• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அதிகரிக்கும் பொடுகுத்தொல்லை அரிப்பு : இதற்கு என்னதான் தீர்வு..? இதை படியுங்கள்..!

அதிகரிக்கும் பொடுகுத்தொல்லை அரிப்பு : இதற்கு என்னதான் தீர்வு..? இதை படியுங்கள்..!

பொடுகுத்தொல்லை

பொடுகுத்தொல்லை

உங்கள் உச்சந்தலை வறண்டு, பொடுகுத்தொல்லை அல்லது உங்கள் தலையில் பேன் இருந்தால். குளிர்காலத்தில் பொடுகுத்தொல்லை அதிகமாக்கூடும்.

  • Share this:
உச்சந்தலையில் அரிப்பு என்பது வேர்களின் தோல் அழற்சி, பொடுகு போன்ற தோல் நிலைகளின் அறிகுறியாகும். இதை சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது கடுமையான முடி உதிர்வை ஏற்படுத்தும். உங்கள் உச்சந்தலை வறண்டு, பொடுகுத் தொல்லை அல்லது உங்கள் தலையில் பேன் இருந்தால்.

குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகமாக்கூடும். எனவே உடனடியாக தீர்வு காண்பது அவசியம். இதற்காக இன்ஸ்டாகிராமில் தோல் நிபுணர் டாக்டர் கீதிகா மிட்டல் குப்தா பொடுகை அகற்ற உதவும் ஆறு பொருட்களைப் பகிர்ந்துள்ளார்.

சைக்ளோபிராக்ஸ் : பூஞ்சையின் வளர்ச்சியை நிறுத்த உதவும் பூஞ்சை எதிர்ப்பு மருந்தாகும்.

சாலிசிலிக் அமிலம் : இது ஒரு பீட்டா ஹைட்ராக்ஸி அமிலம். இது சருமம் ஓர் இடத்தில் குவிந்து தோல் சிதைவதை தடுக்க உதவுகிறது மற்றும் செதில்களை அகற்ற உதவுகிறது.

ஜிங்க் பைரிதியோன் : இது பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அதோடு ஈஸ்டின் வளர்ச்சியைத் தடுக்கவும், உச்சந்தலையில் அரிப்புகளைப் போக்கவும் உதவுகிறது.

கெட்டோகோனசோல் : இது பூஞ்சை எதிர்ப்பு பண்பைக் கொண்டுள்ளது. இதனால் பூஞ்சை தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும் அவற்றை அழிக்கவும் பயன்படுகிறது.



சார்க்கோல் : சார்க்கோல் அழற்சி எதிர்ப்பு மற்றும் அரிப்பு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை பயன்படுத்தும்போது கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது முடி, தோல் மற்றும் துணிகளை கறைபடுத்தும்.

ஆர்னிகா எண்ணெய் : ஆர்னிகா எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை அரிப்பு மற்றும் வீக்கத்தை நீக்குகின்றன.

kushboo Sundar: ஆரோக்கியமாக வாழ நடிகை குஷ்பு பகிர்ந்த கொண்ட ரகசியம்

மேலே குறிப்பிட்டவை பொடுகுத்தொல்லையை நீக்கும் என்றாலும் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது நல்லது என்று டாக்டர் கீதிகா பரிந்துரைக்கிறார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: