயன்படுத்தும் சூரிய காந்தி எண்ணெய் ஆனது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல சரும பொலிவையும் பாதுக்காகக்கூடியது என்பது உங்களுக்குத் தெரியுமா?. சரும பிரச்சனைகளுக்கும், ஆரோக்கியத்திற்கும் சூரிய காந்தி எண்ணெய் என்னென்ன மாதிரியான தீர்வுகளை வழங்குகிறது என்பது தொடர்பாக விரிவாக அறிந்து கொள்ளலாம்...

1. டி-டான்/ இறந்த செல்களை நீக்கும்:

சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் சருமத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கக்கூடியதாகும். இதனால் சருமம் நிறம் பாதிக்கப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம், மெலனின் உற்பத்தியை தடுத்து சருமப் பொலிவை அதிகரிக்கவும், ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்கவும் உதவுகிறது. இந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ஈ, புற ஊதாக்கதிர் வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

டிப்ஸ் 1: சூரியகாந்தி எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சூரிய கதிர்வீச்சால் டான் ஆன சருமம், பளீச் லுக்கிற்கு மாறும்.

2. அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்றது:

சூரியகாந்தி எண்ணெயில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் செறிவூட்டப்பட்டுள்ளன. எனவே இந்த ஆயிலை சருமத்தின் மீது பயன்படுத்துவது, முகப்பரு, சுருக்கங்கள், கோடுகள் மற்றும் வெள்ளை கரும்புள்ளிகள் உள்ளிட்ட அனைத்து சரும பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது. சூரியகாந்தி எண்ணெயில் பிசுபிசுப்புத் தன்மை குறைவாக உள்ளதால், எளிதில் ஊடுருவி சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்கிறது.

வாய் துர்நாற்றம், பாக்டீரியாக்களை நீக்க உதவும் தேங்காய் எண்ணெய்..? எப்படி , எப்போது பயன்படுத்த வேண்டும்..?

டிப்ஸ் 2:

சூரியகாந்தி எண்ணெய்யை, 2 அல்லது 4 சொட்டு லாவெண்டர் ஆயில் அல்லது லெமன் ஆயிலுடன் கலந்து பயன்படுத்தினால், சருமத்திற்கு புத்துணர்ச்சியும், மென்மையும் கிடைக்கும். சருமத்தின் மீது லேசாக மசாஜ் செய்து பின்னர், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

3. காயம் குணமாகும்:

சூரியகாந்தி எண்ணெயில் உள்ள இயற்கையான கரிம பொருட்கள் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. இதில் உள்ள லினோலிக் அமிலம், புதிய இரத்த அணுக்களை உருவாக்குவதன் மூலம் காயத்தை குணப்படுத்தும் செயல்முறையை வேகமாக்குகிறது.

4. நேச்சுரல் மாய்ஸ்சுரைசர்:

சூரியகாந்தி எண்ணெய் இயற்கையாகவே சரும சுத்திகரிப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே ரசாயனம் கலந்த ஃபேஸ்பேக், ஃபேஸ் க்ரீம், ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றிற்கு பதிலாக சூரியகாந்தி எண்ணெய்யை பயன்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பையும், நேச்சுரலான மாய்ஸ்சுரைசிங்கையும் தரும்.

டிப்ஸ் 3: காலையிலும் மாலையிலும் சிறிதளவு சூரிய காந்தி எண்ணெய்யைக் கொண்டு ஆயில் மசாஜ் செய்வது, நாளை புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்க உதவும்.

இலவங்கப்பட்டை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துமா..? நிபுணர்கள் கருத்து

5. மென்மையான சருமம்:

உணர்திறன் மிக்க அல்லது வறட்சியான சருமம் பெரும்பாலும் சிவந்து போனது போல் காட்சியளிக்கும், அப்படிப்பட்ட சருமத்தைக் கொண்டவர்கள் சூரிய காந்தி எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இது சருமத்தை அமைதிப்படுத்தி, மென்மையாக்க உதவுகிறது.

டிப்ஸ் 4 : இயற்கையான மற்றும் கோல்ட் பிரஸ்டு சூரிய காந்தி எண்ணெய்யை சருமத்தின் மீது பயன்படுத்துவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள பலன்களை பெற உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Skincare, Sunflower Seeds