Skincare : ஆர்கானிக் என நம்பி வாங்கும் உங்கள் காஸ்மெடிக் பொருட்கள் உண்மையில் ஆர்கானிக் தானா..? கண்டறிய சில டிப்ஸ்..!

ஆர்கானிக் காஸ்மெடிக்ஸ்

ஆர்கானிக் தோல் பராமரிப்பு பொருட்கள் என்பது நீங்கள் பயன்படுத்தப்படும் பொருட்கள் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், உரங்கள், ரசாயனங்கள், GMOக்கள் அல்லது இயற்கை ரசாயனம் என்று வேறு எந்த சேர்க்கையும் இல்லாதவை. ஆனால் ஒரு ஆர்கானிக் தயாரிப்பு என்பதை எவ்வாறு சரியாக சொல்ல முடியும்?

  • Share this:
ஆர்கானிக் என்பது இந்த நாட்களில் நாம் உபயோகிக்கும் முக்கிய வார்த்தைகளில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக மக்கள் எல்லாவற்றிலும் ஆர்கானிக் என்ற ஒரு முறைக்கு மாறிவிட்டனர். உணவு, உடைகள், தோல் பராமரிப்பு என அனைத்திலும் ஆர்கானிக் நிறைந்துள்ளது. டி-ஷர்ட் மற்றும் தோட்ட மண் முதல் சோப்பு வரையிலான தயாரிப்புகள் ஆகியவற்றில் ‘ஆர்கானிக்’ என்ற லேபிள்கள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் தயாரிப்புகள் உண்மையிலேயே ஆர்கானிக் தான என்ற கேள்வி நம்மில் எழுகிறது.

ஆர்கானிக் தோல் பராமரிப்பு பொருட்கள் என்பது நீங்கள் பயன்படுத்தப்படும் பொருட்கள் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், உரங்கள், ரசாயனங்கள், GMOக்கள் அல்லது இயற்கை ரசாயனம் என்று வேறு எந்த சேர்க்கையும் இல்லாதவை. ஆனால் ஒரு ஆர்கானிக் தயாரிப்பு என்பதை எவ்வாறு சரியாக சொல்ல முடியும்?

இதுகுறித்து அழகு தோல் மருத்துவர் மற்றும் தோல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரிங்கி கபூர் கூறியதாவது, துரதிர்ஷ்டவசமாக, ஆர்கானிக் பொருட்களைத் தரப்படுத்துவதில் இந்தியா இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் ஆர்கானிக் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான சரியான சட்டத்தை இப்போதுவரை லீகலாக வழங்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் எதுவும் தவறாக நடக்க கூடாது என்பதை உறுதிப்படுத்த கடுமையான சட்டபூர்வமான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.



ஆர்கானிக் பொருட்கள் மற்ற தயாரிப்புகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்று டாக்டர் கபூர் கூறியுள்ளார். பொதுவாக "வேதியியல் நிறைந்த தயாரிப்புகள் மற்றும் ஆர்கானிக் தயாரிப்புகள் பெரிதாக ஒவ்வாமை இல்லாதவை. அல்லது சிறிதளவேனும் ஒவ்வாமை எதிர்வினைகள், பிரேக்அவுட்கள் மற்றும் தோலில் அழற்சியை ஏற்படுத்தும்." என்று கூறினார்.

இதனை தொடர்ந்து கிளினிக் டெர்மடெக்கின் தோல் ஆலோசகர் டாக்டர் உர்வி பஞ்சால் கூறுகையில், "ஆர்கானிக் பொருட்களை பெரும்பாலும் பாதுகாப்பது என்பது மிகவும் கடினம். அவை ஆபத்தானது மற்றும் மாசு நுண்ணுயிர் வளர்ச்சிக்கு உட்பட்டது. பெரும்பாலும், உண்மையான உடல்நலம் மற்றும் பாதுகாப்பை வழங்குவதை விட சந்தைப்படுத்துதலுக்காகவே ஆர்கானிக் லேபிள்கள் சேர்க்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.

Skin Care | ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கும் சரும பராமரிப்பு பொருட்கள்- நல்லதா? கெட்டதா?

ஸ்கின்கேர் தயாரிப்புகள் உண்மையில் ஆர்கானிக் என்பதை எவ்வாறு கண்டறிவது?

ஆர்கானிக் தயாரிப்புகளுக்கான USFDA- சான்றிதழ்கள் 4 வெவ்வேறு நிலைகளில் கிடைக்கிறது. முதலாவது, 100% ஆர்கானிக்- இதில் ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மட்டுமே இருக்கும். இரண்டாவது 95% ஆர்கானிக்- இதில் ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யும் பொருட்கள் அடங்கும். மூன்றாவது ஆர்கானிக் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது- தோராயமாக 70% ஆர்கானிக் இதில் நிறைந்திருக்கும். நான்காவது குறிப்பிட்ட மூலப்பொருள் பட்டியலைக் கொண்டிருக்கும். அதாவது 70%திற்கும் குறைவான ஆர்கானிக் பொருட்களே இதில் அடங்கியிருக்கும். இவை இறுதி பேக்கேஜிங்கில் 'ஆர்கானிக்' என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது.



இதனை வாங்குவதற்கு முன்பு மனதில் வைத்துக்கொள்ள வேண்டியவை எவை?

இதுகுறித்து டாக்டர் கபூர் கூறியதாவது, ஒருவர் தயரிப்புகளின் மூலப்பொருள் பட்டியலைப் படிக்க வேண்டும் என்று கூறினார். எடுத்துக்காட்டாக, சில தயாரிப்புகள் ‘ஆர்கானிக் முறையில் வளர்ந்த இஞ்சியின் சக்தி’ என்று சந்தைப்படுத்தலாம். ஆனால் மூலப்பொருள் பட்டியலில், உண்மையான இஞ்சி வெறும் 3% ஆக இருக்கலாம். நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் , உங்கள் தோல் வகைக்கு ஏற்ப ஆர்கானிக் தோல் பராமரிப்புப் பொருளைத் தேர்ந்தெடுப்பது தான். உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால், ஒரு ஷியா வெண்ணெய் ஆர்கானிக் கிரீம் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெயை அகற்ற உதவாது.

வீட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களில் இருந்து இந்த ஆர்கானிக் பொருட்கள் எவ்வாறு வேறுபடுகின்றன?

இந்த தயாரிப்புகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதே ஒரு வித்தியாசம் என்று டெல்லியின் துவாரகாவின் ஆகாஷ் ஹெல்த்கேர் தோல் மருத்துவர் டாக்டர் பூஜா சோப்ரா கூறியுள்ளார். ஆனால் சில நேரங்களில் வீட்டிலேயே வைத்தியம் பார்ப்பது நீண்ட நேரத்திற்கு வேலை செய்யாது மற்றும் செயல்முறைக்கு நீண்ட நேரம் எடுக்கும். அதனால்தான் இதுபோன்ற ஆர்கானிக் தயாரிப்புகளை வாங்குவது சாத்தியமானது என்று மக்கள் கருதுகின்றனர். இருப்பினும், நம் தாய்மார்கள் மற்றும் பாட்டி அளித்த வைத்தியங்கள் சந்தைப்படுத்தப்பட்டு ஒரு வகையான ஆர்கானிக் பொருட்களில் நிரம்பியுள்ளன. அதேபோல் வீட்டு வைத்தியமாக இருந்தாலும் சரி ஆர்கானிக் தயாரிப்புகளாக இருந்தாலும் சரி ஒரு வாரத்தில் உங்கள் சருமத்தில் எந்த ஒரு அதிசயமும் நிகழாது என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.



நாம் வாங்கும் ஆர்கானிக் தயாரிப்புகளில் என்ன இருக்கிறது என்று தெரியுமா?

பெரும்பாலான மக்கள் தங்கள் நண்பர்கள் அல்லது சகாக்களின் பிராண்ட் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் அல்லது உண்மையில் ஆர்கானிக் தயரிப்புகளில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் பயன்படுத்த முற்படுகின்றனர். ஆனால், அவை அவர்களின் தோல் மற்றும் தோல் வகைக்கு ஏற்ப எந்தளவுக்கு பயனளிக்கும் என்பது சந்தேகம்தான்.

 
Published by:Sivaranjani E
First published: