முகம் பொலிவு இல்லாமல் இருக்கிறதா? நீங்கள் செய்யும் 5 தவறுகள் 

முகம் பொலிவு இல்லாமல் இருக்கிறதா? நீங்கள் செய்யும் 5 தவறுகள் 

முகப்பொலிவு

முதலில் நீங்கள் செய்யும் தவறுகளை கண்டுபிடிப்பது, உங்களின் முகப்பொலிவை அதிகரிப்பதற்கான முக்கியமான விஷயம் என்பதால், நீங்கள் செய்யும் தவறுகளை இங்கே அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.  

  • Share this:
ஒவ்வொருவருக்கும் முகம் பொலிவாக, அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதற்காக செய்ய வேண்டிய சில வழிமுறைகளை செய்கிறோமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒரு சிலர் முகத்தை கழுவினாலும், சுத்தமாக செய்யமாட்டார்கள். பேஷ்வாஷை பயன்படுத்தி கழுவும்போது முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுகள், கரும்புள்ளிகள் மறையும். ஆனால், முறையாக செய்தால் மட்டுமே அதற்குரிய பலனும் கிடைக்கும். சிலருக்கு நாம் என்ன தவறு செய்கிறோம் என்பதுகூட தெரிவதில்லை. முதலில் நீங்கள் செய்யும் தவறுகளை கண்டுபிடிப்பது, உங்களின் முகப்பொலிவை அதிகரிப்பதற்கான முக்கியமான விஷயம் என்பதால், நீங்கள் செய்யும் தவறுகளை இங்கே அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.  

மேக்கப் : 

உங்களின் மேக்கப்பை கலைக்கும்போது, டோனர் பயன்படுத்திய காட்டன் துணியைக் கொண்டு முகத்தை சுத்தமாக துடைக்க வேண்டும். அப்போது, மேக்கப் இருந்தால், முகத்தை நீங்கள் சுத்தமாக கழுவவில்லை. எப்போதும் மேக்கப்பை கலைக்கும்போதும் எண்ணெய் அல்லது தைலம் சார்ந்த கிளீனர்களை பயன்படுத்த வேண்டும். அவை உங்களின் மேக்கப்பை சுத்தமாக அகற்ற உதவும். இல்லையென்றால், ஏற்கனவே இருக்கும் மேக்கப் உங்கள் முகத்தில் தேங்கி, தோலை பாதித்து அசிங்கமான தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

மேக்கப் யூசேஜ் : 

உங்களின் முகத்தை சுத்தமாக வைத்திருக்கவில்லை என்றால் மேக்கப் அப்ளை செய்யும்போது, அவை தோலுடன் ஒன்றி அழகை கொடுக்காது. அதனால், நீங்கள் என்ன கிரீமை பயன்படுத்தினாலும் பிரயோஜனமில்லை. ஏற்கனவே பயன்படுத்திய மேக்கப் உங்கள் முகத்தில் தோலில் தேங்கி, உங்களின் ஒப்பனைக்கு தடையாக இருக்கும். அவற்றை முறையாக அகற்றாத வரை, உங்களை அழகுபடுத்திக்கொள்ள எடுக்கும் முயற்சி பலனளிக்காது.

இறுக்கமான தோல் : 

உங்கள் முகத்தை நாள்தோறும் சுத்தம் செய்தாலும், எப்போதும் பார்ப்பதற்கு சோர்வாக இருந்தால், நீங்கள் சரியான பேஷ் கிளீனரை (Face Cleaner) பயன்படுத்தவில்லை என்று அர்த்தம். இதனால் இறந்த செல்கள் வெளிப்புற தோலில் தேங்கி, முகத்தை இறுக்கமாக வைத்திருக்கின்றன. முதலில் நீங்கள் முழுமையாக பேஷ்வாஷ் செய்ய வேண்டும். பின்னர், முகம் பொலிவாக இருப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றினால் மட்டுமே இறந்த செல்களை அகற்ற முடியும்.

சரும பாதிப்பு மற்றும் எரிச்சல் : 

முகத்தை சுத்தம் செய்யும்போது ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படும். ஒரு சிலருக்கு சருமத்தில் பாதிப்புகள் உண்டாகும். அவற்றுக்கு முக்கிய காரணம் என்னவென்றால், முகத்தை கழுவும்போது அதிகமாக அவர்கள் தேய்த்து கழுவியிருப்பார்கள் அல்லது அதிகப்படியான மேக்கப் கிரீம்களை பயன்படுத்தியிருப்பார்கள். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது உங்கள் முகத்தின் வெளிப்புற தோலில் பாதிப்பு ஏற்பட்டு எரிச்சல் மற்றும் சரும பாதிப்புகள் உண்டாகும்.

எண்ணெய் அல்லது வறட்சியான தோல் : 

உங்கள் முகத்தின் தோல் அடிப்படையில் மட்டுமே மேக்கப் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருந்தால், தோலில் இருக்கும் எண்ணெய்யை அகற்றும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். வறட்சியான தோல் என்றால், அதற்கேற்ப மேக்கப் கிரீம்களை பயன்படுத்தலாம். இதனை மாற்றி செய்யும்பட்சத்தில் வறட்சியான முகம் மேலும் வறட்சியாகவும், எண்ணெய் படிந்த முகம் மேலும் எண்ணெய் படிந்தவாறு இருக்கும்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: