கரும்புள்ளிகளை மாயமாக மறைய செய்யும் கிராம்பு எண்ணெய் பற்றி தெரியுமா?

காட்சி படம்

கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்துவது தெளிவான முகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • Share this:
மோசமான வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவு பழக்கங்களால் நமது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, சரும ஆரோக்கியமும் பாதிப்படைகிறது. இதனால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எண்ணெய் பலகாரங்கள் அதிகம் சாப்பிடுவதும் முகப்பரு வர முக்கிய காரணமாக இருக்கிறது. முகப்பருக்களை தற்காலிகமாக சரி செய்தாலும் கூட, அதனால் உருவாகும் கரும்புள்ளிகள் நமது சருமத்தில் நிரந்தரமாக இருந்து விடுகிறது.

இந்த கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருவை எதிர்த்துப் போராட நாம் பல்வேறு வழிகளை முயற்சி செய்தாலும், ஃபேஸ் வாஷ் மற்றும் கிரீம்கள் போன்ற அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும் இதனால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனால் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை பயன்படுத்தியே நமது சருமத்தை பொலிவாக மாற்ற முடியும் என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். அவற்றில் ஒன்று தான் கிராம்பு எண்ணெய். கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்துவது தெளிவான முகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கிராம்பு எண்ணெய் பயன்படுத்துவதால் உங்கள் சருமத்தில் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் கிராம்பு எண்ணெய் சருமத்தில் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி, சருமத்தின் வயதான தோற்றத்தை குறைக்க உதவுகிறது என அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முகப்பருவை நீக்க : உங்களுக்கு அதிகளவு முகப்பரு இருந்தால் வாரம் மூன்று முறை கிராம்பு எண்ணெய் பயன்படுத்தலாம். இதற்கு கிராம்பு எண்ணெய்யுடன், பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்யை நன்கு கலந்து உங்கள் சருமத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் வாஷ் செய்யவும். பின்னர் உங்கள் வழக்கமான சோப்பு அல்லது பேஸ்வாஷ் கொண்டு சருமத்தை சுத்தம் செய்யவும். முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் அவற்றை வேரிலிருந்து நீக்குகிறது.

Also Read : மழைக்காலத்தில் உங்கள் சருமம் வறண்டு போகாமல் இருக்க இப்படி பராமரியுங்கள்..

கரும்புள்ளிகள் நீங்க : உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க இரண்டு துளி கிராம்பு எண்ணெய்யை எடுத்து உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் வாஷ் செய்து வரவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

சுருக்கமான சருமத்திற்கு : சிலருக்கு இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கம் ஏற்படும். இதனால் வயதான தோற்றம் உண்டாகும். இதற்கு இரண்டு சொட்டு கிராம்பு எண்ணெயை எடுத்து ஐந்து சொட்டு தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும். இந்த கலவையை கொண்டு உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். இப்படி செய்துவர சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவது மட்டுமின்றி, உங்கள் முகத்தை மாசு, அழுக்கு ஆகியவற்றையும் நீக்க உதவுகிறது. மேலும் கிராம்பு எண்ணெய் உங்கள் முகத்திற்கு இயற்கையான பிரகாசத்தை அளிக்கிறது.

மன அழுத்தம் நீங்க : கிராம்பு அற்புதமான நறுமணத்தை கொண்டிருக்கும் சிறந்த பொருள். இது நரம்புகளை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. அரோமோ தெரபியில் கிராம்பு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

Also read : எந்த ஒரு மேக்கப் இல்லாமல் நீங்க அழகா தெரியணுமா ? இதை ஃபாலோ பண்ணுங்க..

தலைவலி நீங்க : சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி கிராம்பு எண்ணெய் ஒற்றைத் தலைவலி பாதிக்கப்படுபவர்களுக்கும் நன்மை பயக்கும். கிராம்பு எண்ணெய்யை வலி உள்ள இடங்களில் தடவி விரைவில் விரைவில் நிவாரணம் பெறலாம்.

பல்வலி : பல்வலி உள்ளவர்கள் பருத்தியில் சிறிது கிராம்பு எண்ணெயை வைத்து உங்கள் பாதிக்கப்பட்ட பற்களுக்கு இடையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் உப்பு தண்ணீரில் வாய் கொப்புளித்து வந்தால் வலி நீங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: