Home /News /lifestyle /

ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் செய்து கொள்ளும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் செய்து கொள்ளும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்

ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்

ஒருவர் ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்டை தேர்வு செய்யும் முன் முடி வளர்ச்சி என்பது நபருக்கு நபர் வேறுபடும் ஒன்று என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

நன்றாக உடை அணிந்து கொண்டு வெளியே சென்றாலும் ஒருவருக்கு அதிக தன்னம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருக்கிறது தலைமுடி. பல்வேறு காரணிகளால் பலருக்கு முழு வழுக்கை மற்றும் தலையின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வழுக்கை ஏற்படுகிறது. இது பாதிக்கப்படும் நபருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களது சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. முடி உதிரும் பிரச்சனையானது மரபியல் முதல் ஊட்டச்சத்து குறைபாடுகள் வரை பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். இதற்கு சிகிச்சையளிக்க பல வழிகள் உள்ளன. இதில் ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் (hair transplant) என்பதும் ஒன்று.

முடிமாற்று அறுவை சிகிச்சையான hair transplant-ல் தலை மற்றும் பின்கழுத்துப் பகுதிகளில் இருந்து முடிகளை எடுத்து மண்டையில் முடி இல்லாத இடங்களில் பொருத்தப்படும். முடி உதிர்தல் குறிப்பாக ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளமை தோற்றத்தை மீட்டெடுப்பதை ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் நோக்கமாக கொண்டுள்ளது. இது முடியை மீண்டும் வளர்க்கும் ஒரு முறையாகும்.

ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் சிகிச்சைகள் தோல்வியடையும் அபாயம் மிகவும் குறைவு, பயிற்சி பெற்ற நிபுணரால் இந்த சிகிச்சை செய்யப்படும் போது நடைமுறையில் எந்த பக்க விளைவுகளும் இருக்காது. இந்த நுட்பம் முடி உதிரும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவரின் தோற்றத்தை மீட்டெடுப்பதன் மூலம் அவர் மீண்டும் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும் என்று கூறுகிறார் பிரபல முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அம்ரேந்திர குமார்.

ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் பற்றி டாக்டர் அம்ரேந்திர குமார் பகிர்ந்து கொண்டுள்ள சில முக்கிய விஷயங்கள் பின்வருமாறு..



இது அறுவை சிகிச்சை:

ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் என்பது நாம் முன்பே கூறியபடி தலையின் ஒரு பகுதியிலிருந்து அனைத்து நுண்குமிழ்கள் மற்றும் வேர்களை அகற்றி, வழுக்கையாக உள்ள பகுதிக்கு இடமாற்றம் செய்வதை உள்ளடக்கிய அறுவை சிகிச்சை முறையாகும். இந்த செயல்முறை ஆக்கிரமிப்பு அல்லாத நுட்பங்ககளை கொண்டது மற்றும் இதை செய்து முடிக்க சில மணிநேரங்கள் மட்டுமே ஆகும்.

சிறப்பு கவனிப்பு தேவையில்லை..

ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் மூலம் இடமாற்றம் செய்யப்பட்ட முடி வளர ஆரம்பித்தவுடன், அதை சாதாரண முடியை போலவே கையாளலாம். இடமாற்றம் செய்யப்பட்ட முடி இயற்கையான முடியைப் போன்றது. அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஸ்டைல் செய்யலாம். மேலும் இடமாற்றம் செய்யப்பட்ட முடிக்கு சிறப்பு கவனிப்பு தேவையில்லை.

குளிர் காலங்களில் தோல் வறண்டு போகாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை..!

மந்திரக்கோல் இல்லை..

ஒருவர் ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்டை தேர்வு செய்யும் முன் முடி வளர்ச்சி என்பது நபருக்கு நபர் வேறுபடும் ஒன்று என்பதை என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். முடி மாற்று அறுவை சிகிச்சை ஒன்றும் மந்திரக்கோல் அல்ல. முடி இருக்கும் பகுதியில் இருக்கும் முடியின் அளவை கொண்டு ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்டின் ரிசல்ட் தீர்மானிக்கப்படும். தவிர முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டால், தலை அடர்த்தியான முடியை கொண்டிருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.



நிரந்தரமானதா?

ஆம், ட்ரான்ஸ்பிளான்ட் செய்யப்பட்ட முடி மிக நீண்ட காலத்திற்கு, அநேகமாக வாழ்நாள் முழுவதும் வளரும். சில நேரங்களில் ட்ரான்ஸ்பிளான்ட் செய்யப்பட்ட முடி இயற்கையான முடியைப் போலவே இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு இடையில் உதிர்கிறது. அதன்பின் அதன் வேர்களில் இயற்கையாகவே முடியை முளைக்க ஆரம்பித்து வாழ்நாள் முழுவதும் வளர்வது தொடர்கிறது.

சிகிச்சைக்கு பிறகு..

ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்டிற்கு பின் மருத்துவர் பரிந்துரைக்கும் ஆன்டிபயாட்டிக்ஸ் மற்றும் ஆன்டி-இன்ஃபளமேட்ரி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த விஷயம் ஹெட் வாஷை பயன்படுத்துவது. சிகிச்சையை தொடர்ந்து அடுத்த 3 வாரங்களுக்கு நேரடியாக சூரிய ஒளி, கடும் உடற்பயிற்சி மற்றும் நீச்சல் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு எந்தவொரு ரசாயன பொருட்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

முடி உதிர்வை பற்றிய கட்டுக்கதைகள் - சரும நிபுணர் விளக்கம்

தக்க வைக்க மருந்து

ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் செய்யப்பட்ட முடியை தக்கவைக்க எந்த மருந்தும் தேவையில்லை. தலையின் முன்பகுதியில் ட்ரான்ஸ்பிளான்ட் செய்யப்படாத முடிகளில் முடி உதிர்தல் ஏற்படலாம். எனவே முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Bald Head, Hair care

அடுத்த செய்தி