ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அழகுக்காக வெண்டைக்காயை கூட நான் முகத்துல போடுவேன்.. நடிகை அம்பிகாவின் பல ஆண்டு ரகசியம்!

அழகுக்காக வெண்டைக்காயை கூட நான் முகத்துல போடுவேன்.. நடிகை அம்பிகாவின் பல ஆண்டு ரகசியம்!

அம்பிகா

அம்பிகா

அம்பிகா இந்த பேக்கை முகத்திற்கு 2 வாரத்திற்கு ஒருமுறை யூஸ் செய்வாராம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  முக அழகு... முடி அழகு என ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை அம்பிகாவின் அழகு ரகசியத்துக்கு வெண்டைக்காய் தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

  80ஸ் எவர்கீரீன் நடிகைகள் என்றவுடன் அதில் கண்டிப்பாக அம்பிகா பெயர் இருக்கும். ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழிலில் மட்டுமில்லை தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அம்பிகா ஸ்டைல் சுடிதார், ஹர்ஸ்டைல், கிளிப் என இவர் படத்தில் யூஸ் செய்யும் பொருட்களை தேடி தேடி வாங்குவார்கள் அவரின் ரசிகர்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை கட்டிபோட்டு வைத்திருந்தார். சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர், நடிகைகளாக இருந்தவர்கள் பிறகு சின்னத்திரை நோக்கி வருவது என்பது தமிழ் சின்னத்திரையில் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. சிலர், ஒரே நேரத்தில் சீரியல்களிலும் சினிமாவிலும் நடித்து வருகிறார்கள்.

  அந்த வகையில் இப்போதும் நடிகை அம்பிகாவுக்கு மார்கெட் குறையவில்லை. சன் டிவியில் ஒளிப்பரப்பான சீரியலில் இவரின் சற்குணம் கேரக்டர் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. தொடர்ந்து சன் டிவியில் சீரியல்களில் நடித்து வருகிறார். ”வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் குறையவேயில்லை” என்ற ரஜினியின் வசனம் அம்பிகாவுக்கும் பொருந்தும் இப்போதும் திரையில் அவரின் முகத்தில் அப்படியொரு பளீச். கிளீன் ஸ்கீன்.

  இதற்காக அவர் ஃபாலோ செய்யும் பியூட்டி சீக்ரெட் டிப்ஸ் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க. பிஞ்சு வெண்டைக்காய் மற்றும் தயிர் தான் அம்பிகாவின் சரும அழகுக்கு முக்கிய காரணமாம் தெரியுமா?

  ' isDesktop="true" id="616073" youtubeid="tVeYGgsHIGQ" category="beauty">

  80களில் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இந்த பேக்கை முகத்திற்கு 2 வாரத்திற்கு ஒருமுறை யூஸ் செய்வாராம். அதை விடாமல் இப்போதும் ஃபாலோ செய்கிறார். இந்த ரகசியத்தை தனது ரசிகர்களுக்காக பகிர்ந்து இருக்கிறார் அம்பிகா. 3 அல்லது 4 பிஞ்சு வெண்டைக்காயை எடுத்துக் கொண்டு அதை மிக்ஸியில் அரைத்து, அத்துடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து முகத்தில் ஃபேஸ் பேக்காக போடுவாராம். முகத்தில் எந்த அழுக்கும் சேராமல், கரும்புள்ளிகள் குறைந்து முகம் பளீச் பளீச் என்று ஜொலிக்குமாம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Beauty Tips