• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகை மேம்படுத்தவும் உதவும் அவகோடா பழம் : எப்படி தெரியுமா..?

ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகை மேம்படுத்தவும் உதவும் அவகோடா பழம் : எப்படி தெரியுமா..?

அவகோடா

அவகோடா

அவகோடா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இருதய சம்பந்தமான பிரச்சனைகள் வருவதை தடுத்து நிறுத்தும். கருவுற்ற பெண்கள் இந்த அவகோடா பழத்தை தாராளமாய் சாப்பிடலாம்.

  • Share this:
எண்ணெய்ச் சத்து மிகுந்த அவகோடா பழத்தின் சதைப் பகுதி வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. வறண்ட சருமத்தினருக்கு இப்பழம் ஒரு வரப் பிரசாதம். எண்ணெய் சத்து மிகுந்த இப்பழம் அழகு சாதனப் பொருட் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது.

மேலும் இதில் நார்ச்சத்து, 20க்கும் மேற்பட்ட தாதுக்கள், புரதம், வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. ஆரோக்கியமான இதயத்தை பராமரிப்பதில் முக்கியமானதாக இருக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு இந்த பழத்தில் நிறைந்துள்ளது. அவகோடா பழத்தில் உள்ள நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

ஆரோக்கியமாக இருக்க :

அவகோடா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இருதய சம்பந்தமான பிரச்சனைகள் வருவதை தடுத்து நிறுத்தும். கருவுற்ற பெண்கள் இந்த அவகோடா பழத்தை தாராளமாய் சாப்பிடலாம். அவகோடா பழத்தில் போலிக் எனும் வைட்டமின் அதிகமாக உள்ளது. இந்த போலிக் வைட்டமின் தாயிற்கும் வயிற்றில் இருக்கக்கூடிய குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக உள்ளது. மேலும் இந்த பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே பருவகால நோய்களை நம்மை அண்டாமல் இருக்க இதனை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது:

அவகோடாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் பி 6, ஏ, ஈ மற்றும் சி நிறைந்துள்ளது. மேலும் இதில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சரும அழகை பராமரிக்கவும் உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. அவை உயிரணுக்களின் மீளுருவாக்கத்தை அதிகரிக்கின்றன. இவை இரண்டும் நம்மை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவுவதால், அவகோடா பழத்தை சாப்பிடுபவர்கள் சருமம் பொலிவாக இருக்கும்.



முடி வளர்ச்சிக்கு :

வெண்ணெய் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ முடி வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் வைட்டமின் சி ஆரோக்கியமான கொலாஜனை அதிகரிப்பதால் தோல் திசுக்கள் வளர்ச்சியடைந்து சருமம் பொலிவாகும்.

அழகு சாதனங்கள் தயாரிப்பு :

சருமம் மற்றும் கூந்தல் சார்ந்த அழகு சாதனங்கள் தயாரிப்பதில் அவகோடா முக்கிய பங்காற்றுகிறது. அவகோடா பழம் பேஸ் வாஷ், ஷாம்புகள், உடல் வெண்ணெய், குளியல் எண்ணெய்கள், க்ரீம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் தற்போது பெரும்பாலான பார்லர்களில் அவகோடா பேஷியல் கூட செய்யப்படுகிறது. இது சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சரும அழகை பராமரிக்க உதவுகிறது.

உடல் எடையை குறைப்போர் இந்த 5 டிரிங்ஸ் பழக்கத்தை கைவிட வேண்டும்..!

அவகோடா பழத்தை சருமம் மற்றும் கூந்தலுக்கு நேரடியாக கூட பயன்படுத்தலாம்.,

கூந்தலுக்கு :

உங்கள் கூந்தல் உறுதியாகவும், அடர்த்தியாகவும் வளர அவகோடா பழத்தை நேரடியாக பயன்படுத்தலாம். அதற்கு ஒரு பவுலில் பழத்தின் சதை பகுதியை எடுத்து அதனுடன், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை ஹேர் பேக்காக உங்கள் தலைமுடிக்கு தடவவும், அப்படியே 30 நிமிடங்கள் விட்டு பின்னர் ஷாம்பூ கொண்டு வாஷ் செய்யவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.



அவோகேடோ ஸ்கரப் :

பொதுவாக ஸ்கரப் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வெண்ணெய் பழத்தை வேக வைத்து மசித்து, சிறிது சர்க்கரை, பால் சேர்த்து முகத்தில் தடவி 5 நிமிடங்கள் மிதமாக ஸ்க்ரப் செய்து பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் சருமம் பொலிவாகும்.

பேஸ் பேக் :

அவோகேடோ பேஸ் பேக் தயார் செய்ய பப்பாளியை மசித்து, அத்துடன் வேக வைத்துள்ள அவோகேடோவின் பழத்தை சேர்த்து, சிறிது தேன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 10-15 உலர விட்டு பின்னர் கழுவ வேண்டும். இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தால் உங்கள் சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி சருமம் அழகாகும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: