Home /News /lifestyle /

இந்த தீபாவளிக்கு ஒரே நாளில் அழகை மீட்டெடுக்க வேண்டுமா..? இந்த சாக்லெட் மாஸ்க் டிரை பண்ணுங்க...

இந்த தீபாவளிக்கு ஒரே நாளில் அழகை மீட்டெடுக்க வேண்டுமா..? இந்த சாக்லெட் மாஸ்க் டிரை பண்ணுங்க...

சால்கெட் மாஸ்க்

சால்கெட் மாஸ்க்

கோகோ பவுடரில் உள்ள ’கஃபைன் ’ (caffeine ) சருமத்தின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. முகத்தின் நிற மாற்றத்தை சரி செய்து சீரான முக அழகை அளிக்கிறது.

சாக்லெட் ஈடில்லா சுவை கொண்டது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே! அதேபோல் அதன் பலனும் ஈடு இணை இல்லாதது. குறிப்பாக சருமத்திற்கு சாக்லெட் சிறந்த ஊட்டச்சத்தாக இருக்கிறது. சாக்லெட்டில் ஆண்டி ஆக்ஸிடண்ட், பொட்டாசியம், ஸிங்க், காப்பர், மெக்னீசியம், ஐயர்ன், என பல மினரல் சத்துகள் அடங்கியிருக்கின்றன.

குறிப்பாக கோகோ பவுடரில் உள்ள ’கஃபைன் ’ (caffeine ) சருமத்தின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. முகத்தின் நிற மாற்றத்தை சரி செய்து சீரான முக அழகை அளிக்கிறது. எனவே சாக்லெட் மாஸ்கை வாரம் ஒரு முறை அப்ளை செய்வதால் உங்கள் சருமம் பளபளப்பாகவும் என்றும் இளமையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

கோகோ பவுடர் - 2 tsp
தயிர் - 1 tsp
தேன் - 1 tsp
வாழைப்பழம் - 1/4



செய்முறை :

வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும். பின் தயிர் , தேன் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ளவும். பின் முகத்தை சுத்தமான நீரில் கழுவி நன்கு துடைத்துக் கொண்டு கோகோ பேஸ்டை சீராக முகத்தில் தடவவும்.

கண்களுக்கு கீழே கருவளையங்களா..? இப்போதே இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...

பின் 10 முதல் 20 நிமிடங்கள் காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி வாரம் ஒரு முறை இந்த மாஸ்கை முகத்தில் அப்ளை செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Chocolate, Diwali festival, Face mask, Festival

அடுத்த செய்தி