• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • முகத்தை ஜொலிக்க வைக்கும் நெய் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..

முகத்தை ஜொலிக்க வைக்கும் நெய் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..

காட்சி படம்

காட்சி படம்

உங்கள் சருமம் பொலிவாக இருக்க வேண்டுமா ? இந்த ஃபேஸ் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க..

 • Share this:
  நெய் உங்கள் சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. இதில் வைட்டமின் ஈ சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் உதடு வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்பு ஆகியவற்றை குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இதுதவிர, நெய் உங்கள் சருமத்தை நன்கு மாய்ஸ்ச்சரை செய்கிறது. அனைத்து வகையான சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கிறது. பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யில் SPF இருப்பதால், இவை சூரிய ஒளிக்கு எதிராக வலுவான பாதுகாப்பு ஷீல்டாக செயல்படக்கூடும்.

  உங்கள் சருமத்தை பராமரிக்க பலவித ஸ்க்ரப்-ஐ உபயோகிப்பதை போல, நெய்யையும் ஒரு பேஸ்மாஸ்க்காக சருமத்தில் தடவலாம். உங்கள் முகத்தில் நெய்யைப் பூசி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர் அதை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் சோப்பு போட்டு முகத்தை கழுவுங்கள். சிறிது நேரத்திலேயே, உங்கள் சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் தோற்றமளிக்கும். இருப்பினும் எல்லோருக்கும் ஒரேமாதிரியான சருமத்தை கொண்டிருப்பதில்லை. ஆனால் நீங்கள் எந்த மாதிரியான தோல் பிரச்சினைகளில் சிக்கியிருந்தாலும் சரி, உங்கள் சருமத்தின் அமைப்பு உயிரற்றதாக உணர்ந்தால், இந்த எளிதான DIY (Do It Yourself) பேஸ்பேக்கை முயற்சி செய்து பாருங்கள் கட்டாயம் நல்ல முடிவு உங்களுக்கு கிடைக்கும்.  டீஹைடிரேடட் சருமத்திற்கு நெய் மாஸ்க்கை எவ்வாறு பயன்படுத்தலாம்:

  உங்கள் சருமம் வறட்சியாகவும் கடினமாகவும் இருந்தால், தோல் பராமரிப்புக்காக நெய்யைப் பயன்படுத்தத் வேண்டிய சரியான நேரம் இதுதான். சரி உங்கள் நீரிழப்பு சருமத்திற்கு நெய் ஃபேஸ் பேக்கை எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து காண்போம். சிறிது சந்தனப் பொடியை எடுத்து அதனுடன் மஞ்சள் மற்றும் நெய் சேர்த்து ஒரு தடிமனான பேஸ்ட்டை உருவாக்கிக்கொள்ளுங்கள். அந்த பேஸ்டை முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் பேக்கை உலர விட்டு குளிர்ச்சியான நீரில் முகத்தை கழுவுங்கள். முகம் நன்கு மிருதுவாகும்.

  also read : திருமணமாகப் போகும் பெண்கள் மேக்அப்பில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்ன..?

  டல் மற்றும் வறண்ட சருமத்திற்கு ஏற்ற நெய் ஃபேஸ்பேக்

  உங்கள் சருமத்தை மிருதுவாகவும், புதியதாகவும் மாற்றுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சிறிதளவு கடலை மாவுடன் சிறிது நெய் சேர்த்து DIY மாஸ்க்கை உருவாக்க வேண்டும். பேஸ்டை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். அதன் பிறகு, கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.

  தோல் பிரகாசமாக்குவதற்கு ஏற்ற நெய் ஃபேஸ்பேக்

  உங்கள் சருமம் பிரகாசமாக ஜொலிக்க நெய் வைத்து இந்த பேஸ்மாஸ்க்கை தயார் செய்து உபயோகித்து பாருங்கள் காட்டாயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும். இதற்கு, காய்ச்சாத பால், ஊறவைத்து அரைத்த மசூர் தால் மற்றும் நெய் சேர்த்து ஒரு பேஸ்டை தயாரிக்க வேண்டும். மேலும், இந்த பேஸ்பேக் சருமத்தை மென்மையாக மாற்றுகிறது. பால், நெய், மசூர் தால் ஆகியவற்றை சமமாக அளவில் கலந்து பேஸ்ட் செய்யவும். பின்னர் உங்கள் சருமத்தில் ஃபேஸ் பேக்கை நன்கு தடவவும். அதைச் செய்த பிறகு, இந்த கலவையை உங்கள் முகத்தில் சுமார் 20 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் தண்ணீர் விட்டு அலசுங்கள்

  கலவையில் இருக்கும் நெய் தோல் பாதிப்பைத் தடுக்கிறது மற்றும் சருமத்தை பிரகாசமாகவும் பளபளப்பாகவும் மாற்றும் வகையில் செயல்படுகிறது. பால் ஒரு சிறந்த சுத்தப்படுத்தியாகும். மேலும் இது முகத்தை பிரகாசமாக்குவதற்கும் வெண்மையாக்குவதற்கும் பெயர் பெற்றது. மசூர் தால் சருமத்தில் பல அதிசயங்களைச் செய்கிறது. ஏனெனில் இது இறந்த சருமத்தை அகற்றி முக நிறத்தை மேம்படுத்துகிறது. நெய்யில் நிறைந்திருக்கும் மருத்துவ குணம் உங்கள் சருமத்தை பொலிவுடன் மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: