ஆலியா பட்டின் அழகு ரகசியம் இதுதானா..? நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!

உள்ளே என்ன இருக்கிறதோ அதுதான் முகத்தில் வெளிப்படும். எனவே பாசிடிவாக இருங்கள்.

ஆலியா பட்டின் அழகு ரகசியம் இதுதானா..? நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!
ஆலியா சொன்னது போல் முல்தானி மெட்டி முகத்தில் வடியும் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு , இறந்த செல்கள் என நீக்கி சருமத் துளைகளை சுவாசிக்கச் செய்யும். நீங்களும் வீட்டில் முயற்சி செய்ய இதோ டிப்ஸ்
  • Share this:
ஆலியா பட் வோக் இதழுக்கு அளித்த பேட்டியில் உங்களின் அழகு ரகசியம் என்ன என்று கேட்டபோது “ உள்ளே என்ன இருக்கிறதோ அதுதான் முகத்தில் வெளிப்படும். எனவே பாசிடிவாக இருங்கள். சருமம் சுவாசிக்க ஏதுவாக எதுவுமே போடாமல் அப்படியே விட்டுவிடுவேன்.


அதை கெமிக்கல்கள் பயன்படுத்தி தொந்தரவு செய்ய மாட்டேன். அப்படியே போடுவதாக இருந்தால் என் பாட்டி சொல்லிக்கொடுத்த முல்தானி மெட்டியைதான் ஃபேஸ் பேக்காக அப்ளை செய்வேன். அது நல்லா ஒர்க்அவுட் ஆகுது” எனக் கூறினார்.


ஆலியா சொன்னது போல் முல்தானி மெட்டி முகத்தில் வடியும் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு , இறந்த செல்கள் என நீக்கி சருமத் துளைகளை சுவாசிக்கச் செய்யும். நீங்களும் வீட்டில் முயற்சி செய்ய இதோ டிப்ஸ்தலை முடி பராமரிப்பிற்கு : முல்தானி மெட்டியுடன் ஆப்பில் சிடர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் அதை முடியின் வேர்களில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து தலைக்குக் குளித்துவிடுங்கள்.


பருக்கள் மறைய : சிவந்த பருக்களை உடைத்து அகற்ற முல்தானி மெட்டியுடன் கருவேப்பிலை பொடி சேர்த்து பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். சிறிய பெரிய என வளர்ந்திருக்கும் பருக்களும் அழியும். கரும்புள்ளிகளும் மறையும்.


எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்காக : எண்ணெய் பிசுக்கு நீங்க முல்தானி மெட்டியுடன் தக்காளி சாறு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
இறந்த செல்களை அகற்ற : ஒட்ஸுடன் முல்தானி மெட்டி சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள். பின் ஸ்கிரப் போல் தேய்த்தால் இறந்த செல்கள் நீங்கிவிடும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.


வறண்ட சருமத்தினருக்காக : முல்தானி மெட்டியுடன் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்ய 15 நிமிடங்கள் கழித்து கழுவ சருமம் மென்மையாகி ஈரப்பதம் இருக்கும்.
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading