• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நடிகை காஜல் அகர்வாலின் அழகின் ரகசியம் இது தானா?அவரே கூறிய டிப்ஸ்..

நடிகை காஜல் அகர்வாலின் அழகின் ரகசியம் இது தானா?அவரே கூறிய டிப்ஸ்..

நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் வீட்டிலேயே தனது சருமத்தை பராமரிக்கும் டிப்ஸ் உங்களுக்காக இதோ..

  • Share this:
நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். தற்போது அவருக்கு திருமணம் ஆன நிலையிலும் மிகவும் பொலிவாக தனது சருமத்தை பராமரித்து வருகிறார். பெரும்பாலும் தான் இயற்கை அழகு சார்ந்த அழகு பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தி வருவதாக அவர் அடிக்கடி கூறி வருகிறார். சமீபத்தில் நடிகை காஜல் தான் வீட்டிலேயே பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அதுகுறித்து இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்,
தயிர் - 1 ஸ்பூன்.

செய்முறை :

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொண்டு அதில் எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்து பின்னர் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் சருமம் பொலிவாகும்.

எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பலவித நன்மைகளை வழங்கும். சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை குறைக்க எலுமிச்சை சாறு உதவும். சருமத்தில் ஏற்படக்கூடிய தடிப்புகளைக் குறைக்கவும், கரும் புள்ளிகள் நீக்கவும் மேற்கண்டவற்றை நீங்கள் செய்து வரலாம்.

மேலும் எலுமிச்சையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் பருக்கள் உருவாக காரணமான பாக்டீரியாக்களை அழித்து, அடிக்கடி பருக்கள் வருவதை தடுக்கிறது.



இதற்கு எலுமிச்சையை சாறு எடுத்து அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் மட்டுமின்றி கை, கால்களிலும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது பருக்கள் உருவாவதை தடுப்பது மட்டுமின்றி, இறந்த செல்களை நீக்கவும் உதவியாக இருக்கும்.

Also read : அழகான ரோஸி லிப்ஸ் வேணுமா ? வீட்டிலேயே பராமரிக்க ஈஸியான டிப்ஸ்..

ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் சருமம் பொலிவாவதை காண முடியும்.

ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.

இதேபோல தயிரும் நமது சரும ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரிக்க உதவும் எளிதில் கிடைக்கக்கூடிய ஓர் பொருள் ஆகும். தயிரில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும். மேலும் சருமத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், கருப்பு திட்டுகள், வெயிலால் ஏற்பட்ட கருமையை நீக்கவும் தயிர் உதவுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: