ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் சருமத்தை பாதுக்காக்க நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஃபேஸ் பேக்குகள்!

குளிர்காலத்தில் சருமத்தை பாதுக்காக்க நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஃபேஸ் பேக்குகள்!

‘வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளீச்சென ஆக்குவது எப்படி?’, ‘சமையலறையில் இருக்கும் இந்த பொருட்கள் போதும் சருமத்தை ஜொலி, ஜொலிக்க வைக்கலாம்’ என பல விஷயங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அப்படி இஷ்டத்துக்கு வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களை முகத்தில் அள்ளி பூசுவது பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

‘வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளீச்சென ஆக்குவது எப்படி?’, ‘சமையலறையில் இருக்கும் இந்த பொருட்கள் போதும் சருமத்தை ஜொலி, ஜொலிக்க வைக்கலாம்’ என பல விஷயங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அப்படி இஷ்டத்துக்கு வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களை முகத்தில் அள்ளி பூசுவது பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள மாசு, அழுக்குகள், இறந்த செல்கள் நீங்குகிறது. இதனால் சருமத்தில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் மேம்படுகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஃபேஸ் பேக் சருமத்தின் இளமையை பாதுகாக்க ஒரு சிறந்த வழியாகும். அவை சருமத்தின் ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்துகிறது. ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள மாசு, அழுக்குகள், இறந்த செல்கள் நீங்குகிறது.

இதனால் சருமத்தில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் மேம்படுகிறது, எனவே செல்கள் புதுப்பித்தல் நடைபெறுகிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறன் அதிகரிக்கிறது. மேலும் இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது.

பல வகையான பேக்குகள் உள்ளன, ஆனால் அவற்றில் உங்கள் சருமத்திற்கு என்ற ஒன்றை தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும். வறண்ட சருமம் இருப்பவர்கள் சருமத்தை ஈரப்பதமாக்க தேன், ஆரஞ்சு சாறு, பால், தயிர், பாதாம் எண்ணெய், கற்றாழை, தேன் கலந்த பேஸ் பேக்குகள் பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.

குளிர்காலத்திற்கான சில ஃபேஸ் பேக்குகள் இங்கே:

1. ஒரு பவுலில் முட்டையின் மஞ்சள் கரு எடுத்து கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பால் பவுடரை கலக்கவும். இதனை பேஸ்டாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 20 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவவும். இதனால் சருமம் பொலிவாகும்.

2. உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் மற்றும் அதனால் முகப்பருக்கள் இருந்தால் முல்தானி மிட்டி பயன்படுத்துவது நல்ல பலனை தரும். ஒரு பவுலில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஒரு டீஸ்பூன் தயிருடன், அரை தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் முல்தானி மிட்டி பவுடர் சேர்த்து பேஸ்டாக கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரில் கழுவி வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கிவிடும்.

3. பழுத்த பப்பாளியை கூழ் செய்து முகத்தில் தடவினால் சருமம் பொலிவாகும். பப்பாளி பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பிரகாசமடையும்.

4. குளிர்காலத்தில் தோல் பிரச்சனைகளுக்கு கேரட் பயன்படுத்துவது உடனடி பலனை தரும். கேரட்டை அரைத்து முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்ளை செய்து உலர விடவும். பின்னர் நீரில் கழுவவும். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. இது சருமத்தை ஈரப்பதமூட்டவும், ஊட்டமளிக்கவும் உதவுகிறது

5. ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த அவகோடா பழத்தை எடுத்து கொள்ளளவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், தயிர் மற்றும் தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் விடவும். பின்னர் கழுவி விடுங்கள். உங்கள் சருமம் வறட்சி நீங்கி அழகாகும்.

6. ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி ஆரஞ்சு தோல் பவுடர், தயிர் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் சரும அழகு மேம்படும்.

7. ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனால் சருமம் பொலிவாகும்.

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? நீங்கள் பயன்படுத்த வேண்டிய சீரம் இதுதான்!

8. ஒரு டீஸ்பூன் பாதாம் பவுடர், தேன், தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் இவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்கு பேஸ்ட் போல கலக்கவும். இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து கழுவவும். இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

9. தேன் அனைத்து தோல் வகைகளுக்கும் பொருந்தும். எண்ணெய் பசை மற்றும் முகப்பரு உள்ள சருமத்திற்கு, ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு மஞ்சள் கலந்து சருமத்தில் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் இருப்பவர்கள் இதனுடன் இதனுடன் முட்டை சேர்த்து கொள்ளலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Face pack, Winter