அக்கறை சீமையில் உள்ள பெண்கள் எப்போதும் தங்களது முகத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்வது வழக்கமான செயல்முறைகளில் ஒன்று. அதிலும் கொரியப் பெண்களைப் பார்த்தாலே நமக்கு பொறாமைத் தான் ஏற்படும். ஆம் இவர்களின் முகம் பளிங்கு கற்கள் மற்றும் கண்ணாடி போல் பளப்பளப்புடன் காட்சியளிக்கும் அழகு எளிதில் யாரையும் கவர்ந்துவிடும்.
இவர்கள் தங்களது சரும அழகை மேம்படுத்த பல பியூட்டி டிப்ஸ்களைப் பின்பற்றுகின்றனர். இருந்தப்போதும் சமீபத்தில் ஜாம்சு அழகு தொழில்நுட்பம் மக்களிடம் பிரபலமாகியுள்ளது. அப்படி என்ன அந்த அழகுப் பராமரிப்பில் உள்ளது தெரியுமா?
கொரிய வார்த்தைகளில் ஜாம்சு என்பது ஒருவரின் முகத்தை தண்ணீரில் மூழ்கடிப்பது. சாதாரண தண்ணீர் அல்லது குளிர்ந்த நீரில் நம்முடைய முகத்தைக் கழுவும் போது சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பதோடு நீண்ட நேரம் நம்முடைய மேக் அப் இருக்கும் படி செய்ய உதவுகிறது. இதை எப்படி செய்ய வேண்டும்? அனைத்து சருமத்தினரும் ஒரு முறையைப் பின்பற்றாலாமா? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
கொரிய ஜாம்சு தொழில்நுட்பம் (Jamsu technology):
கொரிய பெண்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த ஜாம்சு முறையை செய்யும் போது ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த தண்ணீரை வைத்து உங்களது முகத்தை சுமார் 10- 15 நிமிடங்களுக்கு மூழ்க செய்ய வேண்டும்.
முன்னதாக நீங்கள் பவுன்டேஷனைப் பயன்படுத்தி மேக் அப் போடுவதற்கு முன்னதாக உங்களது முகம் நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். மேக்அப் முடிந்த பின்னதாக பவுடரை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இதனையடுத்து தான் ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்து உங்களது முகத்தை நீங்கள் நீரில் மூழ்க செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது உங்களது முகம் பல மணி நேரத்தில் அப்படியே இருப்பதற்கு உதவியாக உள்ளது.
Also Read : மேக்கப் போடுவதில்லை... பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே அழகின் ரகசியம் இதுதானாம்..!
ஐஸ் வாட்டரை அனைத்து சருமத்தினரும் பயன்படுத்தலாமா? என்ற கேள்வி பரவலாக எழும்புகிறது. வறண்ட சருமம் உள்ளவர்களும் குளிர்ந்த தண்ணீரைக்கொண்டு முகத்தை நீரில் மூழ்க செய்யலாம். ஆனால் சில மணித்துளிகள் மட்டுமே முகத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். இது உங்களது முகத்தை நீரேற்றமாக வைத்திருப்பதோடு, முகப்பருக்கள் எதுவும் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
சாதாரண தண்ணீரைக்கொண்டு செய்யப்படும் இந்த ஜாம்சு தொழில்நுட்பம் என்பது கொரியப் பெண்களிடம் மட்டும் இல்லை, தற்போது இந்தியப் பெண்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கூட தண்ணீரில் முகத்தை மூழ்கடிக்கும் வீடியோவைப் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி கொரியப் பெண்கள் எப்போதும் தங்களது முகத்தை அழுக்கை சேரவிடமாட்டார்கள் மற்றும் எப்போதும் முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்க பேசியல், பிளீச்சிங் போன்றவற்றை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பார்களாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Korean Beauty Tips