• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 1 மாதத்தில் 10 கிலோ வெயிட் லாஸ்.. ராஜா ராணி சந்தியாவாக மாற உதவிய சீரக தண்ணீர்!

1 மாதத்தில் 10 கிலோ வெயிட் லாஸ்.. ராஜா ராணி சந்தியாவாக மாற உதவிய சீரக தண்ணீர்!

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

65 கிலோ எடையில் இருந்தவர் தற்போது 55 கிலோ எடைக்கு வந்து ராஜா ராணி சீரியலில் சந்தியாவாக கலக்கி வருகிறார்.

  • Share this:
    திருமணம்.. குழந்தைக்கு பிறகும் டிவி சீரியலில் ஜொலித்து கொண்டிருக்கும் ஆல்யா மானசாவின் 10 கிலோ எடை குறைப்புக்கு காரணமான சீரக தண்ணீர்.

    தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகைகள் பலரும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா ரோலில் நடித்து ரசிர்களை கவர்ந்தவர் ஆல்யா மானசா. விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பான  வெற்றிகரமான சீரியல்களில் ராஜா ராணி சீரியலும் ஒன்று இந்த தொடரின் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து சின்னத்திரை கதாநாயகிகள் லிஸ்டில் முதலிடத்தை பிடித்தார் ஆல்யா. 17 வயதில் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கிய ஆல்யா தற்போது வரை பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

    ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே ஆல்யா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றவர். அதன் பின்பு தான் ராஜா ராணி சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தன்னுடன் நடித்த சஞ்சீவை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்திய ஆல்யா, இப்போது கம்பேக் கொடுத்துள்ளார். ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா தான் ஹீரோயின். சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஆல்யா சின்னத்திரையில் நடிக்க  சஞ்சீவ் பக்கபலமாக இருந்தார். குழந்தை பிறந்தவுடன் ஆல்யா எடை ,அதிகமாக கூடியது. அதிலும் ஆப்ரேஷன் என்பதால் வெயிட் அதிகம் போட்டது. இதனால் கேமரா முன்பு தோன்றுவதை தவிர்த்து வந்தார் ஆல்யா.

    அதன் பின்பு தான் சரியாக 1 மாதத்தில் 10 கிலோ எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் தந்தார். வீட்டிலேயே எடை குறைப்பதற்கு பல டிப்ஸ்களை ஆல்யா ஃபாலோ செய்து இருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று சீரக தண்ணீர். வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என முடிவு எடுத்தவுடன் முதல் நாள் இரவே சீரகத்தை ஊற வைத்து மறுநாள் காலையில் அதை தண்ணீரில் சேர்த்து சூட வைத்து அந்த தண்ணீரையே தினமும் கிட்டத்தட்ட 3 லிட்டர் வரை குடித்து வந்துள்ளார்.



    இந்த சீரக தண்ணீர் அவருக்கு எடை குறைக்க மிகப் பெரிய அளவில் உதவியதாம். அதே போல் முகத்தில் இருக்கும் எடையை குறைக்க காலிபிளவர் சாப்பிடுவதை நிறுத்தினாராம். 65 கிலோ எடையில் இருந்தவர் தற்போது 55 கிலோ எடைக்கு வந்து ராஜா ராணி சீரியலில் சந்தியாவாக கலக்கி வருகிறார். இன்ஸ்டாவில் மட்டும் இவருக்கு 3 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: