சரும பராமரிப்பு என்று வரும் பொழுது பலவிதமான, மிகவும் வித்தியாசமான வினோதமான பொருட்கள் பயன்படுத்தப்படும். எந்த அளவுக்கு ரசாயனங்கள் ஒரு சில பொருட்களில் பயன்படுத்தப்படுகிறதோ அதே அளவுக்கு இயற்கையாக கிடைக்கும் பொருட்களும் சரும பராமரிப்பில் இடம்பெற்றுள்ளது. இதில் சமீபத்தில் அறிவியல் ஆய்வால் உறுதி செய்யப்பட்ட ஒரு வினோதமான பொருளில் சரும ஆரோக்கியம் மேம்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
உலகிலேயே மிக மிக மெதுவாக செல்லும் உயிரினம் எது என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் ஸ்கின் கேர் உலகத்தில் இதற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் கொரிய அழகு சாதன பொருட்களில் நத்தைக்கு அதிக டிமாண்ட் உள்ளது. நத்தைக்கும் சரும பராமரிக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கலாம்.
நத்தையின் உடலில் இருக்கும் உமிழ் நீர் அல்லது ஜெல் போன்ற திரவம் சரும பராமரிப்பில் பலவித நன்மைகள் அளிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நத்தையின் சளி போன்ற திரவம் காயத்தை ஆற்றும் தன்மை கொண்டது. அதுமட்டும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் பொழுது வேட்டப்பட்ட இடத்தை ஒட்டுவதற்கான பசையாகவும் செயல்படுகிறது, மேலும் கேஸ்ட்ரிக் அல்சர்களுக்கான தீர்வாகும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டைய காலத்தில் சரும பராமரிப்பு தயாரிப்புகளில் நத்தை பரவலாக பயன்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது சருமத்தை மென்மையாக்கி, வயதாகும் அறிகுறிகளை நீக்கி, ஈரப்பதத்தைத் தக்கவைத்து பொலிவாக்குகிறது. இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலிக்குலர் ஜர்னல் என்ற பத்திரிகையில் வெளியான ஆய்வின் படி, நத்தைகள் சளி அல்லது ஜவ்வு போன்ற ஒரு திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்த திரவம் நத்தையின் பாதங்களை பாதுகாக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்த நத்தையின் உடலையும் காயம் ஏற்படாமல் ஒரு அரணாகவும், பாக்டீரியா தொற்றை தவிர்க்கவும், யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது. நத்தையின் உடலிலேயே உற்பத்தியாகும் என்ற திரவம் மிக மிக குறைவான pH அளவைக் கொண்டது.
நத்தை இயங்குவதற்கும், எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கும் சுரக்கும் இந்த திரவம் ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மை ஆகிய அற்புதமான பண்புகளை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதில் கிளைக்கோலிக் ஆசிட், எலாஸ்டின் கொலாஜன், வைட்டமின்கள், சருமத்தை இளமையாக வைத்திருக்கும் மியூசின் போன்ற கிளைகோ புரோட்டீன் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பல விதமான காம்பவுண்டுகள் உள்ளன.
இவை அனைத்துமே சருமத்திற்கு சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு அளிப்பதும் இறந்த செல்களை நீக்குவது, இளமையை தக்க வைப்பது, செல்கள் மறுஉற்பத்தியாக உதவுவது என்று பல விதங்களில் ஆதரவு அளிக்கிறது.
Also Read : உங்க சருமத்திற்கு ஏற்ற நல்ல ஃபவுண்டேஷனை தேர்வு செய்வதில் குழப்பமாக இருக்கா..? உங்களுக்கான டிப்ஸ்.!
உதாரணமாக, அலான்டோனின் என்ற ஒரு காம்பவுண்ட் சருமத்தில் இருக்கும் காயங்களை ஆற்றி, சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும். பொதுவாகவே வயதாகும்போது உடலில் இருக்கும் கொலாஜன் அளவு குறைந்து, முகத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவை தோன்றும். ஆனால், இந்த காம்பவுண்டு வயதாகும் அறிகுறிகளைத் தடுக்கும். மற்றொரு பக்கம் கிளைகோலிக் ஆசிட் என்பது செல்கள் தானாகவே புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கியமாக மாறுவதற்கு உதவும். மேலும் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் திட்டுகள் ஹைப்பர் பிக்மெண்டேஷன் ஆகியவை நீங்கி சருமம் பொலிவாக ஒரே நிறத்தில் காட்சியளிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Korean Beauty Tips, Skin Care