Home /News /lifestyle /

கொரோனா அச்சுறுத்தல்: இந்த நேரத்தில் பார்லர், சலூன் செல்கிறீர்களா..?

கொரோனா அச்சுறுத்தல்: இந்த நேரத்தில் பார்லர், சலூன் செல்கிறீர்களா..?

கோப்புப்படம்

கோப்புப்படம்

கொரோனா அச்சுறுத்தல்கள் அடங்கும் வரை பார்லர் , மசாஜ் செண்டர்கள், சலூன் செல்லாமல் தவிர்ப்பது நல்லது.

    ஒருவரையொருவர் சந்தித்துப் பேசுவதே ஆபத்து என்று கூறிவரும் நிலையில் பார்லர் , சலூன், மசாஜ் செண்டர்கள் செல்வது சரியா?

    ஏனெனில் தொடுதல் இல்லாமல் இதுபோன்ற இடங்களில் வேலை நடைபெறாது. அதுமட்டுமன்றி ஒருநாளைக்கு 10-க்கும் மேற்பட்டோர் வந்து செல்லக் கூடிய இடங்கள்தான் இவை. அங்கு மற்றவர்களுக்குப் பயன்படுத்தும் கருவிகளை என்னதான் சுத்தம் செய்தாலும் அதில் நோய் தொற்று அழிந்திருக்குமா என்பதும் சந்தேகம்தான்.

    நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்ததுபோல் இந்த கொரோனா வைரஸானது நீண்ட நாட்களுக்கு வாழக்கூடியது. இது தரைப்பகுதி, தொடும் இடம் என எங்கு வேண்டுமானாலும் படர்ந்திருக்கலாம்.

    ஒருவேளை பாதிக்கப்பட்ட யாரேனும் அங்கு இருமினால், தும்மினால் அதனால் தொற்றுகள் அங்கிருக்கும் நாற்காலி, மேசை, சீப்பு, கத்தி என எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஏன் அங்கு பணிபுரியும் ஊழியருக்கு அவருக்கே தெரியாமல் தொற்றுகள் இருக்கலாம். எனவே இந்த கொரோனா அச்சுறுத்தல்கள் அடங்கும் வரை பார்லர் , மசாஜ் செண்டர்கள், சலூன் செல்லாமல் தவிர்ப்பது  நல்லது.



    பார்லர்கள் கவனத்திற்கு :

    பார்லர் மற்றும் சலூன் கடைகளிலும் அடிக்கடி சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் அவசியம்.

    பணிபுரியும் ஸ்டைலிஸ்டுகளும் கைகளை ஒவ்வொரு முறையும் கழுவியப் பின் அடுத்த வாடிக்கையாளரை கவனிக்க வேண்டும்.

    வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதற்கான அடுத்தடுத்து சுத்தம் செய்யாமல் அப்படியே பணி செய்வது தவறு. சுத்தம் கருதி வாடிக்கையாளர்களிடமே எடுத்துரைத்தால் புரிந்துகொள்வார்கள்.

    பயன்படுத்தும் ஸ்டீல் பொருட்களை வெந்நீரில் கழுவி எடுத்தல் அவசியம். ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட கருவிகளையும் பயன்படுத்தலாம். அடிக்கடி டேபில், சேர்களை சுத்தம் செய்வதும் அவசியம்.

    வாடிக்கையாளர்கள் பார்லர் வரும்முன் முகத்தில் மாஸ்க் அணிந்து வருமாறு அறிவுறுத்துங்கள். கைகளை கழுவிய பின் இருக்கையில் அமர வையுங்கள்.

    படிக்க :

    சாதாரண காய்ச்சல், இருமலுக்கும் கொரோனாவிற்கும் வித்தியாசம் என்ன..?

    வறண்ட சருமத்தினர் முகத்திற்கு எந்த மாதிரியான கிரீம் பயன்படுத்த வேண்டும்..?

     

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி