• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அவகோடா ஆயிலை சருமத்தில் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

அவகோடா ஆயிலை சருமத்தில் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

அவகோடா ஆயில்

அவகோடா ஆயில்

மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளிட்ட பல அத்தியாவச ஊட்டச்சத்துகள் உள்ளன.

  • Share this:
நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அவகோடா பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆனைக்கொய்யா அல்லது வெண்ணெய் பழம், பால்டா, வெண்ணெய் பேரி உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த பழத்தில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கி உள்ளன.

ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி தோல் மற்றும் முடி சேதம் மற்றும் சிதைவுக்கான முக்கிய குறைபாடுகளை போக்குகிறது. அரிக்கும் தோலழற்சி, முகப்பரு போன்ற தோல் நிலைகளை சரி செய்யவும், சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்தவும், சருமத்திற்கு இளமை தோற்றத்தை அளிக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. அவகோடா பழ எண்ணெய் அடிப்படையிலான தயாரிப்புகள் நம் சருமத்திற்கு எவ்வாறு உதவுகின்றன என்பது குறித்த பல ஆய்வுகள் சிறந்த முடிவுகளை காட்டியுள்ளன.

ஈரப்பதம் மற்றும் ஊட்டம்..

அவகோடா எண்ணெயில் வைட்டமின் ஈ தவிர பொட்டாசியம், லெசித்தின் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருப்பதால் சருமத்தை ஈரப்பதமாகவும், ஊட்டமாகவும் வைத்திருக்கும். மேல்தோல் என்றழைக்கப்படும் தோலின் வெளிப்புற அடுக்கு இந்த எண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சிவிடும். இது புதிய சருமத்தை உருவாக்க உதவுகிறது.



வயதான அறிகுறிகளை குறைக்கும்..

வயது ஏறி கொண்டே செல்வதற்கான முதல் மற்றும் பொதுவான அறிகுறி தோலில் தான் தோன்றும். இந்த பழத்தில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையைத் தக்க வைத்து, இளமையான தோற்றத்தை பராமரிக்க உதவுகிறது. முக சுருக்கங்களுக்கு அவகோடா ஆயிலை பயன்படுத்துவது மிகவும் சிறந்த வழி. இதை மேற்பூச்சாகப் பயன்படுத்தும் போது, தோல் வறட்சியை எதிர்த்துப் போராடும். மேலும் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கக்கூடும்.

ஃப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்து போராடும்..

ஃப்ரீ ரேடிக்கல்ஸ் ஏஜ் ஸ்பாட்ஸ் எனப்படும் சரும சுருக்கங்கள் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற தீவிரமான மற்றும் அனைத்து வகையான தேவையற்ற தோல் மாற்றங்களுக்கும் காரணமாக அமைகின்றன. எனவே ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த அவகோடா ஆயிலை சருமத்தின் மேல் பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற தோல் மாற்றங்களுக்கான வாய்ப்புகளை குறைக்க முடியும்.



வெயிலால் ஏற்படும் சரும சிவப்பு..

அவகோடா ஆயிலில் காணப்படும் பீட்டா கரோட்டின், புரதம், லெசித்தின், கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, டி மற்றும் ஈ ஆகியவை உங்கள் சருமத்தை புற ஊதா கதிர்களை சேதப்படுத்தாமல் ஈரப்படுத்தவும் பாதுகாக்கவும் உதவுகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களால் கடும் வெயிலில் வெளியே செல்லும் போது ஏற்படும் சருமம் சிவப்பது உள்ளிட்ட எதிர்மறையான விளைவுகளை குறைக்க உதவும்.

காயங்களை ஆற்ற..

அவகோடா ஆயில் சரும கோளாறுகளுக்கு மட்டுமல்லாமல் காயங்களை குணப்படுத்தவும் உதவும். இதில் உள்ள லினோலிக் அமிலம், ஒலிக் அமிலம் மற்றும் பிற மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் காயம் குணமடையும் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

கோடையிலும் உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும் கோதுமை மாவு ஃபேஸ் பேக்!

வீக்கம் மற்றும் தோல் எரிச்சலை குறைக்கும்..

இந்த எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சியுடன் தொடர்புடைய வறண்ட, எரிச்சல் மிக்க சருமத்தை குணப்படுத்த உதவும்.

முகப்பருவை தடுக்க உதவும்..

அவகோடா ஆயிலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சருமத்தின் மேல்தோல் எளிதில் ஈர்த்து கொள்ளும் என்பதால், இந்த ஆயிலை சருமத்தில் அப்ளை செய்து விட்டு, சிறிது நேரம் கழித்து வெதுவெது நீரில் கழுவும் போது, சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும் அவகொடா ஆயில். இது முகப்பரு அபாயத்தை குறைக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: