அமெரிக்காவில் உள்ள அரிஸோனா, கலிஃபோர்னியா ஆகிய பகுதிகளிலும், மெக்ஸிகோவிலும் காணப்படுகின்ற சிம்மான்சியா சைனீசிஸ் என்னும் தாவரத்தில் இருந்து கிடக்கப்பெறும் விதைகளில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கு பெயர் தான் ஜோபோபோ எண்ணெய் ஆகும்.
நம் கூந்தல் பராமரிப்புக்கு இது மிக அற்புதமான எண்ணெய் என்றே கூறலாம். சருமத்தில் உள்ள துளைகளில் அரிப்பு ஏற்படுத்தாமல் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை இந்த ஜோபோபோ எண்ணெய்க்கு உண்டு. வயது முதிர்வுக்கான அறிகுறிகளை தடுத்து சருமம் மற்றும் கூந்தல் நலனை மேம்படுத்தும் தன்மை இந்த எண்ணெயில் உள்ளது.
சரும நலனுக்கு நல்லது
ஜோபோபோ எண்ணெயில் வைட்டமின் ஏ மற்றும் இ மற்றும் ஒமேகா - 6 ஃபேட்டி ஆசிட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே நம் சருமத்திற்கு ஒரு அரணாக அமையும். வைட்டமின் இ சத்துடன் கூடிய அழற்சிக்கு எதிரான பண்புகள் காரணமாக சருமத்திற்கான பாதுகாப்பு லேயராக செயல்படுகிறது. சரும பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.
வறண்ட சருமத்தை மேம்படுத்தும்
வறண்ட, எரிச்சல் கொண்ட சருமத்திற்கு ஜோபோபோ எண்ணெய் மிக சிறப்பான தீர்வு தரும். எப்போது சருமம் நீர்ச்சத்தை இழந்துவிடாமல் இது பாதுகாப்பு தரும். வெயில் காலங்கள் மட்டுமல்லாமல் குளிர் காலத்திலும் சரும வறட்சி ஏற்படுகின்ற சமயத்தில் இந்த எண்ணெயை நீங்கள் பயன்படுத்தலாம்.
பருக்களை தடுக்கிறது
சருமத்தில் எண்ணெய் பசை மற்றும் நீர்ச்சத்து ஆகிய இரண்டையும் சீராக வைத்துக் கொள்ள பண்புகளை தூண்டக் கூடியது ஜோபோபோ எண்ணெய் ஆகும். குறிப்பாக பருக்கள், கொப்பளங்களை கொண்ட சருமத்திற்கு இதை பயன்படுத்தலாம். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மைகள் கிருமிகளை அழிக்கும்.
வயது முதிர்வை தடுக்கிறது
சருமத்தில் சுருக்கங்கள் தென்படுவது வயது முதிர்வுக்கான முக்கிய அறிகுறியாகும். அதேபோல சருமம் வறட்சி அடைவதும் வயது முதிர்வுக்கான தோற்றத்தை கொடுக்கும். இந்த இரண்டையும் நீக்கி இளமையான தோற்றத்தை ஜோபோபோ எண்ணெய் கொடுக்கும்.
உதட்டுக்கு பயன்படுத்தலாம்
உதடுகளில் ஏற்படக் கூடிய வறட்சி, வெடிப்பு போன்ற பிரச்சினைகளுக்காக நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் க்ரீம்களை காட்டிலும் ஜோபோபோ எண்ணெய் அப்ளை செய்தால் மிக கூடுதலான பலன்கள் கிடைக்கும். பனிக்காலங்களில் உதடு நீர்ச்சத்தை இழக்கும். அந்த தருணத்தில் இதை நீங்கள் பயன்படுத்தலாம்.
Also Read : முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம்.. இந்த சிகிச்சைகளை பின்பற்றினாலே நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!
கூந்தல் பராமரிப்புக்கு ஜோபோபோ எண்ணெய்
நீங்கள் பொடுகு தொல்லையால் அவதி அடைபவரா? எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லையா? அப்படியானால் உங்களுக்கு இயற்கையான தீர்வு தரக் கூடியதாக ஜோபோபோ எண்ணெய் அமையும். தலையில் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமாக கூந்தலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
குறிப்பாக இளநரையை தடுத்து, முடிக்கு வலுவூட்டும் பண்புகள் ஜோபோபோ எண்ணெயில் உள்ளது. கூந்தல் வறட்சி அடைவதை தடுத்து, முடி உதிர்வை தவிர்க்க உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips