ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் கற்றாழை பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகளா..? தவறாமல் யூஸ் பண்ணுங்க..!

குளிர்காலத்தில் கற்றாழை பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகளா..? தவறாமல் யூஸ் பண்ணுங்க..!

கற்றாழை

கற்றாழை

குளிர்காலம் வந்துவிட்டாலே நம்முடனே பல சரும பிரச்சனைகளும் உடன் சேர்ந்துப் பயணிக்கும். இதோடு சருமம் வறண்டு போகும், முடியில் பொடுகு பிரச்சனைகளும் அதிகமாகும். இதுப்போன்ற பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய வேண்டும் என்றால் கற்றாழை தான் சிறந்த தீர்வு.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆலோ வேரா என்று மக்களிடம் பிரபலமாகியுள்ள கற்றாழை பல வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. ஆனால் இதில் ஏராளமான நன்மைகள் உள்ளதால் அற்புதமான தாவரங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. தோல் பராமரிப்பு முதல் முடி வளர்ச்சி வரை கற்றாழை எண்ணற்ற பயன்களைக் கொண்டுள்ளது. இதனால் தான் எல்லா நேரங்களிலும் கற்றாழையை நாம் எவ்வித தயக்கமும் இன்றி உபயோகிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அதிலும் குளிர்காலம் வந்துவிட்டாலே நம்முடனே பல சரும பிரச்சனைகளும் உடன் சேர்ந்துப் பயணிக்கும். இதோடு சருமம் வறண்டு போகும், முடியில் பொடுகு பிரச்சனைகளும் அதிகமாகும். இதுப்போன்ற பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய வேண்டும் என்றால் கற்றாழை தான் சிறந்த தீர்வு. இதில் உள்ள கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ பி1, பி2 மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப்பண்புகள் சருமத்தையும்,முடியையும் பாதுகாக்குகிறது.

தோல் மற்றும் முடி பராமரிப்பிற்கு உதவும் கற்றாழையின் நன்மைகள்…

வறண்ட சருமத்திற்கு ஊட்டமளித்தல்:

குளிர்காலம் வந்துவிட்டாலே சருமம் வறண்டு போய்விடும். இதற்காக மாய்ஸ்சரைசர்கள் எல்லாம் நாம் பயன்டுத்துவோம். ஆனால் இயற்கையாக வறண்ட சருமத்தை சரிசெய்ய வேண்டும் என்றால் கற்றாழையை நீங்கள் உபயோகிக்கலாம். கற்றாழையில் நிறைய திரவம் இருப்பதால் சருமத்திற்கு பயனுள்ளதாக உள்ளது.

கரும்புள்ளிகளை நீக்குதல்:

கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகளவில் உள்ளதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவியாக உள்ளது. எனவே சிறிது கற்றாழை சாற்றைத் தினமும் இரவில் முகத்தில் அப்ளே செய்து, அடுத்த நாள் காலை தண்ணீரில் நீங்கள் கழுவும் போது கருமை நீங்கி முகம் மிகவும் பொலிவுடன் காணப்படும்.

Also Read : ஆசையாக வளர்க்கும் நகம் அடிக்கடி உடையுதா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

தோல் பராமரிப்பு:

நம்மை அறியாமலேயே சில நேரங்களில் ஏதாவது கீறல்களினால் புண்கள் ஏற்படும். இந்த புண்களுக்கு நீங்கள் எந்த மருந்தும் உபயோகிக்க வேண்டும். கற்றாழை சாறைக் கொஞ்சம் புண்கள் உள்ள இடத்தில் தடவினால் போதும் வடுக்கள் எதுவும் இல்லாமல் ஆறிவிடும். தீக்காயங்களைக் குணப்படுத்தவும் உதவியாக உள்ளது.

முகப்பரு இல்லாத சருமம்:

பெண்கள் மற்றும் ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று முகப்பருக்கள். இது நம்முடைய அழகைக் கெடுப்பதோடு தன்னம்பிக்கையையும் இழக்கச் செய்கிறது. இதற்காக சந்தைகளில் விற்பனையாகும் பல பேசியல் கிரீம்களை உபயோகிப்போம். ஆனால் இயற்கையாக சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் கற்றாழையை நீங்கள் தேர்வு செய்யலாம். இதில் உள்ள கிருமி நாசினிப் பண்புகள் பாக்டீரியாக்களை அகற்றி முகப்பருக்களை நீக்க உதவியாக உள்ளது. எனவே தினமும் நீங்கள் கற்றாழை ஜெல்லை உங்களது சருமத்தில் அப்ளே செய்யலாம்.

பளபளப்பான மற்றும் மென்மையான கூந்தல்:

கற்றாழையில் உள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள் கரடுமுரடான மற்றும் வறண்ட கூந்தலுக்கு சிகிச்சையளிக்கும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் கற்றாழை ஜெல்லை நீங்கள் உபயோகிக்கும் போது உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை மீண்டும் உருவாக்க உதவுகின்றன. இதோடு இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் புதிய முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றன.

பொடுகு பிரச்சனைக்குத் தீர்வு:

பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பொடுகு பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. எத்தனை ஷாம்புகள் உபயோகித்தாலும் உடனடியாக தீர்வு முடியாது. ஆனால் கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்புக் குணங்கள் பொடுகு பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண்கிறது. மேலும் இதில், இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் புரதம் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் பொடுகு மற்றும் முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிக்கிறது.

First published:

Tags: Aloe vera, Aloevera, Beauty Tips