இந்தியாவின் "வாசனை திரவிய தலைநகர்" பற்றி தெரியுமா..? இங்கு ஆச்சரியமூட்டும் பல விஷயங்கள் இருக்கு

வாசனை திரவிய தலைநகர்

இந்நகரத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பெர்ஃப்யூம் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.

  • Share this:
நம் நாட்டின் பெர்ஃப்யூம் கேப்பிட்டலாக (நறுமண தலைநகர்) குறிப்பிடப்படுகிறது உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கனோஜ் (Kannauj) நகரம். உ.பி-யின் கான்பூரிலிருந்து சுமார் 2 மணி நேர பயண தொலைவில் உள்ளது இந்நகரம். இது ஒரு வாசனை நகரம் மட்டுமல்ல பண்டைய மற்றும் வளமான வரலாற்றை கொண்டிருக்க கூடிய நகரமாகும். கனோஜ் நகரம் பெர்ஃப்யூம் கேப்பிட்டலாக குறிப்பிடப்படுவதற்கு காரணம் நமக்கு பிடித்த டிசைனர் பிராண்ட் பெர்ஃப்யூம்கள் விலை மலிவாக கிடைக்கும் என்பது அர்த்தமில்லை.

இங்கு தயாரிக்கப்படும் பெர்ஃப்யூம்கள் பண்டைய உலகின் ராஜ வாசனை அனுபவத்தை நமக்கு அளிக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாசனை திரவிய வர்த்தகம் செய்து வருவதால், நாட்டின் வாசனை திரவிய உற்பத்தியில் கனோஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தான் "இந்தியாவின் வாசனை திரவிய தலைநகரம்" என்று இந்நகரம் குறிப்பிடப்படுகிறது. கனோஜ் நகரத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பெர்ஃப்யூம் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.

இங்கு உலகத்தரம் வாய்ந்த வாசனைத் திரவியங்கள் பெருமளவு தயாரிக்கப்படுகின்றன. ஏனென்றால் இந்த கனோஜ் நகரம் வாசனை திரவியங்களை தயாரிப்பதில் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. பெர்ஃப்யூம்களை தயாரிக்க இங்கு பயன்படுத்தப்படும் நடைமுறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். கனோஜ் நகரில் அதிகளவில் பெர்ஃப்யூம் ஆலைகள் அமைந்திருக்கு முக்கிய காரணம் பண்டைய வரலாறு தான். அதை குறித்து பார்க்கலாம்.சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கனோஜை ஆட்சி செய்த ஹர்ஷவர்தன் அரசர் வாசனைத் திரவியங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். எனவே நகரத்தில் வாசனை திரவிய தயாரிப்பை ஊக்குவித்து சலுகைகளையும் வழங்கினார். வாசனை திரவியங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வெளிநாடுகளிலிருந்து மூலப்பொருட்களை வரவைத்து விதவிதமான வாசனை திரவியங்களை தயாரிக்க வழிவகுத்தார் என்பது வரலாறு. அத்தரை எவ்வாறு பயன்படுத்தி வாசனை திரவியங்களை தயாரிப்பது என்ற கலை கனோஜ் நகரத்தில் நன்கு அறியப்பட்ட ஒன்று.

சர்வதேச டூர் ப்ளான் பண்றீங்களா ? இந்த 10 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்..

அத்தர்கள் பாரம்பரிய சந்தன எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தி பாரம்பரியத்தை தக்க வைக்கின்றன. ரோஜா, மல்லிகை மற்றும் சந்தனம் போன்ற பல்வேறு பூக்களை உள்ளடக்கிய பல்வேறு தாவரவியல் மூலங்களிலிருந்து ஒரு இயற்கை வாசனை எண்ணெயான அத்தர் பிரித்தெடுக்கப்படுகிறது. கனோஜ் நகர வீதிகள் மற்றும் மார்க்கெட் எப்போதும் பிஸியாகவே இருக்கும்.இங்கு தயாரிக்கப்படும் பெர்ஃப்யூம்கள் ஆடம்பர பொருளாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், உற்பத்தி செய்யப்படும் இடங்கள் ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாகவே காணப்படும். உங்களுக்கு விரூபமான வாசனை அடங்கிய பெர்ஃப்யூமை தேடிப்பிடிக்க நீங்கள் குறுகிய தெருக்கள் வழியே தான் பயணிக்க வேண்டும்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் திரவ தங்கம் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ரோஜா அத்தர் ஒரு கிலோ ரூ.2,18,000 ஆகும். கான்பூர் அல்லது ஆக்ராவிற்கு செல்லும் நகர மக்கள் மிக எளிதாக இந்நகரத்திற்கு செல்லலாம். அதிநவீன மால்களில் கிடைக்கும் பெர்ஃப்யூம்களை விட, இங்கு கிடைக்கும் மேஜிக்கல் வாசனை நிறைந்த அத்தர் பெர்ஃப்யூம்கள் நம்மை மிகவும் கவர்ந்திலுக்கும் சிறப்பு தன்மை கொண்டதாக இருக்கும். எனவே உத்திரபிரதேச மாநிலத்திற்கு நீங்கள் டூர் சென்றால் தவறாமல் இந்தியாவின் "பெர்ஃப்யூம் கேப்பிட்டலுக்கு" செல்லும் வாய்ப்பை தவற விடாதீர்கள்.

 
Published by:Sivaranjani E
First published: