முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / KGF 2 நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகு ரகசியங்கள்.!

KGF 2 நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகு ரகசியங்கள்.!

Srinidhi Shetty

Srinidhi Shetty

Srinidhi Shetty | கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் திவா சூப்ராநேஷனல் போட்டியில் மகுடம் சூடிக் கொண்டவர் ஸ்ரீநிதி ஷெட்டி. திரை பிரபலங்கள் பலரும் தங்கள் முக அழகிற்காக ஆர்டிஃபிஷியல் மேக்கப் பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இயற்கையான ரோஸ் மற்றும் கற்றாழை சார்ந்த அழகுப் பொருட்களை வைத்து தனது சருமத்தின் ஈரப்பசையை தக்க வைத்து வருபவர் ஸ்ரீநிதி ஷெட்டி.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

கடந்த 2018ம் ஆண்டில் வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து, கேஜிஎஃப் சாப்டர் 2 படம் திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யாஷ்-இன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளிவர இருக்கிறது.

படத்தில் சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டேண்டன் மற்றும் பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில், ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தின் பார்ட் ஒன்றிலும் நடித்திருந்தார் என்ற போதிலும், அந்தப் படத்தில் அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்ற கருத்து நிலவியது. அந்த குறையை போக்கும் வகையிலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தில் அவரது நடிப்பு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் திவா சூப்ராநேஷனல் போட்டியில் மகுடம் சூடிக் கொண்டவர் ஸ்ரீநிதி ஷெட்டி. திரை பிரபலங்கள் பலரும் தங்கள் முக அழகிற்காக ஆர்டிஃபிஷியல் மேக்கப் பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இயற்கையான ரோஸ் மற்றும் கற்றாழை சார்ந்த அழகுப் பொருட்களை வைத்து தனது சருமத்தின் ஈரப்பசையை தக்க வைத்து வருபவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இது தவிர, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க மாய்ஸ்சரைசிங் டோனர் ஒன்றை பயன்படுத்துகிறார்.

சூரிய ஒளி காரணமாக சருமத்தில் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அதனை சரி செய்ய, ஸ்ரீநிதி ஷெட்டி தினந்தோறும் விட்டமின் சி சீரம் பயன்படுத்தி வருகிறார். இப்போதும், எப்போதும், சருமத்தை ஈரப்பசையுடன் வைத்திருக்க மாய்ஸ்சரைசிங் லோஷன் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். வெளியிடங்களுக்கு செல்வதற்கு முன்பாக, சூரிய ஒளியில் சருமம் பாதிக்கப்படாமல் இருக்க இவர் சன்ஸ்கிரீன் அப்ளை செய்து கொள்ள தவறுவதில்லை. இது தவிர தினசரி இரவில் சருமத்தை சுத்தம் செய்ய எக்ஸ்ஃப்லோய்டிங் டோனர் ஒன்றை இவர் பயன்படுத்தி வருகிறார்.

Also Read : Sun tanning - ஆல் ஏற்படும் சரும பாதிப்புகளிலிருந்து விடுபட டிப்ஸ்

top videos

    கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தில் தனது நடிப்பு என்பது ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுப்பதாக அமையும் என்று ஸ்ரீநிதி ஷெட்டி தெரிவித்தார். குறிப்பாக, கேஜிஎஃப் சாப்டர் 1ல் அவர் நடித்திருந்த காட்சிகள் 5 முதல் 10 நிமிடங்களுக்கு மட்டுமே இருந்தன. இதனால், கேஜிஎஃப் சாப்டர் 2 படத்திலும் ரசிகர்கள் பெரிய அளவுக்கு எதிர்பார்க்க மாட்டார்கள் என்றாலும் கூட, தனது நடிப்பு என்பது அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும் என்று ஸ்ரீநிதி ஷெட்டி கூறியுள்ளார்.

    First published:

    Tags: Actress, Beauty Tips, Skin Care