முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேஷன் என்றால் என்ன..? சருமத்திற்கு இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேஷன் என்றால் என்ன..? சருமத்திற்கு இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேஷன்

கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேஷன்

ஆல்பா-ஹைட்ராக்ஸி ஆசிட்ஸ் (AHA) என்லார்ஜ்டு போர்ஸ், பிக்மென்டேஷன், கோடுகள், டார்க் ஸ்பாட்ஸ், டெக்ஸ்ட்சர்ஸ் (texture) உள்ளிட்ட சரும சிக்கல்களுக்கு உதவுகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சரும பராமரிப்பு உலகில் முகப்பருக்கள், ஆன்டி-ஏஜிங், சரும நெகிழ்ச்சி இழப்பு, பிக்மென்டேஷன், சருமம் சிவத்தல், கடினமான சருமம், சன் டேமேஜ் உள்ளிட்ட பல சவாலான விஷயங்கள் உள்ளன. எனினும் பல சரும குறைபாடுகளுக்கு தீர்வை வழங்க கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டர்ஸ் உதவுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வதற்கான ஒரே நடைமுறையாக ஹார்ஷ் ஸ்க்ரப்ஸ் (harsh scrubs) இருந்து வந்தது. ஆனால் இப்போது ஒருவரின் சரும பிரச்சனைகளின் அடிப்படையில் சரியான கெமிக்கல் எக்ஸ்ஃபோலியன்ட்ஸ் (chemical exfoliates) மற்றும் சீரம்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதை பார்க்கும் போது ஸ்கின்கேர் பிசினஸ் உண்மையிலேயே நீண்ட தூரம் வந்திருக்கிறது.

அடிப்படையில் ஃபிசிக்கல் மற்றும் கெமிக்கல் என இரு வகையான எக்ஸ்ஃபோலியேட்டர்ஸ் உள்ளன. ஃபிசிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டர்ஸ் என்பவை நீண்டகால நடைமுறையாக இருக்கும் நேரத்தில், கெமிக்கல் ​​எக்ஸ்ஃபோலியேட்டர்ஸ் சமீப மாதங்களாக ஹைப்பை பெற்று வருகின்றன. இதனால் கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டர்ஸ்கள் ஸ்கின்கேர் ரொட்டினில் சேர்க்க வேண்டிய ஒரு அற்புத நடைமுறையாக இருக்கிறது. எனவே பியூட்டி & ஸ்கின்கேர் துறையானது கெமிக்கல் எக்ஸ்ஃபோலியன்ட்ஸ் மூலம் பளபளப்பான சருமத்தை பெற நமக்கு உதவுகின்றன. கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டர்ஸ் என்றால் என்ன சரும பிரச்சனைகளின் அடிப்படையில் எந்த கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டரை தேர்வு செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டர்ஸ் என்றால் என்ன?

கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டர்ஸ் என்பது வாட்டர் மற்றும் ஆயில் சொல்யுபில் ஆசிட்-பேஸ்ட் சொல்யூஷன்ஸ் ஆகும். இவை பல்வேறு கான்சென்ட்ரேஷண்களுடன் இறந்த சரும செல்களை அகற்றி புத்துணர்ச்சியான, பளபளப்பான மற்றும் ஆரோக்கிய சருமத்தை வழங்க உதவுகின்றன. கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டர்ஸ் அன்க்ளாகிங் போர்ஸ்களை அடக்க, வயதாகும் அறிகுறிகளை குறைக்க வழிவகுக்கும். தவிர இந்த கெமிக்கல் எக்ஸ்ஃபோலியன்ட்ஸ்கள் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திற்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதோடு முகப்பருவால் ஏற்படும் வடுக்கள், டல் ஸ்கின், டார்க் ஸ்பாட்ஸ், பிக்மென்டேஷன் உள்ளிட்டவற்றுக்கும் பயன்படுத்தலாம். பிசிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டர்ஸ்களுடன் ஒப்பிடுகையில் தோலின் மேல் அடுக்கை சீராக அகற்றி, தெளிவான மற்றும் புதிய அடுக்குக்கு வழிவகுப்பதன் மூலம் கெமிக்கல் எக்ஸ்ஃபோலியன்ட்ஸ் ஒரு மென்மையான வழியாகவும் இருக்கிறது.

கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டர்ஸ்களின் வகைகள்:

கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டர்ஸ்கள் பல கான்சென்ட்ரேஷன்களில் வருகின்றன. ஆனால் இவற்றில் பிரபலமாக இருக்கும் மூன்று AHAs, BHAs மற்றும் PHAs.

ஆல்பா-ஹைட்ராக்ஸி ஆசிட்ஸ் (AHA):

நீரில் கரையக்கூடிய கிளைகோலிக் ஆசிட், லாக்டிக் ஆசிட், மாலிக் ஆசிட் மற்றும் மாண்டலிக் ஆசிட் போன்ற பொருட்கள் AHA-ல் அடங்கும். இவை என்லார்ஜ்டு போர்ஸ், பிக்மென்டேஷன், கோடுகள், டார்க் ஸ்பாட்ஸ், டெக்ஸ்ட்சர்ஸ் (texture) உள்ளிட்ட சரும சிக்கல்களுக்கு உதவுகின்றன.

பீட்டா - ஹைட்ராக்ஸி ஆசிட்ஸ் (BHA):

BHAக்கள் அடிப்படையில் சாலிசிலிக் ஆசிட்டை உள்ளடக்கியிருக்கும். பொதுவாக ஸ்கின்கேர் நடைமுறையில் சாலிசிலிக் ஆசிட் பயன்படுத்தப்படுகிறது. இவை போர்ஸ்களை அடைப்பதோடு, அதிகப்படியான சீபத்தை வெளியேற்றும். மேலும் பிளாக்ஹெட்ஸ்/ஒயிட்ஹெட்ஸ் மற்றும் முகப்பருக்களை போக்க இவை சிறந்தவை.

Also Read : பளபளப்பான, ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்காக 6 டிப்ஸ்கள்.. இதோ உங்களுக்காக!

பாலி-ஹைட்ராக்ஸி ஆசிட்ஸ் (PHA):

AHA- அடிப்படையிலான கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டரை போலவே PHA-க்கள் வேலை செய்கின்றன. எவ்வாறாயினும், இந்த எலிமென்ட்டின் பெரிய மூலக்கூறுகள் இது நாம் காணக்கூடிய மென்மையான கெமிக்கல் எக்ஸ்ஃபோலியண்ட்ஸ்களில் ஒன்றாக அமைக்கின்றன. இதன் விளைவாக தோலில் குறைவான பெனட்ரேஷன் ஏற்படுகிறது. எனவே PHA மிகவும் லேசான மற்றும் மேலோட்டமான எக்ஸ்ஃபோலியேஷனுக்கு ஏற்றவை.

First published:

Tags: Beauty Tips, Chemical Exfoliate, Skin types, Skincare