Home /News /lifestyle /

உச்சந்தலை பராமரிப்பில் இதையெல்லாம் சரியாக செய்தால் தலைமுடி பிரச்சனைகளே இருக்காது..!

உச்சந்தலை பராமரிப்பில் இதையெல்லாம் சரியாக செய்தால் தலைமுடி பிரச்சனைகளே இருக்காது..!

உச்சந்தலை பராமரிப்பு

உச்சந்தலை பராமரிப்பு

தலையில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, வெந்தயம், வெங்காயச்சாறு, சீயக்காய், நெல்லிக்காய், கற்றாழை, முட்டை, வேப்பிலை உள்ளிட்ட இயற்கை பொருட்கள் கைகொடுக்கக்கூடும் என்றாலும், நிபுணர்கள் கூறும் சில விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
பளபளப்பான பட்டு போன்ற கூந்தலைப் பெற வேண்டும் என்றால் உச்சந்தலையை ஆரோக்கியமாக பராமரிப்பு முக்கியமானது. அதேசமயத்தில் உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகள் நபருக்கு நபர் மற்றும் பருவகாலத்திற்கு ஏற்றார் போல் மாறுபடக்கூடியது. உச்சந்தலையில் வறட்சி, உதிர்தல், எரிச்சல் மற்றும் அரிப்பு ஆகியவை பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் ஆகும்.

மேலும் எண்ணெய் பிசுபிசுப்பு, பொடுகு, முடி உதிர்தல், அதிக உணர்திறன் ஆகியவை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்கு காரணம் பரம்பரை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, உணவுமுறை, பிற நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துக்கள் ஆகியவையாக இருக்கலாம்.

இவை தவிர, சுற்றுச்சூழல் காரணிகள் அல்லது வயதான காரணிகள் அல்லது தவறான தயாரிப்புகளைப் பயன்படுத்துவது போன்றவை கூட உச்சந்தலையில் பிரச்சனைகளை உருவாக்கி, முடி உதிர்தல், அரிப்பு, கூந்தலின் அடர்த்தி படிப்படியாக குறைதல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். சில சமயங்களில் உச்சந்தலையில் அதீத வலி ஏற்படக்கூடும், அதற்கு அலோபீசியா அரேட்டா போன்ற சரும பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். மிக அரிதாக இவை உச்சந்தலையில் சீழ், ரத்தம், கொப்புளங்கள், புண்களையும் உண்டாக்கிவிடும். இதில் சில பிரச்சனைகளை தலைமுடி சம்பந்தப்பட்ட நிபுணர்களாலும், சிலவற்றை தோல் மருத்துவர்களாலும் நிவர்த்தி செய்ய முடியும்.

ஆரோக்கியமான உச்சந்தலை என்றால் செதில்கள், எரிச்சல் மற்றும் உச்சந்தலை சருமம் சிவப்பு நிறமாக இல்லாமல் இருக்க வேண்டும். வானிலையில் மாற்றம் அல்லது கடுமையான இரசாயன பொருட்களை பயன்படுத்துவது உச்சந்தலையில் வறட்சியை ஏற்படுத்துகின்றன.

தலையில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, வெந்தயம், வெங்காயச்சாறு, சீயக்காய், நெல்லிக்காய், கற்றாழை, முட்டை, வேப்பிலை உள்ளிட்ட இயற்கை பொருட்கள் கைகொடுக்கக்கூடும் என்றாலும், நிபுணர்கள் கூறும் சில விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம்.



கூந்தலின் முனை முடியை அடிக்கடி வெட்டுவதால் வேகமாக வளருமா..? உண்மை இதுதான்..!

உச்சந்தலையை ஆரோக்கியமாக பராமரிக்க பின்பற்ற வேண்டிய சில முக்கிய குறிப்புகள்:

- உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி அறிய தொழில்முறை நிபுணர்கள் அல்லது மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவும்.

- உங்கள் உச்சந்தலையில் பிரச்சனைகள் இருப்பின், உச்சந்தலைக்கு தேவையான தீவிர சிகிச்சையை சலூன்களில் மேற்கொள்ளலாம் அல்லது குறிப்பிட்ட தலைமுடி பிரச்சனைக்காக தனிப்பயனக்கப்பட்ட ஷாம்பு, கன்டிஷ்னர், ஹேர் ஆயில் போன்ற தயாரிப்புகளை பயன்படுத்தலாம்.

- 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை உச்சந்தலையை பரிசோதித்து பார்ப்பதற்கான அமர்வுகளில் பங்கேற்கவும்.



- உச்சந்தலையில் வழக்கமான மற்றும் முழுமையான சுத்திகரிப்பு அவசியம்.

- தலைக்கு குளித்த பிறகு உச்சந்தலையை நன்றாக உலர வைக்கவும்

காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீர்... அதனால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா?

-ஒருவர் தூங்கும் போது செல் மீளுருவாக்கம் மிக அதிகமாக இருப்பதால், ஸ்கால்ப் ட்ரீட்மென்ட் அல்லது சீரம் ஆகியவற்றை இரவு நேரத்தில் பயன்படுத்துவது நல்லது.

- உச்சந்தலைக்கான சிகிச்சைகள் அனைத்தும் முடிந்து பிரச்சனைகள் சரி செய்யப்பட்ட பிறகு, ஸ்கால்ப் கேர் ஷாம்பூவிற்கு பதிலாக கூந்தலை பராமரிக்க உதவும் ஷாம்பூவை பயன்படுத்தவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Dry scalp, Hair care

அடுத்த செய்தி