ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பளபளக்கும் முக அழகு வேண்டுமா..? பாரம்பரிய வீட்டுக்குறிப்பு இதோ...

பளபளக்கும் முக அழகு வேண்டுமா..? பாரம்பரிய வீட்டுக்குறிப்பு இதோ...

இவ்வாறு ஃபாஸ்டிங் இருப்பதால் தொடர் கிரீம்கள், ரசாயண பொருட்கள் சருமத்தை பாதிப்பதிலிருந்து தவிர்க்கலாம். சருமத்திற்கு மூச்சு விடுவதற்கான கால அவகாசம் கொடுப்பதாக இருக்கும்.

இவ்வாறு ஃபாஸ்டிங் இருப்பதால் தொடர் கிரீம்கள், ரசாயண பொருட்கள் சருமத்தை பாதிப்பதிலிருந்து தவிர்க்கலாம். சருமத்திற்கு மூச்சு விடுவதற்கான கால அவகாசம் கொடுப்பதாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இரவு தூங்கும் முன் இந்த அழகுக் குறிப்பை செய்து வர பொதுவான சருமப் பிரச்னைகளான பருக்கள், முகச் சுருக்கம், ஆங்காங்கே தடிப்புகள், வெள்ளை திட்டுக்கள் போன்றவை இருக்காது.

தேவையான பொருட்கள் :

ஆரஞ்சு தோல் பவுடன் - 2 tsp

வேப்பிலை பொடி - 1 tsp

மஞ்சள் - 1 tsp

அரிசி வடித்த தண்ணீர் - 2 tsp

எலுமிச்சை - 1/2 மூடி

செய்முறை :

ஆரஞ்சு தோல் பொடியை நீங்களே வீட்டில் செய்யலாம். தோலை நன்கு வெயிலில் காய வைத்து மிக்ஸியில் மைய அரைத்து பொடியாக்கிக்கொள்ளலாம். அதேபோல் வேப்பிலையையும் காய வைத்து அரைத்து பொடியாக்கிக்கொள்ளலாம்.

தற்போது ஆரஞ்சு தோல் பொடி, மஞ்சள் மற்றும் வேப்பிலை பொடி மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்துகொள்ளுங்கள். இந்த பவுடரை ஒரு டப்பாவில் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

தலைமுடி அரிப்பால் இரத்தம் கசிகிறதா..? இதோ வீட்டுக் குறிப்பு

இரவு தூங்கும் முன் அதிலிருந்து ஒரு ஸ்பூன் பொடியை எடுத்துக்கொள்ளுங்கள். பின் அரிசி தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலக்கி பேஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள்.

பின் அதை முகத்தில் சீராக அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள் அல்லது அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் காலை கழுவினாலும் பிரச்னையில்லை.

இதை தொடர்ந்து செய்து வர முகம் பளபளவென கண்ணாடி போல் ஜொலிக்கும் அழகை நீங்களே ரசிப்பீர்கள்.

First published: