ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கொரிய மக்களின் அழகுக்கும்.. ஆரோக்கியத்திற்கும் இதுதான் காரணமா..?

கொரிய மக்களின் அழகுக்கும்.. ஆரோக்கியத்திற்கும் இதுதான் காரணமா..?

சரும நிறத்தை தெளிவாக்கும் : இரவு முழுவதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த நீரை சேமித்து வைத்து அதை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவினால் நொடியில் முகம் பளபளக்கும். ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி தினமும் முகத்தில் ஸ்பிரே அடிக்கலாம்.

சரும நிறத்தை தெளிவாக்கும் : இரவு முழுவதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த நீரை சேமித்து வைத்து அதை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவினால் நொடியில் முகம் பளபளக்கும். ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி தினமும் முகத்தில் ஸ்பிரே அடிக்கலாம்.

கொரிய மக்களின் உணவு பழக்க முறையில் முழு உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. வேக வைத்த உணவுகள், ப்ளான்ச் செய்தல், ஃபெர்மென்ட் செய்வது, உப்பு மற்றும் காரத்தில் ஊற வைப்பது, நெருப்பில் வாட்டுவது போன்ற சமைக்கும் முறைகள் கொரியாவில் பயன்படுத்தப்படுகின்றன

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரியன் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. பாரசைட், ஸ்க்விட் கேம், BTS band என்று கொரியாவின் பொழுபோக்கு மீது இருக்கும் பேரார்வம் தவிர்த்து, கொரியன் ஸ்கின் கேர், அழகு சாதனப் பொருட்களும் உலகளாவிய சந்தையில் தனிப்பட்ட இடத்தை பெற்றுள்ளது.

கொரியாவில் பயன்படுத்தப்படும் அழகு மற்றும் சரும பராமரிப்புப் பொருட்களுக்கு இந்தியாவிலும் ஏகப்பட்ட டிமாண்ட். பட்டு போன்ற. மாசு மருவில்லாத பளபளப்பான சருமம், வயதை கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு இளமையான தோற்றம் இவையெல்லாம் ஆச்சரியப்பட வைக்கிறது. இதற்கான காரணம் இவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை.

பாரம்பரியமான நாடுகளில் உணவு என்பது மருந்தாக பார்க்கப்படுகிறது. ஊட்டச்சத்து மற்றும் குணப்படுத்தும் ஆற்றல் நிறைந்தவையாக கொரியாவும் உணவுகளை பயன்படுத்துகிறது. இவர்களின், பாரம்பரிய உணவு பழக்கத்தில் பலவிதமான காய்கறிகள், பழங்கள், சூப், அரிசி மற்றும் மீன் உணவுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கொரியர்களின் ஆரோக்கியமான பழக்க வழக்கத்தை பற்றி இங்கே பார்க்கலாம்.

கொரிய மக்களின் உணவுப்பழக்கம்

கொரிய மக்களின் உணவு பழக்க முறையில் முழு உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. வேக வைத்த உணவுகள், ப்ளான்ச் செய்தல், ஃபெர்மென்ட் செய்வது, உப்பு மற்றும் காரத்தில் ஊற வைப்பது, நெருப்பில் வாட்டுவது போன்ற சமைக்கும் முறைகள் கொரியாவில் பயன்படுத்தப்படுகின்றன. அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களாக எல்லா நாடுகளிலும் கூறப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கொரியாவும் விதிவிலக்கல்ல. காய்கறிகளை பொருத்தவரை எல்லா காய்கறிகளையுமே சாப்பிடுகிறார்கள். பச்சையாக, சமைக்கப்பட்ட, வேகவைக்கப்பட்ட, கிரில் செய்யப்பட்ட காய்கறிகளை கொரிய மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதேபோல ஆரோக்கியமான உணவாக, இயற்கையான இனிப்பாக பழங்களை விரும்பி உண்கிறார்கள்.

மீன் உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கொரிய மக்கள் புரோட்டின் நிறைந்த இறைச்சி உணவுகளை குறைந்த அளவில் உட்கொள்கின்றனர். இறைச்சிக்கு பதிலாக கொரியாவில் சில சிறப்பு உணவுகள் உள்ளன. சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு, கிங் ஆய்ஸ்டர் காலன் மற்றும் காயவைக்கப்பட்ட ஷிட்டாக்கி எனப்படும் காளான், ஆகியவை பெரும்பாலும் இறைச்சிக்கு பதிலாக கொரிய உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. அரிசி மற்றும் அரிசியில் செய்யப்பட்ட நூடுல்ஸ் ஆகிய இரண்டுமே கொரிய உணவில் முக்கியமான இடம் பெற்றுள்ளன. சாப்பாட்டுக்கு பதிலாக அரிசி மாவில் செய்யப்பட்ட வேகவைக்கப்பட்ட டம்பிளிங் (கொழுக்கட்டைகள்) மற்றும் கிளாஸ் நூடுல்ஸ் ஆகியவை பயன்படுத்துகின்றனர்.

இந்த ஒரு பொருளை கொண்டு உங்க தலைமுடியை அலசினால் முடியே கொட்டாதாம்.. அடர்த்தியாக வளருமாம்

கொரிய மக்கள் தவிர்க்கும் உணவுகள்

மைதா உட்பட, கோதுமை சம்பந்தப்பட்ட உணவுகள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றை கொரிய மக்கள் தவிர்க்கிறார்கள். பிரெட், பாஸ்தா, செரியல்கள், இனிப்பு வகைகள், கேக் மற்றும் மைதா அல்லது கோதுமை மாவு பயன்படுத்தி செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் கொரிய மக்கள் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள்.

கொழுப்பு நிறைந்த, ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுகள், சாஸ், கொழுப்பு நிறைந்த இறைச்சி ஆகிய உணவுகளும் கொரிய உணவில் இடம்பெறுவதில்லை. அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள், செயற்கை இனிப்புகள், சுவையூட்டிகள் ஆகியவற்றை பெரும்பாலும் கொரிய மக்கள் தவிர்க்கின்றனர்

உணவுகளை தவிர்த்து அவர்களுடைய வாழ்க்கை முறையும் ஆரோக்கியத்தை சார்ந்தே அமைந்துள்ளது. எந்த அளவுக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்கிறார்களோ அதே அளவுக்கு உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். உணவுகளுக்கு இடையே தின்பண்டம் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் காணப்படுவதில்லை. அதேபோல கொழுப்பு நிறைந்த உணவுகளையும் குறைவான கலோரிகள் உள்ள உணவுகளை விரும்புகிறார்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Korean Beauty Tips