ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

எலுமிச்சை பழத்தை இப்படி கூட பயன்படுத்தலாமா..? சருமம் மற்றும் முடிக்கு கிடைக்கும் நன்மைகள்

எலுமிச்சை பழத்தை இப்படி கூட பயன்படுத்தலாமா..? சருமம் மற்றும் முடிக்கு கிடைக்கும் நன்மைகள்

எலுமிச்சை

எலுமிச்சை

Lemon For Hair And Skin Care | இயற்கையாக கிடைக்கும் எலுமிச்சையை பயன்படுத்தியே நம்முடைய முடியையும், சருமத்தையும் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்துக் கொள்ள முடியும் என அழகியல் நிபுணரான ஷனாஸ் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எலுமிச்சை இயற்கையாகவே தமிழர்களின் அன்றாட வாழ்வில் சமையலிலும் மற்றும் பல சமய சடங்குகளுக்க்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால், காலை எழுந்ததும் சூடான நீருடன் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மையை கொடுக்கும். இது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது மட்டுமல்லாமல் எலுமிச்சையை பயன்படுத்தி நம்முடைய முடியையும் சருமத்தையும் மிகப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்துக் கொள்ள முடியும்.

எலுமிச்சையில் உள்ள அமிலங்களும் ஊட்டச்சத்துக்களும் நம் உடலில் உள்ள நச்சுக்களையும் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதால் நம் உடல் புது பொலிவை பெறுகிறது. மேலும் சருமத்தை பளபளப்பாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

முடி மற்றும் சரும பராமரிப்பில் எலுமிச்சையின் பங்கு :

எலுமிச்சையானது ஒப்பனை அழகு சாதன தயாரிப்பில் மிக முக்கியமான ஒரு மூலப் பொருளாக சேர்க்கப்படுகிறது. ஆனால் எலுமிச்சையை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தும் போது அது தோலுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே அதனை நீருடனோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களுடனோ கலந்து பயன்படுத்த வேண்டும். எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டாக வெட்டி சருமம் மற்றும் மூட்டுகளில் உள்ள கருமை நிறப் பகுதிகளில் தொடர்ந்து தேய்த்து வருவதின் மூலம் அங்குள்ள கருமையை நீக்க முடியும். மேலும் எலுமிச்சை சாறுடன் சம அளவில் பன்னீர் கலந்து முகத்தில் பயன்படுத்தும் போது அவை சருமத்தில் உள்ள சிறு சிறு துளைகள் மற்றும் எண்ணெய் பிசுக்குள் ஆகியவற்றை சரியாக்குவதற்கு உதவுகிறது. அவ்வாறு முகத்தில் பத்து நிமிடங்கள் வரை காய வைத்த பின்பு முகத்தை நீரைகொண்டு கழுவி விட வேண்டும்.

உள்ளங்கைகள் மிக கடினமாகவும் சொரசொரப்பாகவும் இருப்பவர்கள் எலுமிச்சை சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்து கைகளில் போயிட்டு வர உள்ளங்கை மென்மையாகும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் சருமத்தில் ஏற்படும் கருமையை போக்குவதுடன் அந்தப் பகுதியில் திசுக்களின் வலுவான கட்டமைப்பிற்கும் உதவுகிறது.

Also Read : நாம் தினந்தோறும் அருந்த வேண்டிய மூன்று வகையான ஜூஸ் வகைகள் : என்னென்ன பலன் கிடைக்கும்.?

எண்ணெய் பசையுள்ள சருமத்தை கொண்டவர்கள் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியை மட்டும் சாராகப் பிழிந்து அதனுடன் சம அளவில் தண்ணீர் சேர்த்து அதில் முகம் கழுவி வர வேண்டும். இது முகத்தில் உள்ள அமிலம் மற்றும் காரத்தன்மையை சமப்படுத்துவதால் முகத்தில் ஏற்படும் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்குகிறது. கோடை காலங்களில் இந்த எலுமிச்சை மற்றும் தண்ணீர் கலந்த கலவையை ஐஸ் கட்டிகளாக ஃப்ரீசரில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த ஐஸ் கட்டிகளில் ஒன்றை எடுத்து ஒரு டிஷ்யூவில் சுத்தி அதனை எண்ணெய் பிசுப்புள்ள தோல் பகுதியில் நன்றாக தேய்த்துவர அந்த இடம் பொலிவாகவும் பளபளப்புடனும் காணப்படும்.

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து தினமும் முகத்தில் தேய்த்து வர முகம் பளபளப்பாகவும் நிறம் கூடியும் காட்சியளிக்கும். மேலும் இந்த எலுமிச்சை சாறுடன் சிறிது நீர் கலந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் முடிக்கு ஷாம்பூ பயன்படுத்திய பிறகு, கடைசியாக ஒரு முறை இந்த எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் உங்கள் முடியை அலசி வந்தால் விரைவில் முடி பளபளப்பாகவும் வலுவானதாகவும் மாற்றம் அடைவதை காண முடியும்

Also Read : சரும அழகிற்கு தேனில் மறைந்திருக்கும் ரகசியங்கள்.!

எலுமிச்சை தோல்களை நன்றாக காய வைத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பேஸ் மாஸ்க்காகவும் அல்லது சோப்பிற்கு பதிலாகவும் முகம் கழுவ பயன்படுத்தலாம்.

இதுபோல இயற்கையிலேயே நமக்கு பலவித அழகு சாதன பொருட்கள் எந்தவித பக்க விளைவும் இன்றி கிடைக்கும் போது நாம் பல வித கெமிக்கல்கள் கலந்த செயற்கை அழகு சாதனை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அழகியல் நிபுணர் ஷனாஸ் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Beauty Tips, Lemon, Skin Care