முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உலர் திராட்சையை ஊற வைத்த நீரை பருகினால் இத்தனை ஆரோக்கியம் கிடைக்குதா..? இது தெரியாம போச்சே..!

உலர் திராட்சையை ஊற வைத்த நீரை பருகினால் இத்தனை ஆரோக்கியம் கிடைக்குதா..? இது தெரியாம போச்சே..!

உலர் திராட்சை நீர்

உலர் திராட்சை நீர்

உலர் திராட்சைகளிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே நாம் தினமும் உலர் திராட்சை நீரை பருகி வந்தால், உடல் ஆரோக்கியத்தோடு இருப்பது மட்டுமில்லாமல், சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக அமைவதாகக் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சருமம் மற்றும் தோல் திசுக்களை சரிசெய்யும் பல்வேறு வைட்டமின் உள்பட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் திராட்டையில் அதிகளவில் உள்ளதால், உடல் ஆரோக்கியத்திற்கும் மட்டுமில்லாமல் சரும பராமரிப்பிற்கும் பயனுள்ளதாக உள்ளது.

நம்மில் பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று தான் திராட்சை. குறிப்பாக நோய் வாய்பட்டுள்ளவர்களை பார்க்க செல்லும் போது திராட்டை உள்ளிட்ட பழங்களைத் தான் நாம் வாங்கி செல்வோம். ஏனென்றால் திராட்சையில் வைட்டமின் பி, வைட்டமின் சி, போலிக் அமிலம், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே எவ்வித உடல் நலப்பிரச்சனைகளில் உள்ளவர்களும் இதனை உட்கொள்ளலாம்.

இதோடு உலர் திராட்சைகளிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே நாம் தினமும் உலர் திராட்சை நீரை பருகி வந்தால், உடல் ஆரோக்கியத்தோடு இருப்பது மட்டுமில்லாமல், சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக அமைவதாகக் கூறப்படுகிறது. எனவே இந்நேரத்தில் எவ்வகையில் சரும பராமரிப்பிற்கு திராட்சை நீர் பயன்படுகிறது என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்து கொள்வோம்.

சரும பராமரிப்பிற்கு உதவும் திராட்சை நீரின் நன்மைகள்:

திராட்சை நீரில் ஆன்டிமைக்ரோபியல் மற்றும் பாக்டீரிய எதிர்ப்புப்பண்புகள் அதிகளவில் உள்ளதால், சருமத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் குறைவாக உள்ளது.

திராட்சை நீரை நாம் முக டோனராகவும் பயன்படுத்தலாம், ஏனென்றால் இது உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவியாக உள்ளது.

தோல் திசுக்களை பராமரிக்கும் வைட்டமின் சி திராட்சையில் அதிகளவில் உள்ளது., இதோடு சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் வைட்டமின் ஈ சத்துக்களும் அதிகளவில் உள்ளது. எனவே எவ்வித முகப்பரு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் திராட்சை நீரை வழக்கமாக நாம் பயன்படுத்தலாம்.

திராட்சை நீரை முக பராமரிப்பிற்கு பயன்படுத்தும் முறை:

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ள திராட்சை நீரை உங்கள் சரும பராமரிப்பிற்கு கீழ்க்கண்ட வகைகளில் பயன்படுத்தலாம். முதலில் திராட்சை நீர் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

திராட்சை நீர் தயாரிக்கும் முறை:

இதனை செய்வதற்கு முதலில் 150 கிராம் உலர் திராட்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊறவைத்த திராட்சையை எடுத்து வடிகட்டி குடிக்க வேண்டும் . குறிப்பாக வெறும் வயிற்றில் குடித்தால் உடல் ஆரோக்கியம் மற்றும் முகம் பளபளப்பாகவும் இருக்குமாம்.

உலர் திராட்சை நீர் பேஸ் டோனர் (Raisin face toner)

தேவையான பொருள்கள்

திராட்சை நீர் - 1 கப்

ரோஸ் வாட்டர் - 3 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் திராட்சை நீரோடு ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறை நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து வழக்கமாக ஃபேஸ் டோனராக பயன்படுத்தலாம்.

திராட்சை வாட்டர் ஃபேஸ் பேக் ( Raisin water face pack):

தேவையானப் பொருள்கள்:

திராட்சை நீர் - 1 டீஸ்பூன்

தேன்- 1 தேக்கரண்டி

செய்முறை:

தேனுடன் திராட்சை நீரை சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்ய வேண்டும். பின்னர் உங்களது முகத்தில் பேஸ் பேக் போன்று தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருந்து கழுவி விட வேண்டும்.

Also Read : உலர் கருப்பு திராட்சை அல்லது மஞ்சள் திராட்சை... எதில் ஆரோக்கியம் அதிகம்..?

இந்த பேஸ்பேக் வறண்ட சருமத்திற்கு சிறந்ததாக அமைகிறது. ஒரு வேளை உங்களது சருமம் எண்ணெய் பிசுபிசுப்புடன் இருந்தால் இந்த பேஸ் பேக் கலவையோடு அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ள வேண்டும்.

First published:

Tags: Beauty Tips, Yellow Raisins