ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமம் வேண்டுமா... இந்த ஸ்கின்கேர் டிப்ஸ்களை ட்ரை பண்ணலாம்!

ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமம் வேண்டுமா... இந்த ஸ்கின்கேர் டிப்ஸ்களை ட்ரை பண்ணலாம்!

மாதிரி படம்

உங்கள் சருமத்தை நீங்கள் ஹைட்ரேட்டாக வைத்திருக்கவில்லை என்றால் அது உங்கள் நிறத்தை வறட்சியாக்கும். மேலும் வயதான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற ஆரம்ப அறிகுறிகளுக்கும் அது வழிவகுக்கும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
"ஆள் பாதி ஆடை பாதி" என்பது முதுமொழி. அது ஒருபுறம் இருக்கட்டும்... டாப் டக்கர், உடைகளை அணிவதால் மட்டுமே ஒருவருக்கு அழகு கூடிவிடுமா? நம் முகமும் சருமமும் கொஞ்சமாவது மிளிர்ந்தால்தானே அந்த ஆடையுடன் அழகைக்கூட்ட முடியும்? ஒருவருடைய முகத்தை வைத்து அவரின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ளலாம். இதைத்தான் "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள்.

அப்படிப்பட்ட நம் முகம், சருமம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பின்வரும் குறிப்புகளை நம் வாழ்நாளில் வழக்கமாக்கிடவேண்டும். நம்மில் பலருக்கும் நம் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது ஒருவித மோசமான உணர்வு இருக்கும். காரணம் நாம் ஆரோக்கியமான உணவையோ சரும கவனிப்பையோ மேற்கொள்வதில்லை. வருத்தம் வேண்டாம், பின்வரும் தோல் பராமரிப்பு முறைகளை நீங்கள் பின்பற்றினால் போதும், இனி அடிக்கடி கண்ணாடியை பார்த்து உங்களை நீங்களே ரசிப்பீர்கள். 

முதலில் பிரச்சனைகளை கண்டறியுங்கள்: 

முதன் முதலில் உங்கள் சருமத்தில் இருக்கும்  சிக்கல்களை பட்டியலிடுங்கள். உதாரணமாக முகத்தில் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் அல்லது வறண்ட சருமத்தில் வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் முதலில் அதை ஒரு பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். சிலருக்கு முகத்தில் தழும்புகள் கூட இருக்கும். அதிகமான முகப்பருக்கள் முகத்தின் அழகையே கெடுக்கும் இவை அனைத்தையும் முதலில் நீங்கள் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

உங்கள் தோல் வகையை அறிந்து கொள்ளுங்கள்:

உங்கள் சருமத்திற்கு திறம்பட சிகிச்சையளிக்கவும், ஆரோக்கியமான பளபளப்பை அடையவும், உங்கள் தோல் என்ன வகை என்பதை அறிந்து கொள்வது அவசியம். எண்ணெய் சருமமா, உலர் சருமமா அல்லது கலவையா என தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. இது உங்கள் தோல் வகைக்கு எந்த வகையான தோல் பராமரிப்பு பொருட்கள் பொருந்தும் என்பதைப் புரிந்து கொள்ள உதவும். உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால், சீரம் போன்ற ஒட்டும் அல்லாத ஒளி நீரேற்ற தயாரிப்புகளை பயன்படுத்தலாம். முகப்பரு பாதிப்புக்குள்ளானவர்கள், சாலிசிலிக் அமிலத்துடன் தயாரிப்புகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறார்கள். வறண்ட சருமம் உடையவர்கள், ஹைலூரோனிக் அமிலத்தை பயன்படுத்த வேண்டும்.

எந்தெந்த தயாரிப்புகளை பயன்படுத்தலாம்:

நம் சரும வகைக்கு ஏற்ற மாதிரியான தயாரிப்புகளை பயன்படுத்துவது முக்கியம். டிவி விளம்பரங்களில் காண்பிக்கும் பல பிராண்டுகளை பயன்படுத்தினால் நிச்சயம் முகத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு, முகமே ஒரு வழி ஆகிவிடும். TVல் விளம்பரப்படுத்துவது எல்லாம் உங்கள் முகத்திற்கு செட் ஆகிவிடும் என்று நீங்கள் நினைப்பது தவறு. ஒரே ஒரு நோக்கத்திற்காக மட்டுமே வேலைசெய்யும் முக தயாரிப்புகளை முதலில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், அதற்கு பதிலாக ஆல்-ரவுண்டர் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள். 

எடுத்துக்காட்டாக, ஈரப்பதத்தை சீரம் மூலம் மாற்றவும். சீரம் என்பது ஒரு ஆல்ரவுண்டர் ஆகும், இது உங்கள் சருமத்தின் நீரேற்றத்திற்கான தேவையை எளிதில் பூர்த்திசெய்து, மென்மையான சருமத்தை அளிக்கும். சீரம் தயாரிப்பு சிறிய மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது, அவை முக கிரீம்கள் அல்லது மாய்ஸ்சரைசர்களால் கூட செய்ய முடியாததை செய்யும். இது வைட்டமின் C, ஹைலூரோனிக் அமிலம் மற்றும் சாலிசிலிக் அமிலத்தை கொண்டுள்ளதால் இவை சருமத்தில் ஆழமாக செல்கிறது, மேலும் இது உங்கள் சருமத்தை ஹைட்ரேட்டுடன் வைக்கிறது. இதுபோன்ற தயாரிப்புகள் கருமையான புள்ளிகளை நீக்கவும் செய்கிறது.

பட்ஜெட்:

நாளைக்கே வெள்ளையாகி விட வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான வழிமுறைகளை சரியான அணுகுமுறையுடன் அணுகுவதில்லை. உதாரணமாக ஒருவருக்கு திருமணம் இன்னும் ஆறு மாதத்தில் நடக்க இருக்கிறது என்றால் இப்போதே முகத்தை அழகுபடுத்தும் பணிகளில் ஈடுபடவேண்டும். பலரும் இதை நினைவில் கொள்ளாமல் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு அல்லது இரண்டு நாட்களுக்கு முன்புதான் பிரைடல் மேக்கப் காஸ்ட்லி பிரைடல் மேக்கப், பிரைட் பிரைடல் மேக்கப் போன்ற பலவிதமான காஸ்ட்லி மேக்கப்களை தேடி ஓடுவார்கள். இதனால் காசுதான் காலியாகும். 

செயற்கையான செய்முறைக்கு கொஞ்ச நாள் தான் வேலிடிட்டி மாறாக இயற்கைமுறையில் செய்யப்படும் முன்னெடுப்புகள் நீண்ட நாட்களுக்கு பலனை தரும். உதாரணமாக தக்காளி சாற்றை முகத்திற்கு பயன்படுத்தலாம். அதிக தண்ணீர் குடிக்கலாம். தயிர் மஞ்சள் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து தினமும் ஃபேஸ் பேக் போட்டுக் கொள்ளலாம் அல்லது உங்கள் தோலுக்கு சூட்டாகும் பெஸ்ட் அண்ட் ஆல்ரவுண்டர் கிரீம்களை பயன்படுத்தலாம்.  இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நல்ல பலனை தரும் அதைத் தொடர்ந்து செய்வது முக்கியம்.

சருமத்தை நீரேற்றமாக வைத்திருங்கள்:

உங்கள் சருமத்தை நீங்கள் ஹைட்ரேட்டாக வைத்திருக்கவில்லை என்றால் அது உங்கள் நிறத்தை வறட்சியாக்கும். மேலும் வயதான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற ஆரம்ப அறிகுறிகளுக்கும் அது வழிவகுக்கும். காலையிலும், இரவிலும் சருமத்தை ஹைட்ரேட் செய்வது சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கும். ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும். வறண்ட சருமம் இருப்பவர்கள் பசும் பாலை தினமும் இரவு முகத்திற்கு தடவி வர முகம் எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருக்கும்.

Also read... முகப்பரு தொல்லையா? வெங்காயத்தோல் போதும் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணலாம்!

உணவில் மாற்றம் அவசியம்:

நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் சருமத்திலும் பிரதிபலிக்கிறது. இயற்கையான பளபளப்புக்கு, உங்கள் உணவில் நல்ல அளவு ஆக்ஸிஜனேற்றங்களைச் சேர்க்கவும். திராட்சை, பெர்ரி, நட்ஸ்கள் போன்ற உணவுகளைச் சேர்க்கவும். ஃப்ரீ ரேடிக்கல்களை தடுக்க அவை உதவுகின்றன, அவை ஆரோக்கியமான தோல் செல்களை சேதப்படுத்தும். தொன்று தொட்ட முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: