ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

2023-லிருந்து உங்கள் சருமத்தில் கவனம் செலுத்த திட்டமா..? பொலிவான அழகை பெற தினசரி ஸ்கின்கேர் டிப்ஸ்..!

2023-லிருந்து உங்கள் சருமத்தில் கவனம் செலுத்த திட்டமா..? பொலிவான அழகை பெற தினசரி ஸ்கின்கேர் டிப்ஸ்..!

ஸ்கின்கேர் டிப்ஸ்

ஸ்கின்கேர் டிப்ஸ்

பொதுவாக நம் சருமத்தின் மீது நாம் நாளொன்றுக்கு இரண்டு முறை கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது AM - PM மணிக்கணக்கில் சரும பாதுகாப்புக்கு நேரம் ஒதுக்குவது அவசியம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உங்கள் சருமத்தை அழகானதாக வைத்திருக்க எண்ணற்ற முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டும், அதற்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை என்றால், இதுவரையில் நீங்கள் செய்து வந்த முயற்சிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

பொதுவாக நம் சருமத்தின் மீது நாம் நாளொன்றுக்கு இரண்டு முறை கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது AM - PM மணிக்கணக்கில் சரும பாதுகாப்புக்கு நேரம் ஒதுக்குவது அவசியம்.

முந்தைய நாள் இரவில் உங்கள் சருமத்தின் மீது பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களையும் அதிகாலைப் பொழுதில் சுத்தம் செய்யவும். சருமத்தில் நீர்ச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வது, வயது முதிர்வு நடவடிக்கையை தடுப்பது போன்ற தீர்வுகளுக்காக முதல் லேயர் இடம்பெற வேண்டும்.

நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில் விட்டமின் சி, நியசினமைட், ஹைலரோனிக் அமிலம் போன்றவை இடம்பெற்றிருக்க வேண்டும். அடுத்ததாக உங்கள் சரும வகைக்கு ஏற்ப மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் சருமம் எண்ணெய் தோய்ந்தது என்றால் ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும். உங்கள் சருமம் வறட்சியானது என்றால் க்ரீம் அடிப்படையிலான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.

இறுதியாக உங்கள் சருமத்திற்கு சன்ஸ்கிரீன் அப்ளை செய்ய வேண்டும். மேக்அப் செய்ய விரும்பும் நபர்களுக்கு, பவுண்டேஷன்களுடன் கூடிய பிரத்யேக சன்ஸ்கிரீன் கிடைக்கும்.

Also Read : ஹேர் கலர் செய்திருந்தால் இதையெல்லாம் பின்பற்றுவது அவசியம்.. நீண்ட நாட்களுக்கு கலர் போகாது..!

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்

சரும பாதுகாப்பிற்காக நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கு இடையிலும் 60 நொடிகள் இடைவெளி விட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு சரும பாதுகாப்பு பொருள்களையும் உங்கள் முகம் உள்வாங்குவதற்கு நேரம் பிடிக்கும். ஆகவே கட்டாயம் இடைவெளி விட வேண்டும்.

இலகுவான பொருள்களை முகம் ஏற்க நீண்ட நேரம் ஆகும் என்பதால் முதலில் கனமான பொருள்களை அப்ளை செய்யவும். அதே சமயம், உங்கள் முகத்திற்கு நீங்கள் 3 பொருட்களுக்கு மேல் பயன்படுத்தினால் முகம் அதை உள்வாங்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

வழக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்

இதுவரையிலும் நாம் சரும பாதுகாப்பு குறித்த அடிப்படையான நடவடிக்கைகள் குறித்து பார்த்தோம். ஆனால், உங்கள் வயது, பிரத்யேக சரும அமைப்பு போன்றவற்றை பொருத்து கூடுதல் கவனம் தேவைப்படலாம். உதாரணத்திற்கு நீங்கள் 30 வயதை நெருங்கி வருபவர் என்றால் வயது முதிர்வுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

Also Read : கொரிய பெண்களின் முகம் பளபளப்பாக இருக்க என்ன காரணம்..? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

குறிப்பாக ஹைலரோனிக் ஆசிட் கொண்ட பொருட்களை உபயோகப்படுத்தினால் சருமத்தில் எலாஸ்டின் மற்றும் கொலாஜென் போன்றவை உருவாகும். அது உங்களை இளமையானவராக காட்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக சருமம் அழகானதாக, பொலிவு கொண்டதாக தோன்றும். அதே சமயம், சருமத்திற்காக நீங்கள் தேர்வு செய்யும் பொருட்கள் அலர்ஜியை ஏற்படுத்துபவை அல்ல என்பதை உறுதி செய்யவும்.

First published:

Tags: Beauty Tips, New Year 2023, Skincare