சரும அழகை பராமரிக்க பல்வேறு தயாரிப்புகளை பயன்படுத்துவதில் பலரும் கவனம் செலுத்தினாலும் வீட்டிலேயே இருக்க கூடிய சில எளிய பொருட்களை வைத்து அழகை மேம்படுத்தி கொள்ளலாம். ஐஸ் க்யூப்ஸ்களை சரும அழகிற்காக பயன்படுத்துவது சமீப காலமாம் ஒரு பிரபலமான வீட்டு வைத்தியமாக ட்ரெண்டாகி வருகிறது.
ஆம், வழக்கமான தோல் பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்துவதோடு உங்கள் முக பொலிவிற்கு உங்கள் சரும நிலையைப் பொருட்படுத்தாமல் ஐஸ் க்யூப்ஸ்களை பயன்படுத்துவதால் சில அற்புத மற்றும் ஆச்சரிய நன்மைகள் கிடைக்கும் என்பது உங்ககளுக்கு தெரியுமா.! பரபரப்பான வேலைநாளுக்கு பிறகு தினசரி ஒருமுறையாவது ஐஸ் க்யூப்ஸ்களை பயன்படுத்தி முகம் மற்றும் கழுத்து பகுதிகளை மசாஜ் செய்வது சிறந்த பலன்களை கொடுக்கிறது.
முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது, எண்ணெய் தன்மை மற்றும் சன்பர்ன், முகப்பருவை குறைப்பது, ஸ்கின் போர்ஸ்களை இறுக்கமாக்குவது உள்ளிட்ட பல நன்மைகளை ஐஸ் க்யூப்ஸ் மசாஜ் கொண்டுள்ளது. இதை ஐஸ் ஃபேஷியல் என்றும் குறிப்பிடலாம். கருவளையங்களை நீக்கி ஒளிரும் சருமத்திற்கான திறவுகோலாகவும் இருக்கிறது.
வெறும் தண்ணீரால் ஆன ஐஸ் க்யூப்ஸ்களை பயன்படுத்துவதை காட்டிலும் சருமத்திற்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்களை மிக்ஸ் செய்து தயாரிக்கப்படும் ஐஸ் க்யூப்ஸ் இன்னும் பயனுள்ளவையாக இருக்கும்.
ரோஸ்வாட்டர் ஐஸ் க்யூப்ஸ்:
ஒரு சிறிய கப் கான்சென்ட்ரேட்டட் ரோஸ் வாட்டரை ஒரு கப் தண்ணீருடன் மிக்ஸ் செய்து ஐஸ் க்யூப் ட்ரேயில் ஊற்றவும். சில நிமிடங்களுக்கு பின் ஐஸ் க்யூப்சிகளான பிறகு முகத்திற்கு மசாஜ் செய்ய பயன்படுத்தவும். பொதுவாக ரோஸ்வாட்டர் நம் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. ரோஸ் வாட்டரில் வைட்டமின் சி மற்றும் பினாலிக்ஸ் நிறைந்துள்ளது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தோலில் ஏற்படும் சிவப்பை குறைக்க, வீக்கத்தைத் தடுக்கவும், முகப்பருவால் ஏற்படும் அசௌகரியத்தைத் தணிக்க உதவும்.
Also Read : சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் : எப்படி பயன்படுத்த வேண்டும்..?
குங்குமப்பூ ஐஸ் க்யூப்ஸ்:
சிறிதளவு குங்குமப்பூ பீஸ்களை எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து இந்த கலவையில் ரோஸ் வாட்டரை மிக்ஸ் செய்யவும். பின்னர் ஐஸ் க்யூப் ட்ரேயில் ஊற்றி ஐஸ் க்யூப்ஸ்களாக ரெடி செய்து கொள்ளவும். இந்த ஐஸ் க்யூப்ஸை கொண்டு முகத்தில் மசாஜ் செய்வதன்மூலம் மேச்சுரல் டோனராக பயன்படுத்தலாம். ஃபேட் டேனிங், பிரவுன் ஸ்பாட்ஸ், பிக்மென்டேஷன் மற்றும் பருக்களை நீக்க இந்த குங்குமப்பூ ஐஸ் க்யூப்ஸ் உதவும்.
மஞ்சள் ஐஸ் க்யூப்ஸ்:
மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. ஒரு கப் ரோஸ் வாட்டரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இந்த மிக்ஸிங்கை ஐஸ் மோல்டில் ஊற்றி ஃப்ரீஸ் செய்து பயன்படுத்தலாம். மஞ்சள் சரும செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது, கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை போக்க உதவுகிறது.
Also Read : புருவத்தை அழகாக ஹைலைட் செய்து காட்ட இந்த 6 ஸ்டெப் போதும்..!
வெள்ளரி & எலுமிச்சை ஐஸ் க்யூப்ஸ்:
ஒரு சிறிய பீஸ் வெள்ளரியை எடுத்து தண்ணீர் கலந்து நன்கு பிளென்ட் செய்து அதில் சிறிதளவு எலுமிச்சையை சாற்றை பிழியவும். சில மணி நேரங்கள் இக்கலவையை ஃப்ரீஸ் செய்த பிறகு எடுத்து பயன்படுத்தவும். வெள்ளரி & எலுமிச்சை இரண்டுமே நம் சருமத்தை இயற்கையாக சுத்தப்படுத்தி பளபளப்பாக உதவும் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகும்.
கற்றாழை & துளசி ஐஸ் க்யூப்ஸ்:
ஒரு கப் தண்ணீரில் சில துளசி இலைகளை நசுக்கி அதன் சாறு இறங்கும் வகையில் நன்றாக கலக்கவும். பின் இதில் 2 டீஸ்பூன் ஆர்கானிக் அலோ வேரா ஜெல்லை மிக்ஸ் செய்யவும். இப்போது இந்த கலவையை ஒரு ஐஸ் கியூப் ட்ரேயில் ஊற்றி ப்ரீஸரில் வைக்கவும். சில நிமிடங்கள் கழித்து இந்த மிக்ஸிங் ஐஸ் க்யூப்ஸ் ஆனதும் எடுத்து சருமத்திற்கு மசாஜ் செய்ய பயன்படுத்தவும். கற்றாழை & துளசி இரண்டுமே சருமம் மற்றும் உடலுக்கு சிறந்தவை. கற்றாழை அதிக எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது, முகப்பருவை குணப்படுத்துகிறது. துளசி ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்படுகிறது. எனவே இந்த கலவை சருமத்திற்கு அற்புதங்களை செய்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.