ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் பொடுகு தொல்லை ஏன் மோசமாகிறது..? தடுப்பதற்கான வழிகள்...

குளிர்காலத்தில் பொடுகு தொல்லை ஏன் மோசமாகிறது..? தடுப்பதற்கான வழிகள்...

பொடுகு தொல்லை

பொடுகு தொல்லை

சர்க்கரை மற்றும் இனிப்பு நுகர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் இனிப்புகள் ஆண்ட்ரோஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதால் சருமத்தில் அரிப்பு மயிர்க்கால்களுக்கு சேதம் உள்ளிட்ட சிக்கல்களை ஏற்படுத்த கூடும். குறிப்பாக குளிர்காலத்தில் அதிக சர்க்கரை சேர்த்து கொள்வது பொடுகு பிரச்சனைகளை கணிசமாக அதிகரிக்க செய்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்னும் சில வாரங்களில் குளிர்காலம் துவங்க உள்ள நிலையில் இந்த சீசன் கடும் குளிரோடு கூடவே உச்சந்தலையில் பொடுகுகளையும் கொண்டு வர கூடும். பொதுவாக குளிர்காலத்தில் பொடுகு பிரச்சனை அதிகமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணம் குளிர்காலத்தில் பொதுவாக உச்சந்தலை வறண்டு போவது. வறண்ட மற்றும் குளிர்ந்த காற்று, ஏராளமான மலாசீசியா பூஞ்சை ( Malassezia fungus) ஆகியவற்றின் காரணமாகவே குளிர்காலத்தில் உச்சந்தலை வறண்டு உலர்ந்து செதில்கள் உரிந்து வருகின்றன. இதனால் பொடுகு தொல்லை அதிகமாகிறது. இதனிடைய குளிர்காலத்தில் பொடுகு அதிகரிப்பு பற்றி பேசும் நிபுணர்கள் இயற்கையாகவே உச்சந்தலையில் காணப்படும் நுண்ணுயிரியான மலாசீசியா வளர்ச்சி உச்சந்தலையில் அதிகரிக்கும் போது பொடுகும் அதிகமாகிறது.

கூடவே மன அழுத்தம், ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் மற்றும் உணவு மாற்றங்களும் பொடுகு தொல்லை அதிகரிக்க காரணமாகின்றன என்கிறார்கள். குளிர்காலத்தில் அதிகரிக்கும் பொடுகை சமாளிக்க உதவும் தீர்வுகள் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார் பிரபல தோல் மருத்துவர் நேஹா ஷர்மா.

குளிர்காலத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 3 - 4 முறை சீப்பை கொண்டு தலை சீவுவது உச்சந்தலை மற்றும் தலை பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. தலைமுடியை அதிகம் சீவுவதால் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் எண்ணெய்களின் சுரப்பு அதிகரிக்கிறது. இதன் மூலம் செதில்களற்ற ஆரோக்கியமான உச்சந்தலையை பெறலாம்.
குளிர்காலத்தில் தாகம் அதிகம் எடுக்காது என்பதால் தண்ணீர் குடிப்பதில் பலரும் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் எல்லா சீசன்களை போலவே குளிர்காலத்திலும் தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடித்து உடலையும், சருமத்தையும் ஹைட்ரேட்டாக வைத்திருப்பது பொடுகு மற்றும் தோலழற்சிகளை எதிர்த்து போராட உதவும்.
ஈரமான முடி தலைவலி மற்றும் ஜலதோஷத்திற்கு வழிவகுக்கும் என்பதால் பொதுவாக குளிர் சீசனில் பலரும் ஹேர் ட்ரையர்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதிக வெப்பம் உச்சந்தலையில் செதில்கள் அதிகரிக்க பொதுவான காரணங்களில் ஒன்று. எனவே அயர்னிங் போர்டு மற்றும் ஹேர் ட்ரையர்களின் நேரடி வெப்பத்தை தலையில் பயனப்டுத்துவதை தவிர்க்கவும்.
நமது உணவு பழக்கங்களும் பொடுகை அதிகரிக்க சில நேரங்களில் காரணமாகின்றன. எனவே உங்கள் டயட்டில் முக்கிய வைட்டமின்கள், மினரல்கள், ஜிங்க், ஒமேகா 3, வைட்டமின் பி உள்ளிட்டவை அடங்கிய ஆரோக்கிய உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை மற்றும் இனிப்பு நுகர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் இனிப்புகள் ஆண்ட்ரோஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதால் சருமத்தில் அரிப்பு மயிர்க்கால்களுக்கு சேதம் உள்ளிட்ட சிக்கல்களை ஏற்படுத்த கூடும். குறிப்பாக குளிர்காலத்தில் அதிக சர்க்கரை சேர்த்து கொள்வது பொடுகு பிரச்சனைகளை கணிசமாக அதிகரிக்க செய்கிறது.
பொடுகு தொல்லையை கட்டுப்படுத்த ஜிங்க் பைரிதியோன், செலினியம் சல்ஃபைட் அல்லது 2% கெட்டோகனசோல் கொண்ட ஷாம்புகளை பயன்படுத்தலாம்.
எந்த ஒரு சிக்கலையும் மேலும் அதிகரிப்பதில் மன அழுத்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. எனவே ஆரோக்கியமான உணவுடன், மனதை ரிலாக்ஸாக வைத்து கொள்ள தினசரி உடற்பயிற்சிகள் செய்வதும் முக்கியம்.
தினசரி ஒர்கவுட்டிற்கு பிறகு உங்கள் உச்சந்தலையை க்ளீன் செய்வதும் அவசியம். இல்லை என்றால் வியர்வை காரணமாக பொடுகு தொல்லை அதிகரிக்கலாம்.
Published by:Josephine Aarthy
First published:

Tags: Dandruff, Hair care, Home remedies