ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கொத்து, கொத்தா முடி கொட்டுதா..? காரணங்களும்... சரி செய்யும் வழிகளும்...

கொத்து, கொத்தா முடி கொட்டுதா..? காரணங்களும்... சரி செய்யும் வழிகளும்...

முடி உதிர்வு

முடி உதிர்வு

உள் மற்றும் வெளிப்புற காரணிகளை சரியாக கவனித்துக் கொண்டாலே நீங்கள் விரும்புவது போல கருமையான, அடர்த்தியான, பொலிவான கூந்தலை பெற முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கும் போதும், முடியை சீவும் போதும், கூந்தலுக்கு எண்ணெய் தடவும் போது கொத்து, கொத்தாக கொட்டும் முடியை பார்த்து உங்களுடைய இதயமே உடைந்துவிடுகிறதா?. அப்படியானால் அதற்கான காரணம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆண், பெண் என பேதமின்றி அனைவருக்குமே தங்களது முடி நல்ல ஆரோக்கியத்துடன் பளபளக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நமது தலைமுடி அழகாக, பொலிவுடன், உறுதியாக இருந்தால் நமது நம்பிக்கையும் அதிகரிக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு நீண்ட, கருமையான கூந்தல் வளர வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. ஆனால் அது எல்லாருக்கும் அமைவதில்லை. பெரும்பாலானோர் தலைக்கு ஷாம்பு பயன்படுத்தும் போதும், எண்ணெய் தடவும் போதும், கூந்தலை சீவி விடும் போதும் கூட கொத்து, கொத்தாக முடி கொட்டுவதை கண்டு வேதனை அடைந்து வருகின்றனர்.

ஆனால் நீங்கள் அதற்கான காரணம் பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா?. பிளான்டாஸ் நிறுவனர் கௌதம் தார் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்ட, கூந்தல் பற்றிய சில நுட்பமான விஷயங்களை தற்போது காணலாம்.

உட்புற காரணங்கள்:

1. முறையற்ற உணவு முறை:

2. கூந்தலுக்குத் தேவையான இரும்புச்சத்து அல்லது ஃபோலிக் அமிலம் மற்றும் பிற சத்துக்களின் குறைபாடு முடி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

3. மன அழுத்தம் முடி உதிர்வுக்கு முக்கிய காரணியாக அமைகிறது.

4. உடம்பில் ஏதாவது நோய் அல்லது தொற்று பரவினால் அதன் தாக்கமும் முடியை பாதிக்க வாய்ப்புள்ளது.

Green Apple Benefits : பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளை பெறலாமா..? மிஸ் பண்ணிடாதீங்க

5. ஷாம்பு, கண்டிஷனர், சீரம் என கூந்தல் பராமரிப்புக்காக மார்கெட்களில் விதவிதமான பிராண்ட்களில் பொருட்கள் கொட்டிக்கிறது. ஆனால் அதில் உங்களுடைய கூந்தல் வகைக்கு ஏற்ற பராமரிப்பு பொருட்களை தேர்வு செய்வதில் கவனம் தேவை.

6. தலைமுடி அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் மாசுபாடுகளுக்கு வெளிப்படுகிறது. இதனால் மிகவும் குளிர்ந்த காற்று, வெப்பம் ஆகியன முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.

உள் மற்றும் வெளிப்புற காரணிகளை சரியாக கவனித்துக் கொண்டாலே நீங்கள் விரும்புவது போல கருமையான, அடர்த்தியான, பொலிவான கூந்தலை பெற முடியும். நிபுணர்களின் கூற்றுப்படி, ரசாயனங்கள் இல்லாத உண்மையான ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்ய சிறந்த வழியாகும்.

சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது அல்லது சரியான சமச்சீர் உணவை உட்கொள்ளாது கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. மனித உடல் ஆரோக்கியமாக இயங்க எப்படி உணவு அவசியமானதோ, அதேபோல் முடியின் வேர்களை வலுவாக்கவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சத்தான உணவு தேவை. கூந்தலுக்கு நல்ல ஊட்டசத்து நிறைந்த ஆர்கானிக் எண்ணெய்களை பயன்படுத்துவது கூடுதல் வலிமை சேர்க்கும்.

பயணத்தின் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 ஸ்கின்கேர் டிப்ஸ்..!

ஒவ்வொரு முறை கூந்தலை அலசிய பிறகும் உச்சத்தலை சுத்தமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். முடிக்கு ஊட்டமளிக்க முடியின் எண்ணெய் பசையை அகற்றாமல், கெமிக்கல் கலப்பு இல்லாத மாய்ஸ்சரைசிங் ஷாம்பூவை தேர்ந்தெடுங்கள். மேலும் இதனுடன் கூடுதல் ஊட்டத்து மற்றும் பாதுகாப்பு அளிக்க கூடிய கண்டிஷனரையும் பயன்படுத்தலாம்.

கூந்தலுக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகு, அது நன்றாக உலர்ந்தவுடன் சீரம் தடவுங்கள். சீரம் கூந்தலுக்கு கூடுதல் ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு அளித்து, அதனை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். மேலும் இது காலநிலை மாற்றத்தால் கூந்தலுக்கு ஏற்படக்கூடிய தீமைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

முதலில் உங்கள் முடி உதிர்வுக்கான காரணத்தை கண்டுபிடியுங்கள். அதன் பின்னர் அதை சரி செய்வதற்கான தீர்வை சுலபமாக தேர்ந்தெடுக்கலாம். ஆனால் தேவையின்றி தலைமுடி உதிர்வு பிரச்சனை பற்றி கவலை கொள்ளாதீர்கள். அப்படி நீங்கள் செய்வதால் முடி உதிர்வு மேலும் மோசமாகக்கூடும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Hair care, Hair fall