தலைமுடி பராமரிப்பும்... கற்றாழையும்...! அதன் மகத்துவம் பற்றி தெரியுமா?

உடலுக்கு மட்டுமன்றி அழகு மற்றும் தலைமுடி பராமரிப்பிற்கும் கற்றாழை உதவும்.

தலைமுடி பராமரிப்பும்... கற்றாழையும்...! அதன் மகத்துவம் பற்றி தெரியுமா?
நெல்லிக்காய் , கற்றாழை : பெரிய நெல்லிக்காய் மென்று சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கும். அதேபோல் கற்றாழை சதையை நீக்கி ஜூஸ் போட்டுக் குடிக்கலாம்.
  • Share this:
வீட்டில் ஒரு கற்றாழைச் செடி வளர்ப்பது மருந்து இல்லா குடும்பம் போன்றது என்பார்கள். அந்த அளவிற்கு கற்றாழையில் மருத்துவப் பலன்கள் உள்ளன. உடலுக்கு மட்டுமன்றி அழகு மற்றும் தலைமுடி பராமரிப்பிற்கும் கற்றாழை உதவும். குறிப்பாக கற்றாழையை எவ்வாறு தலை முடிப் பிரச்னைகளுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

மென்மையான கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயில் கற்றாழை ஜெல்லைக் கலந்து தலைமுடி வேர்களில் நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும். மேலும்,வேர்களில் நிறைந்திருக்கும் இறந்த செல்களை நீக்க உதவும்.

கூந்தலின் நீளத்தை அதிகமாக்கும். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும்.


முடி கொட்டுதல் தொல்லை இருந்தால் சிறந்த டிப்ஸ் கற்றாழை ஜெல்தான். இதை தலையில் நன்கு தேய்த்துக் குளித்து வந்தால், தலைமுடி கொட்டுவது குறைந்து அடர்த்தியான கூந்தல் கிடைக்கும்.

கற்றாழை , alovera

தூசு, காற்று மாசுபாட்டால் உருவாகும் பொடுகுத் தொல்லை, அரிப்பை நீக்க கற்றாழையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவுங்கள்.இது இயற்கை வழியிலான சிறந்த கண்டிஷனராகவும் செயல்படுகிறது.


பார்க்க :
First published: April 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading