ஹேர் போடோக்ஸ் என்பது தலை முடியின் வேர் வரை கண்டிஷனிங் செய்யும் ஒரு சீரமைப்பு சிகிச்சையாகும். உடைந்த முடி இழைகளை இந்த சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கெரட்டின் கொண்டு செய்யப்படும் இந்த வகை சிகிச்சையில் முடிகளுக்கு தேவையான புரோட்டீன்கள், பெப்டைடுகள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், வைட்டமின் பி5, கொலாஜன் கலவைகள் மற்றும் லிப்பிடுகள் தலை முடியின் ஆழமான சீரமைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஒருமுறை சிகிச்சை செய்து கொள்வதால் அதன் பயன் சுமார் 4 முதல் 6 மாதங்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் உங்கள் தலைமுடியை நீங்கள் எவ்வாறு கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் காலம் அமையும். மேலும் கெரட்டின் சிகிச்சை மிகவும் விலை உயர்ந்தது. இதன் விலை முற்றிலும் உங்கள் தலைமுடி அமைப்பை பொறுத்தது என்றாலும், சாதாரணமாக ரூ.4000 முதல் ரூ.10000 வரை செலவாகுமாம்.
இந்த சிகிச்சையில் ஒரு ரசாயண திரவம் பயன்படுத்தப்படுகிறது. அந்த பொருள் ஃபார்மால்டிஹைட் என்ற ரசாயனத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது தலைமுடியை சேதப்படுத்தும் ஒரு மூலப்பொருள் என்றும் கூறப்படுகிறது.. இதனால் இந்த திரவம் தலைமுடிக்கு மட்டுமல்லாமல், மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சிகிச்சையானது விலை உயர்ந்தது மட்டுமல்ல, நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகும். சிகிச்சை செயல்முறை முடிவதற்கு பொதுவாக 3 முதல் 6 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கெராடின் சிகிச்சையை பெறக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால் இந்த மார்டன் உலகில் பெண்கள் தங்கள் உடைந்த வறட்சி கொண்ட முடி இழைகளை சரிசெய்ய விரும்பி இத்தகைய சிகிச்சை முறைகளை மேற்கொண்டு, சேதமடைந்த தங்கள் முடியை ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலைக் பெறுவதாகக் கூறும் டாக்டர் பத்ரா நிறுவனத்தின் துணைத் தலைவரும், ட்ரைக்கோலாஜிக்கல் சொசைட்டி ஆஃப் லண்டனின், ஹெல்த்கேர் மற்றும் தலைவரான, டாக்டர் அக்ஷய் பத்ரா, 3 முதல் 4 மாதங்கள் நீடிக்கும், சிகிச்சையின் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடலாம் என தெரிவித்துள்ளார். அவ்வாறு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் எவற்றையெல்லாம் செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்து பத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
சிகிச்சை மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை
அதிக கெமிக்கல்கள் இல்லாத லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். அதாவது, போடோக்ஸ் ஷாம்பு மென்மையாகவும் சல்பேட்டுகள் சோடியம் குளோரைடு, சிலிகான்கள் மற்றும் பாரபென்கள் போன்ற ரசாயணங்கள் கலந்த தயாரிப்பாக இல்லாமல் இருக்க வேண்டும் என டாக்டர் அக்ஷய் பத்ரா தெரிவிக்கிறார்.
ஷாம்பு பாட்டிலை வாங்கும் போதே இவற்றை எல்லாம் சரிபார்த்து வாங்குவது நல்லது. வாரத்திற்கு ஒருமுறை ஹேர் மாஸ்க் போடுவது நல்லது. இதனால் வறண்ட கூந்தல் ஏற்படாமல், தலை முடிக்கு நல்ல ஈரப்பதம் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஈரப்பதத்தை தக்க வைக்க கெரட்டின் மற்றும் ஆர்கான் எண்ணெய் அடங்கிய கெமிக்கல் இல்லாத ஹேர் ஸ்டைலிங் தயாரிப்புகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
போடோக்ஸ் செய்தவர்கள் நீச்சல் குளங்களிலோ அல்லது கடல் நீரிலோ குளிப்பதை தவிர்க்க வேண்டும். நீரில் உப்பு மற்றும் குளோரின் கலக்கப்படிருந்தால் போடோக்ஸ் சிகிச்சை நீண்ட நாட்கள் பலன் அளிக்காமல் போகலாம். எனவே, நீச்சல் குளத்தில் குளிக்கச் செல்வதற்கு முன், தலைமுடி ஈரமாகாமல் இருக்க தலையில் அதற்கான கவசங்களை பயன்படுத்த வேண்டும். முக்கியமாக ஒவ்வாமை உள்ளவர்கள் அதற்கான சிகிச்சையில் இருப்போருக்கு இந்த சிகிச்சை ஏற்புடையதல்ல என டாக்டர் அக்ஷய் பத்ரா தெரிவிக்கிறார்.
Also Raed : ஆண்களுக்கு வழுக்கை வர டீ, காஃபி குடிப்பதுதான் காரணமா..? உஷார்..!
மேலும் போடோக்ஸ் செய்த பிறகு அதிக வெப்பத்தை கொண்டு உலர்த்துதல் அல்லது ஸ்டைலிங் செய்வதை தவிர்க்க வேண்டுமாம். போடக்ஸ் செய்த பிறகு தலைமுடிக்கு வண்ணம் பூசக் கூடாது என்கிறார் மருத்துவர். ஒரு வேளை வண்ணம் பூச விரும்புவோர் அதை போடோக்ஸ் செய்வதற்கு முன்னரே செய்திருக்க வேண்டுமாம். வருடத்திற்கு 3 முறைக்கு மேல் போர்டக்ஸ் செய்யக்கூடாது என தெரிவிக்கும் அவர் அவ்வாறு செய்தால் தலை முடியின் வேர்களுக்கு சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும், தலை முடியில் உள்ள ஈரப்பதம் குறைந்து முடி இழைகள் மெல்லியதாக மாறிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair care, Hair Problems