ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வேக்சிங் செய்ய போறீங்களா? முன்னும் பின்னும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்!

வேக்சிங் செய்ய போறீங்களா? முன்னும் பின்னும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்!

வேக்சிங்

வேக்சிங்

வேக்சிங் செய்த பின் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் வேக்சிங் செய்த இடத்தை வழுவழுப்பாக்கி சருமத்தை புத்துணர்ச்சியோடு வைக்க உதவுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைய நிலையில் வேக்சிங் செய்வது என்பது மிகவும் பிரபலமான ஒரு பழக்கமாகி வருகிறது. உடலில் உள்ள ரோமங்களை முழுவதுமாக நீக்கி மிகவும் வழுவழுப்பான பளபளப்பான சருமத்தை வேக்சிங் மூலம் நாம் பெற முடியும். உங்களது உடலின் குறிப்பிட்ட சில பகுதிகளை வேக்சிங் செய்வதாக இருந்தாலும் கூட, அதற்கு மிக அதிகமான அக்கறை செலுத்தி பாதுகாப்பாக செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது.

முக்கியமாக நீங்கள் வேக்சிங் செய்வதற்கு முன்பு உங்களது சருமத்தை வேக்சிங் செய்வதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. இதற்காக ப்ரீ வேக்சிங் மற்றும் போஸ்ட் வேக்சிங் என பல்வேறு வித வேக்சிங் கேர் ப்ராடக்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. வேக்சிங் செய்வதற்கு முன் ஜெல்லை பயன்படுத்துவதும், வேக்சிங் செய்த பின் எண்ணெய் பயன்படுத்தி சருமத்தை மிருதுவாக மாற்றுவது என பல்வேறுவது பயன்பாடுகள் இவற்றின் மூலம் கிடைக்கின்றன.

மற்றொரு விதத்தில் இவற்றை பயன்படுத்துவதன் மூலம் மிகவும் சிறப்பான முடிவுகள் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த சில வாரங்களில் கிடைத்ததாக பலர் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பலருக்கும் இந்த ப்ரீ வேக்சிங் மற்றும் போஸ்ட் வேக்சிங் ப்ரடக்டுகள் பற்றிய பல சந்தேகங்கள் இருந்த வண்ணம் உள்ளன. எனவே இந்த வேக்சிங் ப்ராடக்டுகள் எவ்வாறு நமக்கு பயன்படும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஏன் வேக்சிங் கேர் ப்ராடக்டுகளை பயன்படுத்த வேண்டும்?

வேக்சிங் செய்யும் முன் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் : 

ப்ரீ வேக்சிங் தயாரிப்புகள் பயன்படுத்துவதன் மூலம் வேக்சிங் செய்வதற்கு முன்பு சருமத்தில் உள்ள மாசுகளையும் நுண்கிருமிகளையும், வியர்வை மற்றும் தூசுக்கள் ஆகியவற்றை நீக்குவதற்கு உதவுகிறது. இதன் காரணமாக நோய் தொற்றுகள் எதுவும் ஏற்படாத படி நம்மை பாதுகாக்கிறது.

வேக்சிங் செய்வதற்கு ஏற்ற வகையில் நமது சருமம் மற்றும் முடியின் வேர்க்கால்களை தயார்படுத்துகிறது. இதன் காரணமாக வேக்சிங் செய்த பிறகு வழக்கமாக உண்டாகும் அரிப்பு, எரிச்சல் ஆகவே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகிறது. வேக்சிங் செய்யும் போது ஏற்படும் வலியை குறைக்கும் வேலையை செய்கிறது.

வேக்சிங் செய்த பின் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் : 

இவை வேக்சிங் செய்த இடத்தை வழவழப்பாக்கி சருமத்தை புத்துணர்ச்சியோடு வைக்க உதவுகிறது. வேக்சிங் செய்த பிறகும் சுருமத்தில் அதன் சில நுண் துகள்கள் ஒட்டி இருக்கக்கூடும். அவற்றை முழுமையாக நம் சருமத்திலிருந்து நீக்குவதற்கு உதவுகிறது. இதன் மூலம் நம் சருமம் புத்துணர்ச்சியுடனும் எந்தவித அரிப்பு எரிச்சல் ஆகியவை இல்லாமலும் மிகவும் அழகாக பளபளவென்று காட்சியளிக்க உதவுகிறது.

Also Read : முகத்தில் வேக்சிங் செய்வதால் ஏற்படும் முக்கிய பாதிப்புகள் என்னென்ன..? தெரிந்து கொள்ளுங்கள்

மேலே கூறிய இந்த வேக்சிங் தயாரிப்புகள் இன்றைக்கு பலரும் மிகவும் விரும்பி பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் எதை தேர்வு செய்வது என்பது அவரவர் விருப்பமாகவும். சந்தையில் கிடைக்கும் பல்வேறு வேக்சிங் ப்ராடக்ட்களில் உங்களுக்கு பிடித்த, உங்களுக்கு ஏற்ற பொருள் எதுவோ அதை தேர்வு செய்து உங்களது வேக்சிங் அனுபவத்தை சிறந்ததாக மாற்றிக் கொள்ளலாம்.

First published:

Tags: Beauty Tips, Skin Care, Waxing