Home /News /lifestyle /

கோடை வெயிலிலும் கூலான மேக்கப் லுக்கில் அசத்த 6 டிப்ஸ்! 

கோடை வெயிலிலும் கூலான மேக்கப் லுக்கில் அசத்த 6 டிப்ஸ்! 

Summer MakeUP

Summer MakeUP

Summer Makeup Tips | இந்த வெயில் மற்றும் வியர்வையில் மேக்கப்பை பாதுகாக்க முடியாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், மேக்கப்பை விரும்பும் அனைத்து பெண்களும் கோடை காலத்தில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய மேக்கப் டிப்ஸ்கள் இதோ....

கோடையில் சுட்டெரிக்கும் சூரியனை உங்களுக்கு பிடிக்காமல் போனாலும், அதன் வெப்பத்தில் இருந்து தப்பிப்பது என்பது நடக்காத காரியம். அதுவும் நீங்கள் ஒரு மேக்கப் பிரியர் என்றால், கோடை வெயிலில் மேக்கப்பை பாதுகாப்பது பெரிய வேலையாக இருக்கும். ஷ்ஷ்ஷ்ப்பா... இந்த வெயில் மற்றும் வியர்வையில் மேக்கப்பை பாதுகாக்க முடியாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், மேக்கப்பை விரும்பும் அனைத்து பெண்களும் கோடை காலத்தில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய மேக்கப் டிப்ஸ்கள் இதோ....

டின்ட் மாய்ஸ்சரைசர்/சன் ஸ்கிரீன்:

மேக்-அப் அல்லது கன்சீலரை டின்ட் எனப்படும் நிறமுள்ள மாய்ஸ்சரைசர் அல்லது சன் ஸ்கீரின் கொண்டு சீல் செய்யலாம். கோடைகாலத்தில் சன் ஸ்கீரின் எவ்வளவு முக்கியமானது என்பது அனைவரும் நன்றாக அறிந்த ஒன்று, அதில் வண்ணமயமான கிரீம் அல்லது லோஷனை அப்ளே செய்வதன் மூலமாக சருமத்திற்கு பிரகாசமான தோற்றத்தை கொடுக்க முடியும்.

கன்னத்தையும் கவனியுங்கள்:

கோடை காலத்தில் சீக் மேக்கப் செய்வதன் மூலமாக பிரகாசமான உதடு மற்றும் கொழு கொழுப்பான கன்னத்திற்கான லுக்கை பெற முடியும். மேக்கப் போடுவதற்கு முன்னதாகவே கன்னங்கள், உதடுகள், கண் இமைகளை முன்னிலைப்படுத்தும் விதமாக ஒரு லைட் ஷேடோவை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

வாட்டர் ப்ரூஃப் மேக்கப்:

விலை சற்றே கூடுதலாக இருந்தாலும் வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா மற்றும் ஐ லைனர்களை வாங்கி, கைவசம் வைத்துக்கொள்ளுங்கள். இவை கையில் இருந்தால் கோடையிலும் மேக்கப் லுக்கை பராமரிக்கலாம். ஏனென்றால் வியர்வையால் மேக்கப் அழியாமல் காக்க வாட்டர் ப்ரூஃப் அழகு சாதன பொருட்கள் பயன்படுகின்றன. குறிப்பாக மஸ்காரா, ஐ லைனர்கள் வியர்வையால் கலைந்தால், அது ஒட்டுமொத்த மேக்கப்பையும் சிதைக்க கூடும். எனவே இந்த ஸ்மார்ட் மூவ் உங்களை தேவதையாய் ஜொலிக்க வைக்க உதவும்.



மினுமினுப்பான மேக்கப் வேண்டாம்:

கோடை காலத்தில் மினுமினுப்பான தோற்றத்தைத் தவிர்க்கவும். இயற்கையான மற்றும் நடுநிலையான தோற்றத்தை பெற வெண்கல நிற வண்ணங்களை தேர்ந்தெடுங்கள். குறிப்பாக மூக்கு, கன்ன எலும்புகள், புருவ எலும்புகள் என சூரிய வெளிச்சம் படக்கூடிய முகத்தின் உயரமான பகுதிகளில் வெண்கல வண்ணங்களை பயன்படுத்துவது, தோற்றத்தை மேலும் மெருகேற்ற உதவும்.

Also Read : முகத்தில் கரும்புள்ளிகள் உள்ளதா? இதை எளிதில் நீக்கக் கூடிய வீட்டு வைத்தியங்கள் இதோ!

கோடையில் குறைவான மேக்கப் போதும்:

கோடை காலத்தில் குறைவாக மேக்கப் போட்டுக்கொள்வது சருமத்திற்கு நல்லது. முகத்தில் மேக்கப்பை சமமாக பரப்பக்கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்துங்கள். இதனால் சூரிய ஒளி சருமத்தை தாக்குவதை தவிர்க்க முடியும். கோடை காலத்தில் சருமம் ஆரோக்கியமாக இருக்க, சூரியனின் புற ஊதாகதிர் வீச்சுக்களை எதிர்க்க கூடிய அழகு சாதன பொருட்களில் முதலீடு செய்யுங்கள்.

Also Read : இளமையான தோற்றம் வேண்டுமா..? இந்த மேக்கப் தவறுகளை செய்யாதீர்கள்..!

பவுண்டேஷன் இல்லாமல் கன்சீலர் பயன்படுத்துங்கள்:

கோடையில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால், அது உங்களுடைய மேக்கப்பை பொலிவிழக்க செய்யக்கூடும். மேக்கப் மூலம் வெயின் தாக்கத்தில் இருந்து முகத்தை காக்க விரும்பினால், கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை மறைக்க கன்சீலரை பயன்படுத்துவது நல்லது. இது இயற்கையாகவே உங்களது சருமத்துடன் இணைந்து, எந்த மேக்கப்பும் போடாதது போல் தோற்றமளிக்க உதவும்.
Published by:Selvi M
First published:

Tags: Beauty Tips, Skin Care, Summer tips

அடுத்த செய்தி