ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Valentine Day Special : காதலர் தினத்தன்று உங்களை பார்ப்பவர்கள் மெய்சிலிர்த்து போக வேண்டுமா..? அட்டகாசமான டிப்ஸ்

Valentine Day Special : காதலர் தினத்தன்று உங்களை பார்ப்பவர்கள் மெய்சிலிர்த்து போக வேண்டுமா..? அட்டகாசமான டிப்ஸ்

காதலர் தின சிறப்பு

காதலர் தின சிறப்பு

வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள், திராட்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, குறைபாடற்ற, மாசில்லாத சருமத்தை வழங்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

காதலர் தினம் கொண்டாட்டம் களைகட்டிக் கொண்டிருக்கிறது. பல நாட்களாக மறைத்து வைத்த காதலை வெளிப்படுத்துவது முதல், காதலன் அல்லது காதலிக்கு சிறப்புப் பரிசுகள் வழங்குவது வரை, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு திட்டம் இருக்கும். ஸ்பெஷல் டேட்டிங் அல்லது அவுட்டிங் செல்லும் போது, பண்டிகை நாட்களுக்கு அலங்கரித்துக் கொள்வது போல, அழகாக, சிறப்பான தோற்றத்தை பெற பலரும் விரும்புவார்கள். நேர்த்தியான தோற்றம் என்பது பொலிவான சருமம், பொருத்தமான மற்றும் அழகான கூந்தல் ஆகிய இரண்டிலும் பெரும்பாலும் அடங்கிவிடும். அழகு உலகின் முடி சூடா ராணியாக வலம் வரும் ஷானாஸ் உசேன் வழங்கும் காதலர் தின சிறப்பு அழகுக் குறிப்புகள் இங்கே.

சருமத்தைப் பளபளப்பாக்கும் இன்ஸ்டன்ட்"பிக்-மீ-அப்" ஃபேஸ் மாஸ்க்

எவ்வளவு மேக்கப் போட்டாலும், முகம் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்க, ஒரு இன்ஸ்டன்ட் ஃபேஸ்மாஸ்க்கைப் பயன்படுத்தலாம்.

"பிக்-மீ-அப்" மாஸ்க்கை வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து தயார் செய்யலாம். முட்டையின் வெள்ளைக்கரு, மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாகத் தடவி, 20 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பின்பு வெந்நீரில் முகம் கழுவி நன்றாகத் துடைக்கவும். பின்னர், பன்னீரில் (ரோஸ் வாட்டர்) நனைத்த பஞ்சை முகத்தில் பயன்படுத்தவும். சில நிமிடங்களில் உடனடி பொலிவும், பளபளப்பும் கிடைக்கும்.

மாசு மங்கற்ற பட்டு போன்ற சருமத்துக்கு பழங்கள் ஃபேஸ்மாஸ்க்

வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள், திராட்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, குறைபாடற்ற, மாசில்லாத சருமத்தை வழங்கும். பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்து, முகத்தில் நேரடியாக மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் விரும்பும் பழம் அல்லது பழங்களை கூழாக்கி, ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவலாம். பழக்கூழை முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் வரை காய வைக்கலாம். பின்னர், சருமத்தை குளிர் நீரில் கழுவலாம். பழக்கலவையில் கொஞ்சம் தேன், பன்னீர் மற்றும் பால் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

ஏர்பிரஷ் மேக்கப் என்றால் என்ன.? எந்த வகை சருமம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தக் கூடாது..?

சுருக்கமற்ற, அழகான, பிரகாசமான கண்களுக்கு பன்னீர் அல்லது டீ பேக்

முகம் பொலிவாக இருக்க கண்கள் பிரகாசமாக இருக்க வேண்டும். நன்றாகத் தூங்குவது, கண்களுக்கு போதிய ஓய்வு அளிப்பது ஆகியவை அவசியமாகும். கூடுதலாக, கண்களுக்கு புத்துணர்ச்சியூட்ட, பன்னீரில் நனைத்த பஞ்சை கண்களின் மேல் வைத்து ஓய்வு எடுக்கலாம். உங்களுக்கு அதிக குளிர்ச்சி வேண்டாம் என்று நினைத்தால், டீ பேகை வெந்நீரில் நனைத்து கண்களில் மீது வைக்கலாம். கரு வளையம், வீக்கம், கண்களின் கீழே உருவாகும் பை ஆகியவற்றைக் குறைக்கும்.

முகப்பரு இருந்தால் என்ன செய்யலாம்..?

முகப்பருவை உடனடியாக நீக்க பலரும் பற்பசையை பயன்படுத்துவார்கள். ஆனால், அது சருமத்தை மோசமாக பாதிக்கும் மற்றும் நிறத்தை மங்கச் செய்யும். எனவே, முகப்பரு இருந்தால் அதை மறைக்க நீங்கள் உங்கள் சரும நிறத்துக்கு பொருந்தும் ஃபௌண்டேஷன் மற்றும் கன்சீலரைப் பயன்படுத்த வேண்டும்.

கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்

உங்களுக்கு வறண்ட கூந்தல் இருந்தால், கிரீமியான ஹேர் கண்டிஷனரில் கொஞ்சம் தண்ணீர் கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும். முடி வறட்சியை உடனடியாகக் குறைக்க, இந்தக் கலவையை தலை முடியில் ஸ்ப்ரே செய்து முடியை சீவவும். உங்கள் முடி மென்மையாக, பட்டுபோல இருக்கும்.

அலையலையாக, காற்றில் பறக்கும் கூந்தல் உங்களுக்கு இருந்தால், அடிக்கடி தலை சீவ வேண்டாம்.

எண்ணெய்ப்பசையான கூந்தல் இருந்தால், தேநீர் டிக்காஷனைப் பயன்படுத்தி கூந்தலை அலசவும்.

ஆண்களைப் பொறுத்தவரை, ஆண்கள் தங்கள் முகத்தை ஸ்க்ரப் செய்யலாம் மற்றும் முடிக்கு சீரம் பயன்படுத்தலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Makeup, Valentine's day