Home /News /lifestyle /

முகம் பளிச்சென்று பிரகாசிக்க் பீட்ரூட் மாஸ்க்... எப்படி அப்ளை செய்வது..?

முகம் பளிச்சென்று பிரகாசிக்க் பீட்ரூட் மாஸ்க்... எப்படி அப்ளை செய்வது..?

பீட்ரூட் மாஸ்க்

பீட்ரூட் மாஸ்க்

பீட்ரூட்டில் விட்டமின் சி இருப்பதால் முகத்தில் தூசு, தேவையற்ற இறந்த செல்களை நீக்க உதவும். கருவளையங்கள், கரும்புள்ளிகள் மறையும்.

    பீட்ரூட் இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்க உதவும் காய்கறி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இப்படி இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் அது உங்கள் சருமம் மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கும் நல்லது என்பது தெரியுமா..? அதோடு அதை சருமப் பராமரிப்பிற்காகவும் பயன்படுத்தலாம். எப்படி என்று பார்க்கலாம்.

    பீட்ரூட் மாஸ்க் எப்படி செய்வது..?

    பீட்ரூட்டை அரைத்து அதன் சாறை எடுத்துக்கொல்ளுங்கள். அதில் தயிர், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் பீட்ரூட் ஃபேஸ் மாஸ்க் தயார்.



    எப்படி அப்ளை செய்வது..?

    மாஸ்க் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை நன்கு கழுவிக்கொள்ளுங்கள். நன்கு துடைத்துவிட்டு முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

    20 முதல் 25 நிமிடங்கள் ஊற வையுங்கள். நன்கு காய்ந்ததும் முகத்தில் தண்ணீர் தெளித்து வட்டப்பாதையில் தேய்த்து மசாஜ் செய்து பேக்கை கழுவுங்கள். வெதுவெதுப்பான நீர் பயன்படுத்துங்கள். இறுதியாக முகத்தில் ஈரப்பதம் இருக்க மாய்சரைஸர் அப்ளை செய்யுங்கள்.

    இப்படி வாரம் இரண்டு முறை இந்த பீட்ரூட் மாஸ்க் அப்ளை செய்யுங்கள். பீட்ரூட்டில் விட்டமின் சி இருப்பதால் முகத்தில் தூசு, தேவையற்ற இறந்த செல்களை நீக்க உதவும். கருவளையங்கள், கரும்புள்ளிகள் மறையும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Beetroot mask, Skincare

    அடுத்த செய்தி