• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கசாயம் குடித்து உடம்பை குறைத்தேன்... ஆச்சரியம் தரும் விஜய் டிவி ஆனந்தியின் எல்தி ட்ரிங்!

கசாயம் குடித்து உடம்பை குறைத்தேன்... ஆச்சரியம் தரும் விஜய் டிவி ஆனந்தியின் எல்தி ட்ரிங்!

விஜய் டிவி ஆனந்தி

விஜய் டிவி ஆனந்தி

தொடர்ந்து 3 மாதங்கள் குடித்தால் வெயிட் லாஸ் ரிசலட் தெரியுமாம்.

  • Share this:
    பலவிதமான டயட் சேட்டுகள் மத்தியில் கசாயம் குடித்து உடல் எடையை குறைத்துள்ளார் விஜய் டிவி புகழ் ஆனந்தி.

    விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம் பிரபல சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் வி ஜே ஆனந்தி. அதன் பிறகு கார்த்திகை பெண்கள் எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமானார்.விஜய் டிவியில் கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், கனா காணும் காலங்கள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட சீசன் 7 மற்றும் ஜோடி நம்பர் 1 சீசன் 6 ஆகிய நடனப் போட்டியில் பங்கேற்றார். சில வருடங்களுக்கு முன்பு அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால், திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய சினிமா கனவை தொடர்ந்து கவனித்து வருகிறார். ஆனந்தி ஆர்யாவின் மீகாமன், ஜீவாவுன் ரெளத்திரம் படங்களில் நடித்து இருக்கிறார்.

    குழந்தை பிறந்த பிறகு ஆனந்தி வெயிட் போட்டார். அவரின் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களிலும் வைரலானது. பின்பு உடலை கடுமையாக குறைத்து மற்ற பெண்களுக்கு எனர்ஜி அண்ட் பாசிடிவ் வைபரேஷனை தந்தார். நிகழ்ச்சியில் அவர் கலக்கிய நடனங்கள் இன்று வரை யுடியூபில் பலராலும் தேடி பார்க்கப்படுகிறது.தனது உடல் மீது தனி அக்கறை மற்றும் கவனத்தை எடுத்துக் கொண்டவர் வீட்டிலேயே வொர்க் அவுட் செய்திருக்கிறார். அதுமட்டுமில்லை தினமும் காலை கசாயம் குடித்து அதன் வழியாகவே தொப்பை மற்றும் தேவையில்லாத கொழுப்புகளை குறைத்துள்ளார்.

    ஆனந்தி உடல் பருமன் குறைக்க காரணமாக இருக்கும் கசாயம் பற்றி இப்போது பார்க்கலாம். உடல் எடையை குறைக்க முடிவு எடுத்த பின்பு தினமும் காலையில் இந்த கசாயத்தை தவறாமல் குடித்து வந்துள்ளார். அதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. 1 டம்ளர் சூடு தண்ணிரீல் சிறிதளவு சீரகம், இஞ்சி, கிராம்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.



    பின்பு அதை வடிகட்டி அதில் சிறிதளவு பெப்பர், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து 3 மாதங்கள் குடித்தால் வெயிட் லாஸ் ரிசலட் தெரியுமாம். உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் பல விதமான டயட்களை ஃபாலோ செய்பவர்கள், சாப்பிடாமலே பட்னி இருப்பவர்கள் அல்லது எவ்வளவு முயற்சித்தாலும் உடை குறையவில்லை என்பவர்கள் இந்த கசாய முறையை டிரை பண்ணி பாருங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    ssa

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: