அனிதா சம்பத் நிறை vlog வீடியோக்களை போட்டாலும் வாரத்தில் ஒரு பியூட்டி டிப்ஸ் வீடியோவை பகிர்ந்துவிடுவார். இதற்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். காரணம் அனிதாவின் அழகுக் குறிப்புகள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையான முறையில் இருக்கும். சில குறிப்புகள் வீட்டு கிட்சன் பொருட்களை வைத்தே கூறுவார். சில நாட்கள் முன்பு பட்ஜெட்டிற்குள் எப்படி மேக்அப் பிராண்ட் பொருட்களை வாங்குவது என வீடியோ போட்டிருந்தார். அது டிரெண்டாகி பல பார்வையாளர்களைக் கடந்தது. இப்போது அவர் தலைமுடி பராமரிப்பு குறித்து பகிர்ந்துள்ள வீடியோவும் டிரெண்டாகியுள்ளது.
அதாவது தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால்தான் தலைமுடி பிரச்சனைகள் வருகின்றன. அதேபோல் சிலர் ஒருவித துர்நாற்ற பிரச்சனையையும் அனுபவிக்கக் கூடும். அவர்களுக்காகவே எளிமையான ஹேர் பேக் பகிர்ந்துள்ளார். இதை வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்தே செய்யலாம்.
பொதுவாக தலைமுடியில் துர்நாற்றம் என்பது வியர்வையினால் வரும் அல்லது தலையில் சுரக்கும் எண்ணெய் காரணமாகவும் வரலாம். வியர்வை சிலருக்கு ஹெல்மெட் அணிவதாலும் வரலாம். அதனால் துர்நாற்றத்தை அனுபவிக்கலாம். இதற்கு சிறந்த வழியாக நெல்லிக்காய்களை வாங்கி அவற்றை நறுக்கொ வெயிலில் காய வைக்க நன்கு காய்ந்துவிடும். பின் அவற்றை அரைத்து பொடியாக்கிக்கொள்ளுங்கள். பின் தண்ணீர் கலந்து தலைமுடி வேர்களில் தடவுங்கள் என்கிறார்.
20 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து பின் எப்போதும்போல் தலைக்கு குளித்துவிடச் சொல்கிறார். இவ்வாறு தொடர்ந்து செய்துவர துர்நாற்றம் போய்விடும். மற்ற தலைமுடி பிரச்சனைகளும் சரியாகலாம் என்கிறார்.
இதுமட்டுமன்றி வறண்ட அல்லது ஈரப்பதம் இல்லாத தலைமுடியை போஒக்க தேங்காய் பால் டிப்ஸ் உதவும் என்கிறார். அதாவது தண்ணீர் கலக்காமல் தூய தேங்காய் பாலை வடிகட்டி பஞ்சை நனைத்து தலைமுடி வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். பின் அப்படியே தலைமுடியை விடாமல் பாலிதீன் கவரால் முடியை மூடிவிடுங்கள். 20 நிமிடங்கள் ஊற வைத்ததும் எப்போதும்போல் தலைக்கு குளித்துவிடுங்கள் என்கிறார்.
உடல் எடையைக் குறைக்க காலையில் இந்த உணவை சாப்பிடுங்கள்...பிக்பாஸ் வனிதாவின் சீக்ரெட் இதுதானாம்...
மூன்றாவதாக உடல் வெப்பத்தால் உண்டாகும் முடி பிரச்சனைகளை சரி செய்ய வெந்தயத்தை இரவு ஊற வைத்து மறு நாள் காலை அதை அரைத்து அதோடு கொஞ்சம் தயிர் சேர்த்து அரைக்க வேண்டும். பின் எலுமிச்சை சாறு பிழிந்து கலந்துகொள்ளுங்கள். அதை தலையில் தடவி 20 நிமிடங்கள். ஊற வைத்து பின் அலசலாம் என்கிறார்.
அடுத்ததாக கற்றாழையை அரைத்து தலையில் தடவலாம். இதனால் முடிக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பலன் கிடைக்கும் என்கிறார். பொதுவான டிப்ஸாக தலைக்கு குளித்துவிட்டு இறுதியாக கண்டிஷ்னர் போல் அரிசி ஊற வைத்த தண்ணீரைக் கொண்டு அலசிவிடுங்கள். பின் 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் முடியை கழிவிவிடுங்கள். இவறையெல்லாம் முறையாக செய்துவர முடி தொடர்பான பிரச்சனைகளே இருக்காது என்கிறார். தலைமுடியும் அடர்த்தியாக , உறுதியாக இருக்கும் என நிறைவு செய்கிறார் அனிதா சம்பத்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anitha sampath, Beauty Tips, Hair care, Hair Damage, Hair Problems, Home remedies