ஆலியாவை பார்த்தாலே இளைமைத் துள்ளல்தான். வருடங்கள் கழிந்தாலும் அவருடைய இளமை நம்மை கட்டிப்போடுகிறது. இதன் இயற்கையானத் என்றாலும் அதைப் பராமரிப்பதில்தான் அவரின் இளமையின் நிலைத் தன்மை அடங்கியுள்ளது. குறிப்பாக அழகைப் பராமரிக்க அவர் எடுத்துக்கொள்ளும் மெனக்கெடல்கள் ஏராளம். அதுவும் இயற்கை முறையிலான முயற்சிகளையே எப்போதும் அவர் தேர்வு செய்வார். அதை அவரே பல முறை இன்ஸ்டா வழியாகவும், நேர்காணல்களிலும் கூறியுள்ளார்.
அந்த வகையில் யோகா மூலம் எப்படி சரும அழகு, தலை முடி பராமரிப்பை மேம்படுத்துவது என்பதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
சமீப நாட்களாக சமந்தா, ரகுல் ப்ரீத்சிங் என பல பிரபலங்கள் ஏரியல் யோகா முயற்சி செய்கின்றனர். இது உடல் , மனம் என அனைத்து வகைகளிலும் நமக்கு நன்மை பயக்கின்றன. இரத்த ஓட்டம் சமச்சீராக இருப்பதால் தலை முதல் கால் வரை நமக்கு நன்மைகளே அதிகம்.
அலியாவும் இன்ஸ்டாவில் ஏரியல் யோகா பற்றி பகிர்ந்துள்ளார். அதில் அவர் செய்யும் யோகா நிலை ’நடராஜாசனம்’. ”இந்த ஏரியல் யோகாவானது சருமத்தை பராமரிக்கவும், தலைமுடியை பராமரிக்கவும் உதவுகிறது. ஜொலிக்கும் சருமத்தை பெற ஏரியல் யோகா உதவுகிறது என்று கூறியுள்ளார்.
”சருமத்தின் நச்சுக்களை நீக்கவும் , புவி ஈர்ப்பு விசைக்கு எதிர் திசையில் நாம் செய்யும் இந்த விஷயம் நியூட்ரியன்ஸ் மற்றும் ஆக்சிஜனை முகத்திற்கும் கொண்டு போய் சேர்க்கின்றன. குறிப்பாக இது முகத்தின் சருமத் துகள்களையும் மற்றும் உச்சந்தலையின் முடியின் வேர்களையும் தூண்டுகிறது” என்று கூறியுள்ளார்.
எனவே உங்கள் சருமம் மற்றும் உடல் அழகைப் பராமரிக்க ஏரியல் யோகா சிறந்த தேர்வாக இருக்கும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.