செம்பருத்தியை இப்படியும் பயன்படுத்தலாம்... ஒரு செடி மட்டும் நடுங்க.. கிடைக்கிற பலனை பாருங்க!

உடலிலுள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவும் செம்பருத்தி பூ நல்ல பலன் தரும். 2 அல்லது 3 பூக்களை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

செம்பருத்தியை இப்படியும் பயன்படுத்தலாம்... ஒரு செடி மட்டும் நடுங்க.. கிடைக்கிற பலனை பாருங்க!
hibiscus benefits
  • Share this:
செம்பருத்தி செடியின் வேர், பூ, மொட்டு, இலை, என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்த ஒன்று. செம்பருத்தி செடியின் அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை பயக்கும்.

செம்பருத்தி இலையை பறித்து அரைத்து 5 நிமிடம் தலைமுடியில் ஊறவைத்து குளித்து வர முடி கருமை அடையும்.

செம்பருத்தி பூ இலைகளுடன் மருதாணி இலை, கருவேப்பிலை, வேப்ப இலை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர அதிக உடல் சூடு இருந்தால் குளிர்ச்சி அடையும். தலையில் உள்ள பொடுகு நீங்கும். தலைமுடி கருமை அடையும்.
இதன் இலையை நிழலில் காய வைத்து பொடியாக செய்து வைத்து கொள்ளலாம். வேண்டிய நேரத்தில் தலைக்கு தேய்த்து கொள்ளலாம்.

தினமும் காலையில் செம்பருத்தி இதழ்கள் 6 தின்று வர பெண்களுக்கு வெள்ளைபடுத்தல் குணமாகும். ரத்தம் சுத்தமாகும்.செம்பருத்தி பூவை பறித்து நிலலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவி வர முகம் பளபளக்கும்.செம்பருத்தி பூவை அப்படியே அதன் இதழ்களை உண்பதால், உடம்பில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

உடலிலுள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவும் செம்பருத்தி பூ நல்ல பலன் தரும். 2 அல்லது 3 பூக்களை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.தினசரி 5 செம்பருத்தி இதழ்களை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பேன், பொடுகுத் தொல்லை நீங்கும்.

இதன் மலர்கள் கடவுள் வழிபாட்டிற்கு அதிகம் பயன்படுத்த படுகின்றது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading