• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முதுகில் இருக்கும் பருக்களை நீக்கவேண்டுமா? இந்த இயற்கை டிப்ஸ்களை பின்பற்றுங்கள்..

முதுகில் இருக்கும் பருக்களை நீக்கவேண்டுமா? இந்த இயற்கை டிப்ஸ்களை பின்பற்றுங்கள்..

மாதிரி படம்

மாதிரி படம்

முதுகில் இருக்கும் சிறு சிறு பருவை பொதுவாக "பேக் ஆக்னி" என்று அழைக்கப்பார்கள்.

  • Share this:
முதுகில் இருக்கும் சிறு சிறு பருவை பொதுவாக "பேக் ஆக்னி" என்று அழைக்கப்பார்கள். இவை முக பருக்கள், ஒயிட்ஹட்ஸ் அல்லது பிளாக்ஹெட்ஸை விட, ரொம்ப நாள் உடலில் இருக்கும் அதனை அப்படியே விட்டுவிட்டால் உடல் எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புண்டு. முதுகுப் பரு பார்ப்பதற்கு முகப்பருவை போலவே தான் இருக்கும் ஆனால் இது முகப்பருவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

இது வருவதற்கான காரணங்களும் வேறுபட்டவை. இவை பல காரணங்களால் ஏற்படும் இதனை சிவப்பு புடைப்புகள், ஒயிட்ஹெட்ஸ், பிளாக்ஹெட்ஸ் மற்றும் முடிச்சுகள் என்றும் வகைப்படுத்தி கூறுவார்கள்.இந்த சிக்கல் உங்களுக்கிருந்தால் பின்வரும் பதிவை கவனமாக படித்து பலன் பெறுங்கள்.

முதுகில் பருக்கள் வர காரணம்:

பொடுகு, ஹார்மோன் பிசிஓடி (Hormonal PCOD), ஃபோலிகுலிடிஸ், இறுக்கமான ஆடை அல்லது உராய்வு, ஹேர்கேர் தயாரிப்புகள், ஷேவிங் மற்றும் வேக்ஸிங், எண்ணெய் தேய்ப்பது, ஸ்கின் க்ரீம்கள் போன்றவையே முதுகில் பருக்கள் வர முக்கிய காரணமாகின்றன.

முதுகில் வரும் பருக்களை தடுக்க என்னதான் வழி என்றால், மார்க்கெட்டில் விற்கப்படும் தயாரிப்புகளை பயன்படுத்தினால் அவை நிச்சயம் பின்விளைவுகளை ஏற்படுத்தும். பின்வரும் இயற்கை முறைகளை பயன்படுத்தினால் அவை நல்ல பலனை தரும்.



சந்தனம்:

சந்தனம் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைப் போக்கும். சந்தனத்தை ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முதுகில் தடவி இரவு முழுவதும் குப்புற படுக்க வேண்டும். மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். முதுகில் பருக்கள் மறைவதுடன் முதுகிற்கும் குளிர்ச்சி கிடைக்கும்.

கற்றாழை:

கற்றாழை ஜெல்லை தினமும் முதுகில் தடவி வர, பருக்களால் முதுகில் ஏற்படும் சிவப்பும், வீக்கமும் குறையும். ஏனெனில் கற்றாழையில் அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. கற்றாழை ஜெல்லை மஞ்சளுடன் சேர்த்து அதை முதுகில் அப்ளை செய்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

தேன்:

தேன் மிகவும் சிறப்பான நோயெதிர்ப்புப் பொருள். உங்களுக்கு முதுகில் பருக்கள் அதிகம் இருப்பின், தேனை நேரடியாக அல்லது தயிருடன் சேர்த்து முதுகில் தடவிக் கொள்ளவும். இல்லையெனில் 3 டேபிள் ஸ்பூன் தேனுடன் 1 டேபிள் ஸ்பூன் பட்டைத் தூளுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முதுகில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்தாலும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.



தக்காளி:

தக்காளி பல நன்மை தரும் உபாயங்களை நகருக்கு செய்கின்றன. தக்காளியை இரண்டாக வெட்டி, அதனை நேரடியாக முதுகில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முதுகில் உள்ள பருக்கள் மட்டுமின்றி, அதனால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறும் முதுகில் உள்ள பருக்களைப் போக்கும். அதற்கு சரிசம அளவில் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முதுகில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன் மூலமும் முதுகில் உள்ள பருக்கள் மறையும். எலுமிச்சை சாறால் சருமம் எரியும் என்று நினைக்க வேண்டாம். வலியில்லாமல் நல்ல ரிசல்ட் கிடைக்காது.

மேற்சொன்னது மட்டுமல்லாமல், சரியான தோல் பராமரிப்பு க்ரீம், ஷாம்புவை நாம் பயன்படுத்த வேண்டும். முதுகில் ஸ்கர்ப் வைத்து தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். மென்மையான நறுமணம் கொண்ட ஆண்டி ஃபேக்டிரியா சோப்பை பயன்படுத்த வேண்டும். இறுக்கமான துணிகளை அணிவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். முடிந்த அளவிற்கு ஷாம்புவை முதுகில் படாமல் தலைக்கு குளிப்பது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: