முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்கள் தலைமுடிக்கு வெங்காய எண்ணெய் பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகளே இருக்காது...

உங்கள் தலைமுடிக்கு வெங்காய எண்ணெய் பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகளே இருக்காது...

வெங்காய எண்ணெய்

வெங்காய எண்ணெய்

இன்றைய நாளில் பலருக்கு உயிர் பற்றிய கவலைகளை விட கூந்தல் பற்றிய கவலைகள் தான் அதிகம் உள்ளது. குறிப்பாக முடி உதிர்வு, வழுக்கை, இளம் மற்றும் நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கு கூட முடி நரைப்பது உள்ளிட்ட பல கூந்தல் பிரச்சனைகளுடன் பலரும் போராடி வருகின்றனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

இன்றைய நாளில் பலருக்கு உயிர் பற்றிய கவலைகளை விட கூந்தல் பற்றிய கவலைகள் தான் அதிகம் உள்ளது. குறிப்பாக முடி உதிர்வு, வழுக்கை, இளம் மற்றும் நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கு கூட முடி நரைப்பது உள்ளிட்ட பல கூந்தல் பிரச்சனைகளுடன் பலரும் போராடி வருகின்றனர்.

நாம் எதிர் கொள்ளும் முடி பிரச்சனைகளுக்கு சுற்றுசூழல் மாசுபாடு, மாசுபட்ட நீர், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள், தூக்கமின்மை, மனஅழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களாக இருக்கின்றன. நீங்கள் ஆரோக்கியமான, அடர்த்தியான மற்றும் ரம்மியமான கூந்தலை பெற முயற்சித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கு சிவப்பு வெங்காய எண்ணெய் (red onion oil) பயன்படுத்துவது பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

நம்முடைய அன்றாட உணவில் சேர்த்து விரும்பி சாப்பிடும் சிவப்பு வெங்காயம் வலுவான வாசனை மற்றும் சுவையைத் தவிர, நம் தலைமுடிக்கு நன்மை பயக்கும் பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது உங்களுக்கு தெரியுமா.! உங்களுக்கு கனவாக உள்ள கூந்தலை பெற 'வெங்காயம்' ஒரு சக்திவாய்ந்த மற்றும் மூலப்பொருளாக செயல்படும் என்பதாவது உங்களுக்கு தெரியுமா.! நீங்கள் உங்கள் ஆரோக்கியமான கூந்தலை பெற ரெட் ஆனியன் ஆயிலை பயன்படுத்தும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். பிரபல அரோமாதெரபிஸ்ட்டான டாக்டர். ப்ளாசம் கோச்சார் இந்த ரெட் ஆனியன் ஆயில் பற்றிய சில பயனுள்ள விவரங்களை பகிர்ந்து கொள்கிறார்.

முடி வளர்ச்சி:

ரெட் ஆனியன் ஆயில் பயன்படுத்துவது உச்சந்தலையில் pH அளவை பராமரிக்க உதவுகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த மற்றும் முடி வளர்ச்சியை தூண்ட பெரிதும் உதவுகிறது. இந்த ஆயிலை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவது உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் முடியை வலிமையாக்குகிறது. புதிய முடி இழைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

கூந்தலின் பொலிவை அதிகரிக்கும்:

ஆன்டிஆக்ஸிடென்ட்களால் செறிவூட்டப்பட்டுள்ள ரெட் ஆனியன் ஆயில் முடியின் அளவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உச்சந்தலையை கண்டிஷனிங் செய்வதன் மூலம் உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்றுகிறது.

முன்கூட்டியே முடி நரைப்பதை தடுக்கிறது:

ரெட் ஆனியன் ஹேர் ஆயிலில் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைத் தடுக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதிலிருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் , சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட்ஸ் உங்கள் முடி முன்கூட்டியே நரைப்பதை தாமதப்படுத்துகிறது.

பொடுகை கட்டுப்படுத்தும்:

இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சையளித்து பொடுகு வராமல் தடுக்கிறது.

கண்டிஷனிங்:

ரெட் ஆனியன் ஆயில் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யும் வழக்கம் முடிக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் முடியை கண்டிஷனிங் செய்கிறது. இதன் மூலம் உலர்ந்த மற்றும் உதிர்ந்த முடி பிரச்சினைகள் தடுக்கப்பட்டு முடி வளர்ச்சியை உறுதி செய்யப்படுகிறது.

Micro fat grafting : உடலில் இருக்கும் கொழுப்பை இடம் மாற்றம் செய்யும் காஸ்மெடிக் சிகிச்சை பற்றிய முழுமையான தகவல்கள்

ஆனியன் ஹேர் ஆயிலை பயன்படுத்தும் போது ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டிய 2 விஷயங்கள் இங்கே:

* ரெட் ஆனியன் ஹேர் ஆயில் ஒரு விரும்பத்தகாத கடும் வாசனையை கொண்டிருக்கும். எனவே, அதில் சில துளிகள் வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஹேர் ஆயிலை சேர்க்க வேண்டும் அல்லது முடியை வாஷ் செய்த பின் Ylang Ylang அல்லது Neroli போன்ற அத்தியாவசிய எண்ணெயை பயன்படுத்தலாம்.

* ரெட் ஆனியன் ஹேர் ஆயில் சூடானது என்பதால் உச்சந்தலையில் கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்க இதை தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழையுடன் கலக்க வேண்டியது அவசியம்.

சிவப்பு வெங்காய எண்ணெயை வீட்டிலேயே செய்வது எப்படி.?

* சிறிதளவு சிவப்பு வெங்காயத்தை உரித்து நறுக்கி கொள்ளுங்கள்

* அவற்றை நன்கு அரைத்து சாறாகவும் எடுக்கலாம் அல்லது பேஸ்ட் போல கெட்டியாகவும் ஆக்கி கொள்ளலாம்.

* பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்

கெமிக்கல் பீல்ஸ் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 3 நன்மைகள்...

* அந்த பாத்திரத்தில் நீங்கள் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் வெங்காய ஜூஸ் அல்லது பேஸ்டை அதில் போட்டு நன்கு கலக்குங்கள்.

* ஒரு நல்ல கொதி வந்தவுடன் இந்த கலவையை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடுங்கள்.

* சூடு நன்றாக குறையும் வரை காத்திருந்து பின் இந்த ஆயிலை வடிக்கட்டி காற்று புகாத பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.

First published:

Tags: Hair care, Onion Oil