இயற்கையாக ஒளிரும் சருமத்தைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவைகள்

புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் அவை சருமத்தின் இயல்பான பளபளப்பை இழக்கச் செய்கின்றன.

இயற்கையாக ஒளிரும் சருமத்தைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவைகள்
மாதிரி படம்.
  • News18
  • Last Updated: November 18, 2020, 6:56 PM IST
  • Share this:
பலருக்கும், தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த அழகை எப்படி பெறுவது என்பது பற்றிய விஷயங்கள் தெரியாது. சிலர் இன்ஸ்டண்ட்டாக அழகாக வேண்டும் என்று க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த க்ரீம்கள் முழுதும் கெமிக்கல்கள் நிறைந்துள்ளதால் சிறிது நாட்களுக்கு முகம் பொலிவடைவது போல தோற்றமளித்தாலும் கூட, நாளடைவில் உங்களுக்கு வேறு சில பிரச்சனைகளை அளிக்கும் அல்லது சருமம் மேலும் கருப்பாகிவிடும்.

என்றைக்குமே இயற்கையான முறையில் அழகை பெருவது தான் சிறந்த வழியாகும். இயற்கை முறையில் நீங்கள் அழகை பெறுவது என்பது சற்று தாமதமானதாக இருந்தாலும் கூட, உங்களுக்கு அது ஒரு நிரந்தர தீர்வாக அமையும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்.

சருமத்தை நீரேற்றமாக வைத்திருங்கள் : 


உங்கள் சருமத்தை நீங்கள் ஹைட்ரேட்டாக வைத்திருக்கவில்லை என்றால் அது உங்கள் நிறத்தை வறட்சியாக்கும். மேலும் வயதான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற ஆரம்ப அறிகுறிகளுக்கும் அது வழிவகுக்கும். காலையிலும், இரவிலும் சருமத்தை ஹைட்ரேட் செய்வது சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கும்.  

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும். வறண்ட சருமம் இருப்பவர்கள் பசும் பாலை தினமும் இரவு முகத்திற்கு தடவி வர முகம் எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருக்கும்.

உங்கள் சரும வகையை கண்டுபிடித்து பளிச்சென்ற தோற்றம் பெற டிப்ஸ் : உங்கள் சருமத்திற்கு திறம்பட சிகிச்சையளிக்கவும், ஆரோக்கியமான பளபளப்பை அடையவும், உங்கள் தோல் என்ன வகை என்பதை அறிந்து கொள்வது அவசியம். எண்ணெய் சருமமா, உலர் சருமமா அல்லது கலவையா என தெரிந்துகொள்வது அவசியம். இது உங்கள் தோல் வகைக்கு எந்த வகையான தோல் பராமரிப்பு பொருட்கள் பொருந்தும் என்பதைப் புரிந்து கொள்ள உதவும். 

அழகை பேணிக்காப்பதில் கடலை மாவு, முல்தானி மெட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. பொலிவிழந்த சருமத்தை இளைமையூட்ட 2 ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊற விடவும், நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளிச் என தோன்றும்.

டோனரைப் பயன்படுத்தவும்: 

உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள ஒரு நல்ல டோனரை நீங்கள் கொண்டிருப்பது அவசியம். உங்கள் சருமத்தை சுத்தப்படுத்திய பிறகு, ஒரு டோனரைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை ஈரப்படுத்தவும். இது சருமத்தின் Ph அளவை பராமரிக்கவும், முகத்தில் இருக்கும் சிறு துளைகளை குறைக்கவும் இது உதவும். குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் முகம் வழுவழுப்பாகும். சுருக்கம் ஏற்படாது. இளமையாக காட்சியளிக்கலாம். 2 ஸ்பூன் கடலை மாவுடன், 2 ஸ்பூன் ரோஸ்வாட்டர், 4 ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும். 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது.

எக்ஸ்ஃபோலியேட் செய்ய மறக்காதீர்கள்: 

வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மென்மையான எக்ஸ்போலியேட்டரைப் பயன்படுத்துவது சருமத்தில் இறந்த சரும செல்களை அகற்ற உதவும். இது சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் செய்கிறது. சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக இருந்தால் அதற்கு கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போட்டால் முகம் அழகு பொலிவு பெரும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து அதில் தயிர் , எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

Also read... ஆரோக்கியமான தோல் பராமரிப்பிற்கு தேங்காய் மற்றும் மஞ்சள்.. எப்படி பயன்படுத்தவேண்டும் தெரியுமா..?சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்: 

புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் அவை சருமத்தின் இயல்பான பளபளப்பை இழக்கச் செய்கின்றன. சன்ஸ்கிரீன் சருமத்தை மந்தமான தன்மை, கருமையான திட்டுகள், கோடுகள், சுருக்கங்கள் மற்றும் தோல் புற்றுநோயிலிருந்து கூட பாதுகாக்கிறது. வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். தேங்காய் பால் 1 ஸ்பூன், பயத்த மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசை போல பிசைந்து, பின்னர் முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இப்படி செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

உணவில் மாற்றம் அவசியம் : 

நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் சருமத்திலும் பிரதிபலிக்கிறது. இயற்கையான பளபளப்புக்கு, உங்கள் உணவில் நல்ல அளவு ஆக்ஸிஜனேற்றங்களைச் சேர்க்கவும். திராட்சை, பெர்ரி, நட்ஸ்கள் போன்ற உணவுகளைச் சேர்க்கவும். ஃப்ரீ ரேடிக்கல்களை தடுக்க அவை உதவுகின்றன, அவை ஆரோக்கியமான தோல் செல்களை சேதப்படுத்தும். தொன்று தொட்ட முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.
First published: November 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading