ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் அவசியமா..? தவிர்த்தால் என்ன ஆகும்..?

குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் அவசியமா..? தவிர்த்தால் என்ன ஆகும்..?

சன்ஸ்க்ரீன்

சன்ஸ்க்ரீன்

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 80 சதவீத புற ஊதா கதிர்களை பனி அதிகளவில் பிரதிபலிக்கிறது. இந்த சூழலில் வெயிலைத் தேடி நீங்கள் செல்கிறீர்கள் என்றால், அரை மணி நேரத்திற்கு முன்னதாக சன்ஸ்கிரீன் அப்ளே செய்யுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

“சன்ஸ்கிரீன்“ என்ற வார்த்தையை நாம் வெயில் காலங்களில் தான் அதிகளவில் கேள்விபட்டிருப்போம்.. தோல் வறட்சியாக உள்ளதா? கோடைக்காலத்தில் வெளியில் போகும் போது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள் என்ற அறிவுரையைப் பலர் சொல்வது வழக்கம். அதே சமயம் குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் எதற்கு? வேண்டாம் என்று பலர் சொன்னாலும் ஏற்காதீர்கள்.

வெயில் காலத்தில் எந்தளவிற்கு உபயோகிக்கிறோமோ? அதே அளவிற்கு குளிர்காலத்தில் சன்ஸ்கிரீனை எவ்வித அச்சமும் இன்றி உபயோகிக்கலாம். பொதுவாக குளிர்ந்த காலநிலையின் போது புற ஊதா கதிர்கள் தீவிரமாக இருக்கும் என்பதால் உங்களது சருமத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்…

புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாத்தல்: பொதுவாக கோடைக்காலத்தில் வெயிலில் செல்வதற்கு முன்னதாக சன்ஸ்கிரீன் அணிவது வழக்கமான ஒன்று. இதனால் தோல் கருமையாகுதல் மற்றும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதே போன்று தான் குளிர்காலத்திலும் சன்ஸ்கிரீன் நமது சருமத்தைப் பாதுகாக்கிறது.

குளிர்காலத்தில் ஓசோன் படலம் மிக மெல்லியதாகவுள்ளது. அதாவது புற ஊதா கதிர்களை குறைவாக உறிஞ்சுகிறது. இதனால் தோலில் யுவி கதிர்வீச்சுகள் சருமத்திற்குத் தீங்கு விளைவிக்கும். இந்நிலையில் தான் இதுப்போன்ற சரும பிரச்சனையைத் தவிர்க்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறோம்.

குளிர்காலத்தில் ஈரப்பதம் மற்றும் கடுமையாக குளிர்காற்று வீசுவதால் தோல் சீக்கிரமாகவே வறண்டு போகிறது. இதோடு சிலருக்கு விரிசல், சுருக்கங்கள், சரும வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே குளிர்காலத்திலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தைப் பராமரிக்க உதவுகிறது.

கோடைக்காலத்தைப் போன்று குளிர்காலத்திலும் புற ஊதா கதிர்கள் வெளிப்படும் ஆபத்து மிக அதிகமாக இருக்கும். இந்நேரத்தில் சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் போது, தேல் செல்களில் உள்ள டிஎன்ஏவை சேதப்படுத்துவதோடு தோல் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. சரும செல்கள் சேதமடையும் அபாயத்தையும் குறைக்கிறது.

Also read : வேக்ஸிங் செய்யும் முன் மணப்பெண் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன..?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 80 சதவீத புற ஊதா கதிர்களை பனி அதிகளவில் பிரதிபலிக்கிறது. இந்த சூழலில் வெயிலைத் தேடி நீங்கள் செல்கிறீர்கள் என்றால், அரை மணி நேரத்திற்கு முன்னதாக சன்ஸ்கிரீன் அப்ளே செய்யுங்கள். இது உங்களது சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

எனவே கோடைக்காலத்தில் மட்டும் இல்லை குளிர்காலத்திலும் உங்களது சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். அதே சமயம் உங்களது சருமத்தை வெயில் மற்றும் குளிரிலிருந்து 100 சதவீதம் பாதுகாப்பை வழங்கும் சன்ஸ்கிரீன் இல்லை என்றாலும் அதற்கு மாற்றாக உள்ள சன்ஸ்கிரீனை நீங்கள் உபயோகிக்கலாம். அதிக SPF எண் கொண்ட சன்ஸ்கிரீன் உங்கள் சருமத்திற்கு சிறந்தப் பாதுகாப்பை வழங்குவதாக அறியப்படுகிறது. எனவே SPF 30 க்கும் அதிகமான பரந்த-ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனை அணிய பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Sunscreen, Winter