ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

முடி அதிகமாக கொட்டாமல் இருக்க இந்த 5 கெமிக்கல்ஸ் உள்ள ஷாம்பூவை வாங்காதீர்கள்!

முடி அதிகமாக கொட்டாமல் இருக்க இந்த 5 கெமிக்கல்ஸ் உள்ள ஷாம்பூவை வாங்காதீர்கள்!

Prevent Hair Loss | உங்கள் ஷாம்பு அல்லது கண்டிஷனரில் இருக்கக்கூடாத ஒரு முக்கிய மூலப்பொருள் இந்த சல்பேட்ஸ். இது உங்கள் முடிக்கும், உடலுக்கும் கேடு ஏற்படுத்தும். உடலில் ஹார்மோன் உற்பத்தியையும் இவை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

Prevent Hair Loss | உங்கள் ஷாம்பு அல்லது கண்டிஷனரில் இருக்கக்கூடாத ஒரு முக்கிய மூலப்பொருள் இந்த சல்பேட்ஸ். இது உங்கள் முடிக்கும், உடலுக்கும் கேடு ஏற்படுத்தும். உடலில் ஹார்மோன் உற்பத்தியையும் இவை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

Prevent Hair Loss | உங்கள் ஷாம்பு அல்லது கண்டிஷனரில் இருக்கக்கூடாத ஒரு முக்கிய மூலப்பொருள் இந்த சல்பேட்ஸ். இது உங்கள் முடிக்கும், உடலுக்கும் கேடு ஏற்படுத்தும். உடலில் ஹார்மோன் உற்பத்தியையும் இவை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

முடி உதிர்வு பிரச்சனை இன்றைய வாழ்வியல் சூழலில் பலருக்கும் உள்ளது. இதை சரிசெய்ய என்னென்னவோ செய்து பார்ப்போம். உதாரணமாக, எண்ணெய்யை மாற்றுதல், வேற ஷாம்பூ பயன்படுத்துதல், ஹேர் பேக் போடுதல்... இப்படி பலவற்றை முயற்சி செய்வோம். ஆனால், இவற்றினால் நமக்கு பெரிய அளவில் எந்த நன்மையும் ஏற்படாது. இதற்கு முக்கிய காரணம் இதில் சேர்க்கப்படும் வேதி பொருட்கள் தான்.

இதை பற்றி பெரும்பாலும் நாம் அறிந்திருப்பதே இல்லை. இவற்றால் தான் நமது முடி உதிரும் பிரச்சனை மேலும் அதிகமாகி விடுகிறது. இந்த பதிவில் நீங்கள் பயன்படுத்த கூடிய ஷாம்பூ அல்லது கண்டிஷனரில் இருக்க கூடாத 5 மோசமான கெமிக்கல்ஸ் பற்றி பார்ப்போம்.

ஆல்கஹால்:

ஆல்கஹால் மூலப்பொருட்கள் உள்ள ஷாம்புகள் சில வருடங்களாக டிரெண்டில் இருந்தாலும், இவை உங்கள் தலைமுடிக்கு எந்த நன்மையும் செய்யாது. அதற்கு மாறாக சில பாதிப்புகளை ஏற்படுத்தும். தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்துவிட்டு இது போன்ற ஷாம்பூக்களை வாங்கி விடுகிறோம். ஆனால் இவை தலை பகுதியை வறண்டு போக செய்கிறது மற்றும் முடி உடைதலையும் ஏற்படுத்துகிறது. ஆல்கஹால் கொண்ட ஷாம்புகள் உங்கள் தலைமுடியை சிறிது நேரம் பளபளப்பாக வைத்திருக்கும். எனவே உங்கள் ஷாம்பூ பாட்டிலில், புரோபனோல் மற்றும் ஐசோபிரைல் ஆல்கஹால் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருந்தால் அவற்றை வாங்காதீர்கள்.

அதீத நறுமணங்கள்:

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வாசனை கொண்ட மூலப்பொருட்களை ஷாம்பூவில் சேர்க்கின்றனர். நீங்கள் வாங்கக்கூடிய ஷாம்பூ அல்லது கண்டிஷனரின் நறுமணம் சேர்க்கப்பட்டிருந்தால், இவற்றை வாங்காமல் இருப்பது நல்லது. செயற்கையான முறையில் வாசனை பொருட்களைக் கலந்து விற்கப்படும் ஷாம்பூக்களை பயன்படுத்தினால் முடி உதிர்தல் பிரச்சனை அதிகரிக்கும். எனவே இவற்றை முழுமையாக தவிர்க்கலாம்.

செயற்கை நிறங்கள்:

மிக அழகான தோற்றமுடைய ஷாம்பு பாட்டில்கள் நச்சுகள் நிறைந்தவை. இவற்றில் தீங்கு விளைவிக்கும் செயற்கை இரசாயனங்களால் தயாரித்த ஷாம்பூக்கள் பெரும்பாலும் இருக்கின்றன. இத்தகைய பொருட்களை உங்கள் தலைமுடியில் அதிகமாகப் பயன்படுத்தினால், உங்கள் தலைமுடி மோசமாக பாதிக்கப்படும். மேலும் இவை உங்கள் முடியின் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றிவிடும். எனவே அடுத்த முறை நீங்கள் ஷாம்பூ வாங்கும் போது, அதன் தோற்றத்தை வைத்து மதிப்பிடாமல், அதில் உள்ள மூலப்பொருட்களை கொண்டு மதிப்பிடுங்கள்.

Also Read : மூளையின் செயல்பாட்டையும் அதிகரிக்கும்… தேங்காய் எண்ணெயின் மலைக்கவைக்கும் நன்மைகள்!

சல்பேட்ஸ்:

உங்கள் ஷாம்பு அல்லது கண்டிஷனரில் இருக்கக்கூடாத ஒரு முக்கிய மூலப்பொருள் இந்த சல்பேட்ஸ். இது உங்கள் முடிக்கும், உடலுக்கும் கேடு ஏற்படுத்தும். உடலில் ஹார்மோன் உற்பத்தியையும் இவை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். மேலும் சல்பேட்டுகள் உங்கள் தலைமுடியை வறட்சியாக்கும். எனவே சல்பேட் உள்ள ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.

பாராபின்ஸ் மற்றும் ஃபார்மால்டிஹைட்:

பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களில் அதிக அளவில் பாதுகாப்புக்கான வேதி பொருட்கள் சேர்க்கப்படும். இந்த வகையை சேர்ந்த கெமிக்கல்ஸ் தான் பாராபின்ஸ் மற்றும் ஃபார்மால்டிஹைட் என்பவையும். ஆனால், இவை உங்கள் தலைமுடிக்கு மட்டுமல்லாமல், உங்கள் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே ஷாம்பூ வாங்கும்போது எச்சரிக்கையாக இருங்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Hair care, Hair Conditioner, Hair loss, Shampoo