முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கரும்புள்ளிகளை வீட்டிலேயே போக்குவது எப்படி..? ஈஸியான 6 டிப்ஸ்

கரும்புள்ளிகளை வீட்டிலேயே போக்குவது எப்படி..? ஈஸியான 6 டிப்ஸ்

கரும்புள்ளிகள்

கரும்புள்ளிகள்

முக அழகை பாதிக்கும் கரும்புள்ளிகள் இன்றைய டீன் ஏஜ் பெண்களின் பெரும் பிரச்சனையாக உள்ளன. அடிக்கிற வெயிலுக்கு என்ன தான் ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து பார்லர்களில் ஃபேஷியல், பிளீச் என செய்து கொண்டாலும், சரும பொழிவு நீண்ட நாட்களுக்கு நீடிப்பது சந்தேகமே.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோடை காலம் தொடங்கியாச்சி, உங்கள் சருமம் உணர்திறன் மிக்கது என்றால் எண்ணெய் பிசுபிசுப்பு, கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியாது. போதாக்குறைக்கு வெர்க் ப்ரம் ஹோம் வேலை கொடுக்கும் அதிக மன அழுத்தம், சரியான தூக்கமின்மை, ஹார்மோன் குறைபாடு, அதிக மாத்திரிகளை எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களும் சரும பிரச்சனைகளை உருவாக்குகின்றன.

முக அழகை பாதிக்கும் கரும்புள்ளிகள் இன்றைய டீன் ஏஜ் பெண்களின் பெரும் பிரச்சனையாக உள்ளன. அடிக்கிற வெயிலுக்கு என்ன தான் ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து பார்லர்களில் ஃபேஷியல், பிளீச் என செய்து கொண்டாலும், சரும பொழிவு நீண்ட நாட்களுக்கு நீடிப்பது சந்தேகமே. நாங்கள் சொல்லப்போகும் குறிப்புகளை பின்பற்றினால், காசையும், நேரத்தையும் கொட்டி கரும்புள்ளியுடன் இனி நீங்கள் போராட வேண்டிய அவசியம் இருக்காது.

எண்ணெய் மற்றும் இறந்த செல்களின் அடைப்பால் சருமத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை ஓட, ஓட விரட்ட வீட்டிலேயே கிடைக்கும் இந்த 6 பொருட்களை பயன்படுத்தினாலே நல்ல பலன் கிடைக்கும்.

1. பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா சமையலுக்கும், சுத்தப்படுத்தும் பணிகளுக்கு மட்டுமல்ல உங்கள் சருமத்தை பொலிவாக்கவும் பயன்படுகிறது. பேக்கிங் சோடாவில் உள்ள ஆண்டிசெப்டிக் பண்புகள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை ஸ்க்ரப் செய்து அகற்றி, மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை பெற உதவுகிறது. பேக்கிங் சோடா சருமத்தின் pH ஐ நடுநிலையாக்க உதவுகிறது, இது சருமத்தை குறைந்த எண்ணெயை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கிறது

2. பட்டை:

இலவங்கப்பட்டை எனப்படும் பட்டை ஒரு பாக்டீரியா எதிர்ப்பு பொருளாகும். இது நறுமணம் மிக்க ஃபேஸ் மாஸ்க்குகளை உருவாக்க உதவுகிறது. அது கரும்புள்ளிகளை அகற்றுவது உட்பட சருமத்திற்கு பல வகையான நன்மைகளையும் தருகிறது. இறந்த செல்கள் மற்றும் முகப்பருவை நீக்க உதவுகிறது.

3. தேன்:

தேன் சருமத்தின் மீது ஒரு இயற்கையான ஆன்டிபயோடிக்காக செயல்படுகிறது. முகப்பரு தொடர்பான கரும்புள்ளிகள் உள்ளவர்களுக்கு தேன் மற்றொரு சிறந்த தேர்வாக அமைகிறது. ஏனெனில் தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கான கிருமி நாசினியாக செயல்பட்டு, கிருமிகள் அல்லது துளைகளை அடைக்கும் அசுத்தங்களை அழிக்கிறது, இதன் மூலம் கரும்புள்ளிகளை அகற்றகிறது. தேனில் உள்ள ஆண்டிபயாடிக் தன்மை, சருமத்தின் துளைகளில் உள்ள அழுக்குகளை அகற்றி, கரும்புள்ளிகளை அழிக்க உதவுகிறது, மேலும் பளிச்சிடும் சருமத்தை பெறவும், ஈரப்பதற்கிற்கும் பயன்படுகிறது.

பெண்கள் பிரா அணிவது அவசியமா..? பிரபல பெண் மருத்துவர் விளக்கம்..!

4. எப்சம் உப்பு:

இது நாம் உணவில் பயன்படுத்தும் சாதாரண சோடியம் குளோரைடு அல்ல. இது மக்னீசியம், சல்பேட் போன்றவற்றின் கலவையாகும். இது மளிகை கடைகளில் அல்ல, மருத்துக் கடைகளில் தான் கிடைக்கும். ஏனென்றால் இந்த உப்பு பல மருத்துவ பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. புண் தசைகளை குணப்படுத்துவது, கரும்புள்ளிகளை அகற்றுவது, இறந்த செல்கள் மற்றும் சரும துளைகளை படித்திருக்கும் அழுக்கை அகற்றுவதற்கு உதவுகிறது.

5. முட்டையின் வெள்ளைக்கரு:

முட்டையின் வெள்ளைக்கரு சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. அவற்றில் நிறைந்துள்ள புரதம், சரும சுருக்கம் போன்ற பிரச்சனைகளை மேம்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. தளர்வான சருமத்தை இறுக்கமடைய வைப்பது, துளைகளை அடைப்பது போன்றவற்றையும் செய்கிறது. முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்துவது எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது.

6. கிரீன் டீ:

ஃபேஸ் மாஸ்க் போன்ற சிகிச்சைகளில் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள கிரீன் டீயை பயன்படுத்தினாலே போதும். இது சருமத்தில் எண்ணெய் மற்றும் எரிச்சலைக் குறைப்பது மட்டுமல்லாது, எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் சருமத்தை பராமரிக்க உதவுகிறது.

First published:

Tags: Beauty Tips, Black Spots, Home remedies