ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் முகத்திற்கு ஐஸ் கட்டிகளை அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா.?

உங்கள் முகத்திற்கு ஐஸ் கட்டிகளை அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா.?

சருமப்பராமரிப்பு

சருமப்பராமரிப்பு

எப்போதும் நீங்கள் பயன்படுத்தும் வழக்கமான தோல் பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்கள் கழுத்து பகுதி மற்றும் முகம் முழுவதும் ஐஸ் க்யூப்ஸ்களை கொண்டு தேய்ப்பது மிக பெரிய நன்மைகளை அளிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

எப்போதும் நீங்கள் பயன்படுத்தும் வழக்கமான தோல் பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்கள் கழுத்து பகுதி மற்றும் முகம் முழுவதும் ஐஸ் க்யூப்ஸ்களை கொண்டு தேய்ப்பது மிக பெரிய நன்மைகளை அளிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.?

ஆரோக்கிய நோக்கங்களுக்காக உடலின் ஒரு பகுதியில் ஐஸ் பயன்படுத்துவது குளிர் சிகிச்சை அல்லது கிரையோதெரபி என்று அழைக்கப்படுகிறது. ஐஸ் ஃபேஷியல் அல்லது கிரையோ ஃபேஷியல் ஆகியவை தற்போது ட்ரெண்டாகி வரும் சரும பராமரிப்பு முறைகளாக இருந்து வருகின்றன. ஸ்கின் கண்டிஷனை பொருட்படுத்தாமல் முகத்தில் ஐஸ் க்யூப் பயன்படுத்துவது உங்கள் முகத்திற்கு பல அற்புதங்களைச் செய்யும். முகத்தில் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் சில அற்புதமான நன்மைகளை பற்றி Influennz- Hair & Skin Clinic-ன் நிறுவனரும் மற்றும் தோல் மருத்துவருமான டாக்டர் கீதிகா ஸ்ரீவஸ்தவா பகிர்ந்து கொண்டுள்ள தகவல்களை கீழே பார்க்கலாம்.

ஐஸ் க்யூப்ஸ் அல்லது ஐஸ் ஃபேஷியல்களின் அற்புத நன்மைகள் இங்கே...

வீங்கிய சருமம் மற்றும் சன் பர்ன்களை தணிக்கும்:

முகத்தில் ஐஸ் கட்டி பயன்படுத்துவதால் கிடைக்கும் மிக பெரிய பயன்களில் இது முக்கியமானது. எரிந்த சருமத்தில் ஐஸ் வைக்க வேண்டும் அல்லது ரத்த காயம் இருந்தால் அதில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும் என்று உங்கள் அம்மா சிறிய வயதில் சொன்னதை இங்கே நினைவில் கொள்ளுங்கள். ஐஸ் கட்டிகளை சருமத்தில் பயன்படுத்துவது தோல் அழற்சி அல்லது வெயிலுடன் தொடர்புடைய எரிச்சல் உணர்வை அமைதிப்படுத்தும்.

கண்களை சுற்றியுள்ள வீக்கத்தை குறைக்கும்:

பல காரணங்களால் கண்களை சுற்றியுள்ள பகுதிகள் வீக்கமடையலாம். ஆனால் இதற்கு மிகவும் பொதுவான காரணங்கள் தூக்கமின்மை மற்றும் கண் சோர்வு. முகத்தில் மற்றும் கண்களை சுற்றிய பகுதிகளில் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவது வீக்கங்களை குறைக்கும் மற்றும் நிணநீரை உறிஞ்சும். கிரீன் டீ அல்லது காபி அடிப்படையிலான ஐஸ் க்யூப்ஸ் முக வீக்கத்தை குறைப்பதோடு குறிப்பாக கண்களை சுற்றியுள்ள பை போன்ற வீக்கத்தையும் குறைக்க உதவும்.

நீங்கள் அடிக்கடி முகத்திற்கு பிளீச்சிங் செய்கிறீர்களா..? இந்த விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...

முகப்பருவை தடுக்கிறது:

ஐஸின் சிறந்த பண்புகளில் ஒன்று அழற்சி எதிர்ப்பு. சருமத்தில் இதை பயன்படுத்துவது முகப்பருவை குறைக்க மற்றும் குணப்படுத்த உதவுகிறது. முகப்பருவுக்கு முக்கிய காரணமான அதிகப்படியான செபம் உற்பத்தியையும் குறைக்கிறது. தவிர ஓபன் போர்ஸ்கள் தற்காலிகமாக சுருங்குகின்றன. எனினும் சருமம் மீண்டும் இயல்பான வெப்பநிலைக்கு திரும்பியவுடன் போர்ஸ்கள் மீண்டும் தெரியும்.

மேலும் முகத்திற்கு ஐஸ் க்யூப்ஸ் பயன்படுத்துவது சுருக்கங்களை குறைக்க, சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை குறைக்க மற்றும் முகத்தை பளப்பளப்பாக்க செய்கிறது.

இறந்த சரும செல்களை அகற்றும்:

கிரையோ ஃபேஷியல் என்பது உங்கள் சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது. இறந்த சரும செல்கள் மற்றும் பிற அசுத்தங்களை முகத்திலிருந்து அகற்றுவது மட்டுமல்லாமல், புதிதாக விடுவிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெற உதவுகிறது. முகத்தில் செய்யப்படும் கிரையோ ஃபேஷியலின் போது உறைபனி வெப்பநிலையை அடைய திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃபேஷியல் தோலின் வெளிப்புற அடுக்கில் இருந்து இறந்த சரும செல்களை முழுவதும் அகற்றும் என்பதால் கெமிக்கல் பீல்சுடன் ஒப்பிடக்கூடிய பளபளப்பை கொடுக்கும்.

தண்ணீர் குடிப்பது உண்மையில் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறதா..? 

சீரான மேக்கப்பிற்கு..

உங்கள் ஃபேஸ் மேக்கப்பை தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் முகத்தில் ஒரு 5 நிமிடங்கள் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் மேக்கப் மிருதுவாக இருப்பது மட்டுமின்றி, நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.

மேலும் முகத்திற்கு ஐஸ் க்யூப்ஸ் பயன்படுத்துவது சுருக்கங்களை குறைக்க, சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை குறைக்க மற்றும் முகத்தை பளப்பளப்பாக்க செய்கிறது. ஐஸ் க்யூப்ஸை தோல் பராமரிப்புக்கு ஒரு துணை பொருளாக பயன்படுத்த வேண்டுமே தவிர, அவற்றை முழுமையாக சார்ந்து இருக்காதீர்கள் என்றும் நிபுணர் கீதிகா ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டு உள்ளார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Skin Care